சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல


வணக்கம், 

நேற்று இரவு சாப்பிட்டு தூங்கினேன். நல்ல தூக்கம். சிறு குளிரும், நல்ல உணவும் எனக்குத் தந்த உறக்கத்தின் அமைதியே தனி.

முந்தைய பதிவுகள்

எல்ல
எல்ல

ஒரு மலையின் நடுவில் ஒரு சிறிய தோட்டத்தைக் கொண்ட ஒரு விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். அந்த தோட்டத்தில் சிறிய ரோஜாப்பூ முதல் கற்றாழை வரை அங்கு இருக்கின்றன. சிறந்த நடைக்குப் பிறகு சிறந்த பார்வை. தோட்டம் அழகாகவும், மேகங்களுடன் எல்லாம் கனவு போல் இருந்தது. அங்கு உள்ள எல்லா ஊழியர்களும் நட்பாகவும் உதவியாகவும் இருந்தனர். 

எல்ல

அவர்களில் அதிகாரி என்று ஒருவர் – எங்களுக்கு எல்லவில் எங்கு செல்லலாம், என்ன செய்வது போல சில ஆலோசனைகளை வழங்கினார். பயனுள்ளவர்!  மொத்தத்தில் இந்த விடுதியில் தங்கிய எனக்கு இது ஓர் புதிய அனுபவமாக இருந்தது. சரி, இந்த விடுதியைப் பற்றி நாம் பாத்து விட்டோம். இனி நாம் இந்த இனிய நாளை தொடங்கலாம்! இன்று நான் உங்களை இங்கு சந்திப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியைத் தருகிறது! இன்று என்ன செய்யலாம்? 

  • விடியற்காலையில் லிட்டில் ஆதம்ஸ் பீக் எனப்படும் சிவனொலிபாதத்தில் ஏறப் போகிறோம்.  
  • பிறகு ஒன்பது கண் பாலத்திற்குப் போகலாம்

சரி. நான் போய் பல் துலக்கி வந்து விடுகிறேன்.  

 வாருங்கள் சிறிய சிவனொலி பாதத்தில் ஏறலாம் 

Little Adams Peak (சிவன் ஒலி பாதம்) 2,234m உயரம். அது ஸ்ரீ பாதா என்று இலங்கையில் கூப்பிடுவார்கள். இப்பொழுது மணி காலை ஐந்து. நம்ப கதிர் எழுகையைப் பார்க்கப் போகிறோம் 

Little Adams Peak (சிவன் ஒலி பாதம்)ல் மலை வழிகளும் படிக்கட்டுமாகவும் இருந்தது. பாதை முழுவதும் இருட்டாக இருந்தது. என் தம்பி அஞ்சுவான் என்று நினைத்தோம். ஆனால் அவன் அஞ்சவில்லை. இருளில் கைபேசி ஒளியில் நாங்கள் நடந்து சென்றோம். ஊர் இன்னும் எழவில்லை. ஆழ்ந்து உறங்குகிறது.

விடிகாலை நடைப் பயிற்சி, சிறிய சிவனொலி பாதம், எல்ல
விடிகாலை நடைப் பயிற்சி, சிறிய சிவனொலி பாதம், எல்ல

செல்லும் வழி ஏகாந்தமாக இருந்தது. ஒரு ஈ காக்காய் இல்லை. சிகரத்தின் உச்சிக்கு நடந்து செல்ல அதிக நேரம் எடுத்தது. மூச்சு வாங்கியது. வியர்த்து வழிந்தது. ஆனால் நான் கண்டவை அனைத்தும் அற்புதமான காட்சிகள்! தேயிலைத் தோட்டத்தின் ஊடாக ஒரு அழகிய நடை.

கதிரெழுகை, சிறிய சிவனொலி பாதம், little adams peak, எல்ல
கதிரெழுகை, சிறிய சிவனொலி பாதம், little adams peak, எல்ல

மலை உச்சிக்கு ஏறிவிட்டோம். உச்சியில் ஒரு புத்தரின் சிலை இருந்தது. நீங்கள் மேலே வந்தவுடன் காட்சிகள் ஆனந்தம் தரும். அங்கு நீங்கள் காலையில் சென்றால் கதிர் எழுகையைக் காணலாம், எல்ல பாறையையும் காணலாம். “ஒரு கல்லுல இரண்டு மாங்கா”. நீங்கள் காலையில் செல்வது ஒரு நல்ல முடிவு என்று துஷார கூறினார். நீங்கள் அங்கு செல்லும்போது நீங்கள் மலை ஏறுவதற்கான காலணிகளை மறக்காதீர்கள் (Hiking Shoes).

சிறிய சிவனொலி பாதம், little adams peak, எல்ல
சிறிய சிவனொலி பாதம், little adams peak, எல்ல

அங்கு இரண்டு மூன்று வெளிநாட்டவர்கள் வந்து சேர்ந்தனர். அங்கு எப்பொழுதும் பல பறகலங்களை (drone) பயணிகள்  பறக்கவிட்டு நிழற்படம் எடுத்துக் கொள்வார்கள் என்று எங்கள் பயண வழிக் காட்டி துஷார அவர் சொன்னார். அப்படி இருந்த இடம் அன்று சந்தடி இல்லாமல் இருந்தது.

