எந்த அமைப்பை உருவாக்கினாலும் முதலில் இடர்கள் எழுந்து வரும். முறையீடுகள் பெருகும். அவை நன்று. அந்த இடர்களுக்கு நாம் அளிக்கும் செல்வழிகள், தீர்வுகள் வழியாகத்தான் இவ்வமைப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நெறிகள் உருவாகி வருகின்றன. #வெண்முரசு #கயாநிநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71பகுதி ஏழு : பெருசங்கம் – 3
களிற்றியானை நிறை
ஆசிரியர் : ஜெயமோகன்
இணையத்தில் படிக்க : நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 1
தென்னகத்தில் ஆதன் மூலம் தொடங்கும் கதை. அஸ்தினபுரியின் கலிதேவன் ஆலயத்தில் திரௌபதிக்கு அவன் பூஜை செய்வதில் நிறைவடைகிறது.
சர்வ நாசம் விளைந்த ஒரு போருக்குப் பிறகு, அவற்றை உதிர்த்துவிட்டு எழும் அஸ்தினபுரியைக் காட்டுகிறது களிற்றியானை நிரை நாவல். வெண்முரசு நாவல் வரிசையின் இருபத்தி நான்காவது பெரு அத்தியாயம். அடுத்த தலைமுறை தலைவர்கள், ஆளுநர்கள் உருவாகி வருகின்றனர். திசைக்கொரு புரவியை எடுத்துச் சென்ற பாண்டவர்கள் பாரதத்தை அஸ்தினபுரியின் ஆளுகையின் கீழ் கொண்டு வருகின்றனர். துவாரகையின் மண் பூசல் பெறுகுகிறது. பீஷ்மர் மண் நீங்குகிறார். ராஜசூயம் யாகம் நடத்துகிறார் யுதிஷ்டிரர்.
இந்த நாவலின் சுவை மிகுந்த பகுதிகள் பற்றி இதில் பேசியிருக்கிறேன்.
சுரேசர் – சம்வகை – யுயுத்சு கூட்டணியில் நகர புணரமைப்பு
பொருளாதார ரீதியாக போரில் நசிவுற்ற அஸ்தினபுரியை ஒரு சில அனுமானத்தில் வாயிலாக மீட்டெடுக்கிறார்கள் இந்த மூவர். அமைச்சர் சுரேசர் தலைமை ஏற்க, அவற்றை சம்வகை, யுயுத்சு செயல் படுத்துகின்றனர்.
அரசு என்பது ஏற்கப்பட்ட திருட்டு. கொடுப்பவரும் ஒப்புகையில் அரசு நிலைகொள்கிறது. எந்த அரசும் கொள்ளையாக மாறும் வாய்ப்புள்ளதுதான். #வெண்முரசு #கயாநி
நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 22
ஒரு நகரம் மீண்டெழுவதும், மக்களின் மன ஓட்டத்தின் மீது, சுரேசருக்குள்ள அனுமானமும் நாவலை வாசிக்கத் தூண்டுகிறது. ஜெயமோகன் போரின் தாக்கத்திலிருந்து மீண்டுவிட்டார், வாசிப்பவர்களும்!
ஆமைக்கு ஓடென அமைக கோட்டைகள். நத்தைக்கு கூடென அமைக இல்லங்கள் என்பது பாரத்வாஜ நீதி. அஸ்தினபுரி அவ்வுணர்வால் கட்டப்பட்டது. #வெண்முரசு #கயாநி
பழைய குடிகள் அஸ்தினபுரியை விட்டு நீங்குவதும், புதிய குடிகள் குடியேறுவதும் எனக்கு இந்திய பாகிஸ்தான் பிரிவினையை நினைவு படுத்தின. ஆனால், தொடர்ந்து வாசித்து வருகையில் அது தவறென்றே பட்டது. சரியான உவமானம், மலேசியாவிலிருந்து சிங்கை பிரிந்து ஒரு நாடென உருவாகிய கதைக்கு ஒப்பானது சுரேசரும் சம்வகையும் சமைக்கும் புதிய அஸ்தினபுரி!
அந்த அரிய பரிசு:
திசைக்கொருவராய் சென்ற பாண்டவர்கள், யுதிஷ்டிரனை அவருடைய மனக்குலைவிலிருந்து மீட்டெடுக்க ஆளுக்கு ஒரு அரிய பரிசினைக் கொண்டு வருகின்றனர்.
