ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு


குருக்‌ஷேத்திரப் போரின் முதல் நாளில் குலாட இளவரசர் ஸ்வேதன் வீர மரணம் அடைந்தார்.

விராடருக்கு குலாட அரசியில் மகனாகப் பிறந்த மூத்தவர். அர்ஜுனரை மனதில் ஆசிரியராக வரித்தவர். தன் இளவல் சங்கனின் வற்புருத்தலை ஏற்று படைகளுடன் பாண்டவர்களுக்கு ஆதரவளித்து படைமுகம் கண்டவர்.

தன் குலாட குடிக்கு உகந்த புகழ் வாங்கித்தர நினைத்தவர். முதல் நாள் போரின் முப்புரி சூழ்கையில் ஒரு புரிக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். வில் திறனால் உபகௌரவர்கள், பூரி சிரவஸை செறுத்து நின்றவர். படு கொலை எந்திரமாக வெறியாட்டு எழுந்த பீஷ்மரின் தோளில் அம்பு எய்து ஒரு கையையை செயல் இழக்கச்செய்தவர். இறுதியில் இவரை வீழ்த்த பீஷ்மர் தன் காலால் வில்லைப் பிடித்து எஞ்சிய ஒரு கையில் அம்பைச் செலுத்தி தாக்கியதில் அம்பு பாய்ந்து விண்புகுந்தார்.

வெண்முரசு பயணத்தில் சில தூரமே உடன் வந்தீர். எண்ணவொன்னா தீரத்தை எமக்குக் காட்டி விண்புகுந்தீர் ஸ்வேதரே! கடைசி பெஞ்சின் அஞ்சலிகள்

2 thoughts on “ஸ்வேதன் – அஞ்சலி குறிப்பு

Leave a comment