எல்ல ரயில் பயணம்


வணக்கம், நேற்று நுவரெலியா பயணம் தந்த களைப்பின் காரணமாக நன்கு உறங்கிவிட்டேன். இன்றைய நாள் இனிய நாள். நாங்கள் தங்கிய விடுதி ஒரு சிறிய உருளைக்கிழங்கு தோட்டத்தின் அருகில் அமைந்துள்ளது. விவசாயத் தோட்டத்தை அழித்து கட்டப்பட்டது. வெளியிலிருந்தது பெரிதளவில் வசீகரமான இல்லை. அங்கு சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. சமையல் அறையில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் தமிழர். அவரைப் பார்க்க எங்களுக்கு மிக பரிதாபமாக இருந்தது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் [...]

கண்டியிலிருந்து நுவரெலியா


இரண்டாம் நாளுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். உள்ளே செல்லலாம் வாருங்கள். முந்தைய பாகங்கள் சென்னையிலிருந்து கண்டி   கண்டியில் தொடங்குகிறேன். நாங்கள் கண்டி ஏரிக் கரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கினோம். அங்கு எப்பொழுதும் Buffet முறையில் காலை உணவு தரப்படும். ஈஸ்டர் சண்டே குண்டு வெடிப்பு நடந்து சிறு மாதங்களுக்குள் சென்றதால் அங்கு சுற்றுலா துறை மிக சரிந்து இருந்தது. விடுதி உணவகத்தில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அங்கு காலையில் எங்களுக்கு [...]

சென்னையிலிருந்து கண்டி


சென்னையிலிருந்து கண்டி - முதல் நாள் - ஜுன் 5, 2019. சிங்கையிலிருந்து சென்னை சென்று சென்னையிலிருந்து, காலை முதல் விமானத்தில், கொழும்பிற்குச் செல்வதாக திட்டம். சூரிய உதயத்திற்கு முன்னரே, சென்னை வானூர்தி நிலையத்தை அடைந்தோம். காலையில் எழுந்து அன்றைய பணிகளைத் தொடர ஆயத்தமாகி இருந்தது. சீருந்துப் பயணம் ஒவ்வாமையினால், இறங்கியதுமே தம்பி ராம் கார்த்திக் வாயுமிழ்ந்தான். அதைப் பார்த்துவிட்டு, அருகில் சஃபாரி அணிந்து நின்றிருந்த ஒரு பெரியவர் எங்களிடம் பரிவுடன் தண்ணீர் தந்து உதவினார். அதிகக் [...]

இலங்கை பயணம்


விவேகானந்தர் அமெரிக்கா போயிருக்கிறார். காந்தி தென்னாப்பிரிக்கா, இலண்டன் போயிருக்கிறார். யுவான் சுவாங் இந்தியா வந்திருக்கிறார். சங்கமித்திரை இலங்கைக்குச் சென்றார். இத்தனை பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். பயணம் செய்வதில் எத்தனை புதிய செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன! புதிய இடங்களைப் பற்றிய கலாச்சார வரலாற்றுப் பிண்ணனி தெரிகிறது. புதிய நிலத்தைப் பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. புதிய நபர்களுடன் பேசுகிறோம். தமிழகத்திலிருந்து தொட்டுவிடும் தூரத்தில் உள்ள ஒரு நாடு. சுற்றியும் அலை கடல் தாலாட்ட பசுமை போர்த்திய ஒரு [...]