போருக்குப் பிறகு நெறிநூல்களில் நம்பிக்கை இழந்தவரான யுதிஷ்டிரன் யாதொரு பாண்டவர் பரிசிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. அர்ஜுனன் கொண்டு வந்த வானம்பாடியை வரவழைக்கும் ‘அதிசய சீட்டி’ யைப் பெற்றுக்கொள்கிறார். ஆனால் இசைக்கும் அளவிற்குத் துணிவில்லை. அதை மீட்டும் அளவிற்குத் துணிவு கொண்டவர் ஒருவரே. அவரைப் பற்றித்தான் அடுத்து பேசப்போகிறோம்.
புரு:
“வானம்பாடிகள் குரல்களை திரும்பச் சொல்வதொன்றும் புதிதல்ல” என்று நான் சொன்னேன். “அல்ல, இது காலப்பறவை. இதற்கு மூன்றுகாலமும் தெரியும்” என்று அவன் சொன்னான். “இது நீங்கள் சொல்லும் எல்லா சொற்களையும் திரும்பச் சொல்லும். ஒரே ஒரு சொல்லைத் தவிர. அச்சொல்லையே நீங்கள் சாவின் போது இறுதிக்கணத்தில் சொல்வீர்கள். உங்கள் உதடுகள் அச்சொல்லில் உறைய உயிர்நீப்பீர்கள்” என்று அவன் சொன்னான்.
பீஷ்மர் மெல்ல முனகினார். மிருகாங்கன் அருகணைந்து அவர் வாயருகே செவியை வைத்து சொற்களை கேட்டார். பறவையை நோக்கி “யயாதி” என்றார். பறவை “யயாதி” என்றது. பீஷ்மர் அதை கேட்டார். அவர் முகம் கூர்மைகொண்டு பின் தளர்ந்தது. சற்றுநேரம் கழித்து பீஷ்மரின் உதடுகள் அசைந்தன. மீண்டும் செவிகொடுத்து திரும்பி மிருகாங்கன் “புரு!” என்றார். பறவை அதை திரும்பச் சொல்லவில்லை. சிறகடித்து எழுந்து அமர்ந்தது.
மீண்டும் “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து அமர்ந்தது. “புரு” என்றார் மிருகாங்கன். பறவை எழுந்து சிறகடித்து வீசியெறியப்பட்டதுபோல் காற்றில் தாவி அலைகளில் எழுந்தமைந்து அப்பால் பறந்தது. அது மறைவது வரை நோக்கிவிட்டு மிருகாங்கன் “அது கூறவில்லை, பிதாமகரே” என்றார். பீஷ்மரின் முகத்தில் புன்னகை உறைந்திருந்தது. விழிகள் அசைவிழந்திருந்தன.
நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 76
பீஷ்மரின் பிரம்மச்சரியம் இறுதியில் பேசப்படுகிறது. குரு வம்சத்தின் ‘இறுதிப் புரு’!
கலி வழிபாடு
ஆதன் கலிதேவனுக்குப் பூசனை செய்ய பாஞ்சாலி வழிபடும் இடத்தில் முடிகிறது இந்நாவல். அதைப் பாஞ்சாலி சபத நிறைவென்று கொள்கிறேன்.
குழலில் குருதி பூசி, அஸ்தினபுரியில் அமர்ந்தது, அரசி திரௌபதியின் சபத நிறைவு. கலிதேவன் ஆலய வழிபாடு, பெண் மற்றும் அன்னை திரௌபதியின் சபத நிறைவாகக் கொள்வோம்!
நலமே விளைக!
குறிப்பு:
திசைகளின் நடுவே சிறுகதையைப் பற்றி நிறைய பேரிடம் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல. தமிழ் இலக்கிய நுகர்வோர்கள் அனைவரும் உயரிய இடத்தில் வைத்துப் பேசும் ஒரு சிறுகதை இது. அச்சிறுகதையின் ஒரு விரிவான பெருங்கதையென்று கொள்ளலாம் களிற்றியானை நிறை-யை!. கதைக்கான தொடுப்பினை கீழே அளித்துள்ளேன்.
Click to access jeyamohan_thisaigalin_naduve_ss.pdf
கொரோனா காலம். கவனமாக இருங்கள் நண்பர்களே!