ஜுவின் கதை | பால் சக்காரியா


ஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராமு உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஜுவின் கதை

🖋ஆசிரியர் – பால் சக்கரியா
🖌 ஓவியம் – அஸ்மா மேனன்
🖋 தமிழாக்கம் – சங்கர ராம சுப்ரமணியன் (English)
🖨 பதிப்பு – Tulika Publishers, Chennai 2007.

நூலக முன்பதிவு

  • NLB
  • கன்னிமாரா (தளம் திறக்கவில்லை)
ஜுவின் கதை
ஜுவின் கதை

ஜூ ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி. நோட்டுப் புத்தகம் தீரக்கூடாது என்பதற்காக நுணுக்கி எழுதுவாள். ஜு ஒரு வயதாக இருக்கும் போதே அவளுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் ஒரு டெய்லர்.

அவளை யாரும் ஏழை என்று கிண்டல் செய்யவில்லை. அலி ஜு அப்பாவின் நண்பர். அவர் அவளுக்கு இலவசமாக புதுத் துணி தைத்துத் தந்தார். ஒரு பாட்டி அவள் மிக அழகாக இருப்பதாக என்று சொன்னார்.

ஜுவின் கதை

அம்மா ஜூவிற்குப் பழைய பாட புத்தகங்கள் பெற்றுத் தந்தாள். அதில் ஒரு அஞ்சல் உறை இருந்தது. அந்தப் புத்தகத்தை வைத்திருந்தவள் பெயர் சரோஜினி. தபால் என்றால் ஜுவிற்கு மிகவும் பிடிக்கும். யாரும் அவளுக்கு தபால் அனுப்புவதில்லை. தனக்கும் தபால் வரவேண்டும் என்று அவளுக்கு ஆசை.

அந்தத் தபால் அவளிடம் போய் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜுவின் அம்மா வீடுகளில் வேலை செய்து பாடுபட்டாலும், மகள் படிக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருக்கிறாள்.

at INS Kamorta of Indian Navy

எல்லாரும் இந்தக் காலத்தில் காசு வாங்கிக் கொண்டுதான் ஏதாவது செய்வார்கள். நண்பர் மகளுக்காக அவர் இலவசமாக புதுத்துணி தைத்துத் தருகிறாள். அவருக்குப் பெரிய மனது.

ஜு தாமதமாகப் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்பதற்காக தபால் காரர் அந்தக் கடிதத்தை அவரே சரோஜினியிடம் கொடுப்பதாகக் கரிசனத்துடன் சொன்னார்.

அன்பு உள்ளம் கொண்டவர்களின் கதை இது. தமிழில் அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

இனிய கோடை விடுமுறை வாழ்த்துக்கள். நானும் ஊருக்குப் போகிறேன். பிறகு சந்திக்கலாம்.

அன்புடன்
கண்ணன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s