எல்ல ரயில் பயணம்


வணக்கம்,

நேற்று நுவரெலியா பயணம் தந்த களைப்பின் காரணமாக நன்கு உறங்கிவிட்டேன். இன்றைய நாள் இனிய நாள்.

நுவரெலியா

நாங்கள் தங்கிய விடுதி ஒரு சிறிய உருளைக்கிழங்கு தோட்டத்தின் அருகில் அமைந்துள்ளது. விவசாயத் தோட்டத்தை அழித்து கட்டப்பட்டது. வெளியிலிருந்தது பெரிதளவில் வசீகரமான இல்லை. அங்கு சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. சமையல் அறையில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அதில் ஒருவர் தமிழர். அவரைப் பார்க்க எங்களுக்கு மிக பரிதாபமாக இருந்தது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நல்ல உணவைப் பரிமாறினார்கள். சேவையில் கராராக இருந்தனர். அந்த விடுதியை பார்த்ததும் “ஒரு நூலை அதன் அட்டையைக் கொண்டு எடை போடாதீர்கள்” என்பது நினைவிற்கு வந்தது.

உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கு

எங்களுக்கு நான்கு வெவ்வேறு பழங்களையும் பழச்சாறும் எங்களுக்குப் பரிமாறுனார்கள். அற்புதமாக இருந்தது. ஒலிபெருக்கியில் எனக்குத் தெரிந்த arabesque இசை ஓடிக்கொண்டிருந்தது. குளிரான காலைப் பொழுதில், கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கதகதப்பாக உண்பது ஒரு நல்ல உணர்வு இல்லையா!

கதிர் எழுகை
கதிர் எழுகை

இங்கே இலங்கையின் உயரமாக சிகரம் உள்ளது. அங்கே செல்வது எங்கள் பயணத் திட்டத்தில் இல்லை. ஆனால் அந்த சிகரத்தை நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து பார்க்க முடிந்தது. விடி காலையில் பனிமூட்டத்தில், குளம்பிக் கோப்பையுடன், குளிரக் குளிரப் பார்த்து ரசிக்க முடிந்தது.

Nuwara Eliya 01 Peak

Little England என்று அழைக்கப் படும் நுவரெலியாவைச் சுற்றிப் பாத்து விட்டு நம்ப எல்லவிற்கு தொடர் வண்டியில் செல்லலாம்.

அதற்கு முன் நானும் என் தம்பியும் சற்று தோட்டத்தில் விளையாடி விட்டு வருகிறோம். சற்று நேரம் பொறுங்கள்..

நுவரெலியா
நுவரெலியா

நுவரெலியா

தாத்தா பூ
தாத்தா பூ
நுவரெலியா
நுவரெலியா

Nuwara Eliya 08 Tea Estate

ரயிலில் எல்லவிற்குப் போக நாங்கள் நானு ஓய நிலையத்திற்குச் சென்றோம். அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. எனது தம்பி முந்தியநாள் ரம்போதாவில் வாங்கிய ஆட்டோவை விடுதி தோட்டத்திலேயே மறந்து விட்டுவிட்டான்.

நானு ஓயா
நானு ஓயா

நானு ஓயா ரயில் நிலையம் | Nany Oya Railway Station

நானு ஓயா ரயில் நிலையம் | Nany Oya Railway Station
நானு ஓயா ரயில் நிலையம் | Nanu Oya Railway Station

Nuwara Eliya 10 Nanu Oya Station 4

தொலைந்து போன ஆட்டோவைப் பற்றி நாங்கள் சோகமாக இருந்தோம். என் தந்தை சோகத்தை விட்டு விட்டு பயணத்தை தொடர் சொன்னார். ஆனால் எங்களுக்கு சோகமாக இருந்தது. தொடர் வண்டி கிளம்பியவுடன் என சோகம் காற்றில் பறந்து விட்டது.

கரகர வண்டி காமாட்சி வண்டி
கரகர வண்டி காமாட்சி வண்டி

நானு ஓய – எல்ல ரயில் தடம் உலகின் மிக அழகான ரயில் தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ரயில் பயணம் மூன்றில் இருந்து நான்கு மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது. பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மலைச் சிகரங்கள், பள்ளத்தாக்குகள், மிதக்கும் மேகங்கள் என்று கிளர்ச்சியூட்டும் நிலப்பரப்புகளின் வழியாக உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த ரயில் பயணம் இலங்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என்பது எங்கள் கருத்து, நாங்கள் அதை விரும்புகிறோம்!

கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி
கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி

கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி

கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி
கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி
மலை வழித்தடம்
மலை வழித்தடம்

முதல் வகுப்பு பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார் துஷார. இந்த ரயில் சீனத் தயாரிப்பு என்று தெரிகிறது. ஏழெட்டு பெட்டிகள் இருந்தன. இந்திய ரயில்கள் மாதிரி கடகடவென்ற ஓசை. சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு ஐரோப்பியருக்கு காலில் லேசாக அடிபட்டு, கலேபரம் செய்து கொண்டிருந்தார்.

வழியில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், வெட்டப்பட்ட அன்னாசிக் கீற்றுகள், மாங்காய், வெண்ணை சோளம், புதிதாக தயாரிக்கப்பட்ட அரிசி மற்றும் கறி, மிளகாய் பஜ்ஜி போன்ற விற்பனையாளர்கள் ரயில் பெட்டிக்குள் வந்து போகின்றனர்.

இயற்கைக்காட்சி அருமை! தேயிலைத் தோட்டங்கள், மலைகள், அழகான பழைய பாலங்கள், அருவிகள், சிறிய மலைக் கிராமங்கள் ஆகியவற்றால் மூடப்பட்ட அழகான பசுமையான மலைகளை நீங்கள் காண்பீர்கள். மேலும் ரயில் வந்ததும் ஓடும் உள்ளூர் குழந்தைகள் உங்களை வரவேற்பார்கள்.

நாங்கள் மூன்றரை மணி நேர ரயில் பயணம் செய்தோம். துஷார எங்களை எல்ல நிலையத்திலும் வரவேற்றார். அவர் எங்கள் சுமைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு, முன்னரே வந்திருந்தார். நாங்கள் வேனில் ஏறும்போது, எங்கள் இருக்கையில் பொம்மை ஆட்டோ கிடப்பதைக் கண்டோம். நாங்கள் ஆச்சரியப்பட்டோம், அவருடைய அன்பான செய்கைக்கு நன்றி.

எல்ல ரயில் நிலையம் | Ella Railway Station
எல்ல ரயில் நிலையம் | Ella Railway Station

இப்பொழுது மணி நான்கு. மதிய உணவை எடுத்துக்கொள்ள 5 மணி ஆகிவிட்டது. உணவகத்தில் ஏதும் இல்லை. வறுத்த சோறும் (Fried Rice) நூடுல்சும் கிடைத்தது. நன்றாகவே இருந்தது. பசியில் இருந்த எங்களுக்கு அது அமிர்தமாகத் தெரிந்தது.

நாளை விடிகாலையில் ஒரு வேலை இருக்கிறது. எனவே விரைவில் உறங்கிப் போனேன்.

அடுத்த வாரம் பேசுவோம்.

டாட்டா

கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி
கரகர வண்டி காமாட்சி காமாட்சி வண்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s