Joy


ஜாய் ஒரு விமான கம்பெனியில் கிளார்க் ஆகப் பணி செய்கிறாள். இரு குழந்தைகளின் தாய்.  டிவியில் மூழ்கிக் கிடக்கும் விவாகரத்தான அம்மா; மூன்று முறை விவாகரத்தான அப்பா ரூடி; அப்பாவின் முதல் திருமணத்தின் மூலம் வந்த வெறுப்பேற்றும் சகோதரி பெக்கி, விவாகத்தானாலும் ஜாய் வீட்டு அடித்தளத்திலேயே வசிக்கும் முன்னாள் கணவன் டோனி என்று சிக்கலான ஒரு குடும்பத்தில் உழல்கிறாள். போதாக்குறைக்கு மூன்றாவது முறையும் விவாகரத்தாகி, மகள் வீட்டுக்கு ‘எக்ஸ்ட்ரா லக்கேஜ்’ ஆக டேரா போடுகிறார் அப்பா ரூடி.

Joy - Picture credit https://mikeysmarvellousmedicine.com
Joy – Picture credit https://mikeysmarvellousmedicine.com

கண்டுபிடிப்பில் ஆர்வம் மிக்க ஜாய் இந்த அவதிகளில் தன் கனவுகளைப் பறிகொடுக்கிறாள். அதிலிருந்து அவளுடைய கனவு வாழ்க்கை வாழ உக்குவிக்கிறார்கள் பாட்டி மிமியும் அவளது சிறிவயது தோழி ஜாக்கி.

வழக்கமான தரை துடைக்கும் துடைப்பானை பயன்படுத்தும்போது அதில் கடுப்பாகி, தானே புதிய நவீன துடைப்பான் ஒன்றினை வடிவமைக்கிறாள் ஜாய் – ‘தானிருக்கி தரை துடைப்பான்’. அதைத் தயாரித்து விற்க நினைக்கிறாள்.  அவள் தந்தை ரூடி யின் புதிய பெண் தோழி ட்ருடி பணம் தர முன் வருகிறாள்.

ஜாய் கண்டுபிடிப்பிற்குக் குறைந்த விலையில் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுகின்றனர். இதேபோன்ற தானிருக்கி துடைப்பானின் காப்புரிமை ஹாங்காங் விஞ்ஞானி வருத்தரிடம் இருப்பதாகவும், அவருடைய அமேரிக்கப் பிரதிநிதிக்கு 50ஆ டாலர்களை காப்புப்பணமாக அளிக்கச் சொல்கிறது இந்த உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனம்.

joy-movie-j-law

சில்லரை வர்த்தக நிறுவனமான க்யூ.வி.சி யின் நிர்வாகி நீல் வாக்கரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறான் முன்னாள் கணவன் டோனி. கார்ப்பரேட்டிடம் போராடி தனக்கான இடத்தைத் தேடுகிறாள் ஜாய். அதில் தோல்வி. பிறகு வெற்றி. அதைத் தொடர்ந்து வரும் துரோகம், மோசடி, இழப்பு என்றி வெற்றிக்கான படிகளைக் காட்டும் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் Joy.

உறவுச் சிக்கல் மிகுந்த சூழலில் டோனி உடனான ஜாய் உறவு, பணம் என்றால் பேயாய் பறக்கும் வியாபார உலகம், இறக்கமே இல்லாமல் bankruptcy யில் தள்ளிவிடும் சுற்றம் என்று இதில் காட்சிகள் நம்பத் தகுந்ததாகிருக்கின்றன.

‘எனக்கு கண்டுபிடிக்கத் தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால் தினசரி வீட்டைப் பெருக்குகிறேன். நான் இதைச் செய்தேன். எனக்குத் தெரியும், வேறெந்த துடைப்பானை விடவும் என்னுடைய துடைப்பான்  சிறந்தது  எனக்கொரு வாய்ப்பு கொடு’ என்று ஜாய் நீல் இடம் போராடும் காட்சி – அழுத்தம்.

Joy - Picture credit - https://mikeysmarvellousmedicine.com
Joy – Picture credit – https://mikeysmarvellousmedicine.com

காப்புரிமை வக்கீல், ட்ருடி மற்றும் தந்தை, காப்புரிமை பிராடு ஏஜெண்ட் என்று எல்லாரும் சேர்ந்து அவளுடைய நிறுவனத்தை மூட நிர்பந்திக்கும் நேரம், மனம் நொந்து தன் வடிவமைப்பு படங்களை எல்லாம் கிழித்தெரிந்து மனம் பேதலிக்கும் காட்சி – வருத்தம்.

பலம்:

 • நேர்மையான, நம்பும் படியான கதை
 • ஜெனிஃபர் லாரன்ஸ்

பலவீனம்:

 • இழுத்தடிக்கும் திரைக்கதை (சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டதனால்)

படம் பார்க்க:

Prime: https://www.amazon.com/Joy-Jennifer-Lawrence/dp/B019SG48W2

Itunes: https://itunes.apple.com/us/movie/joy/id1068333966

நடிப்பு

 • அமேரிக்க கண்டுபிடிப்பாளர் ஜாய் மாங்கானோ ஆக Jennifer Lawrence
 • தந்தை ரூடி ஆக Robert De Niro
 • QVC நிர்வாகி நீல் வாக்கராக Bradley Cooper
 • ஜாய் முன்னாள் கணவர் டோனியாக mírez
 • ஜாய் பாட்டி மிமியாக  Diane Ladd
 • சிறந்த தோழி ஜாக்கியாக Dascha Polanco
 • ரூடியின் மூத்த தாரத்து மகள் பெக்கியாக Elisabeth Röhm
 • ஜாய் தாயார் டெரியாக Virginia Madsen
 • ரூடியின் நான்காம் பெண் தோழி மற்றும் ஜாய்க்கு பண உதவி செய்த ட்ருடியாக Isabella Rossellini

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s