அந்தத் தருணத்திற்குரியவற்றைப் பதிய வைக்கும் புகைப்படம் ஒரு கவிதை. ஒரே தருணம் மாறுபட்ட சலனங்களை வெவ்வேறு நபர்களிடம் ஏற்படுத்தும். அந்தத் தருணம் ஏற்படுத்திய சலனத்தை, மொழியின் சமநிலையைச் சற்று அசைத்துப் பதிய வைக்கும்போது, அந்தக் கவிதை சுவை மிகுந்ததாகிறது.
வான்வெளியில் ப்ரகாசிக்கும் ஒரு பொருளைக் காண வரைபடம் எதற்கு? வானமோ இரு மண்துகளுக்கிடையிலும் இருக்கிறது. (வரைபடங்கள்)
நீரின் மேற்பரப்பில் ஒரு மீன் துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால். மேலும் ஒரு துள்ளலில் மரணம். மரித்த கணமே பறவை. (துள்ளல்)
... எனவே தான் இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை என்றாலும் நான் அங்கே ஓர் வீடு கட்டி முடித்து வைத்துள்ளேன். (மாற்றப்படாத வீடு)
கட்டிப் பிடித்து முத்தமிடவா முடியும்; ஒரு காபி சாப்பிடலாம், வா. (ஒரு காதல் கவிதை)
கனம் கொண்டீரேல் மண்ணின் தாகம் தீர்க்கிறீர். இல்லையெனில் கதிரவன் கொய்து உண்ணும் கனிகளாகிறீர். (மழைத் துளிகள்)
32 கவிதைகள் கொண்ட கவிதைத் தொகுப்பு. செவ்விழை கலையாத நன்னாரி சர்பத் போன்று!
மாற்றப்படாத வீடு (கவிதைத் தொகுப்பு)
கவிதை: தேவதேவன்
பதிப்பு: முதல்பதிப்பு ஜுன் 1984, எஸ்பியார் புக்ஸ், தூத்துக்குடி.
NLB: காணவில்லை.
கன்னிமாரா: காணவில்லை.
இனியுமொரு பதிவில் சந்திக்கும் வரையில், நலமே விளைக.
இரா.மு.