வெடிகுண்டுகள் செய்த வேலை. கைவிடப்பட்ட சுற்றுலா தளங்கள், எல்ல
வெடிகுண்டுகள் செய்த வேலை. கைவிடப்பட்ட சுற்றுலா தளங்கள், எல்ல

சில நிழற்படங்கள் எடுத்துக்கொண்டோம். திரும்பி வரும் வழியிலும் யாரும் எதிர்படவில்லை. ஒரே ஒரு வயதான தாய்லாந்து தம்பதிகளைத் தவிர.

சிறிய சிவனொலி பாதம், little adams peak. எல்ல
சிறிய சிவனொலி பாதம், little adams peak. எல்ல

கடும் பசியுடன் இறங்கி வந்து, குளித்துவிட்டு கீழே போய் ஏதாவது நல்ல உணவு  இருக்கும் என்று எண்ணிச் சென்றால், இட்லி  இருந்தது. ‘ஹய்யா’, என்று நான் இட்லி எடுத்து என் தட்டில் வைத்து  கண்ணை முடி நினைத்தேன் – ‘ஹப்பா  இலங்கை வந்தால் இந்தியா சப்பாத்தி கிடைக்குமா என்று நினைத்தாயே கண்ணா! இப்போ இட்லியே கிடைத்துவிட்டது பூந்து விளையாடு’ என்று நினைத்து வாயில் வைத்தால் இட்லி உடைந்தது. ‘என்னடா நம்ம பசில கல்லை சாப்பிட்டோமா?’ என்று நினைத்தேன். ஆனால் அது இடலிங்க . இட்லி உடைந்தது. இட்லிய கல்லு மாதிரி ஊத்தி வெச்சுறுக்காங்க. அந்த இட்லிக்கு என்  அம்மா  ஊத்தும் இட்லி பரவாயில்லை என்று எனக்கு தோன்றியது 😦 😦 .  வெளியூர் சென்றால் உள்ளுர் உணவை உண்ண வேண்டும் என்று எனக்கு அப்பொழுதுதான் மண்டைக்கு எட்டியது.

ஒன்பது கண் பாலத்திற்கு செல்லலாமா? தயாரா?

ஒன்பது கண் பாலத்திற்கு, Way to 9 arch bridge, எல்ல
ஒன்பது கண் பாலத்திற்கு, Way to 9 arch bridge, எல்ல

பாலத்திற்கு செல்வதற்குப் பல பாதைகள் உள்ளன. நாம் காட்டு வழியாக செல்லப் போகிறோம். காட்டுக்குள்ள சென்றால் நீங்கள் ஆபத்தான விலங்குகள் பார்க்க வாய்ப்புகள் உள்ளன. அதனால் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

Ella srilanka 09
ஒன்பது கண் பாலத்திற்கு, Way to 9 arch bridge, எல்ல

வயல் வரப்பு, ஒத்தயடிப் பாதை, பாதை மறித்து விழுந்து கிடக்கும் மரம், பாதையை ஒட்டியே வரும் சிறு ஓடை, அதில் ஓடும் தெளிவான நீர், ஆங்காங்கே ஊர்ந்து செல்லும் அட்டைகள், ஓரத்தில் புதர்கள், உயர்ந்து வளர்ந்த மரங்கள் என்று இந்த நடை பயணம் சாகச உணர்வைத் தந்தது.

Ella Srilanka 24
ஒன்பது கண் பாலத்திற்கு, Way to 9 arch bridge, எல்ல
Ella Srilanka 23
ஒன்பது கண் பாலத்திற்கு, Way to 9 arch bridge, எல்ல

பாலம் நன்றாக இருக்கிறது. தேவதை கதை போல இருந்தது. சற்று கீழே பாருங்கள் பள்ளத்தாக்கு!

Ella srilanka 07
ஒன்பது கண் பாலம், 9 Arch Bridge, எல்ல

 

நான் ஒரு 500m ரயில் தளத்தில் ஓடினேன்! நான் சென்று வர சுளையாக  பத்து நிமிடம் ஆனது. ரயில் வரும் நேரம். என் அம்மா பயந்து விட்டார்!

ஒன்பது கண் பாலம், 9 Arch Bridge, எல்ல
ஒன்பது கண் பாலம், 9 Arch Bridge, எல்ல

பாலத்தின் வழியாக நடந்து ஒரு ரயிலுக்காக காத்திருந்தோம். ரயில் வந்தது. நாங்கள் பாத்தது ஒரு சிவப்பு ரயில். ஆனால் அதை பார்ப்பதற்க்கு நாங்கள் ஒரு மணி நேரம் கிட்ட காத்திருந்தோம்! நீங்கள் பாலத்திற்கு வந்தால் ஒன்றில் இருந்து ஒன்னரை லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சிறிதளவு தான் தண்ணீர் கொண்டு வந்தோம். அதனால் நாங்கள் இளநீர் குடித்தோம். எனக்கு இரண்டு. மற்றவர்களுக்கு ஒன்று. இதை வைத்து நினைத்துப் பாருங்கள் எனக்கு எவ்வளவு தாகமாக இருந்திருக்கும் என்று!

Ella srilanka 10
ஒன்பது கண் பாலம், 9 Arch Bridge, எல்ல

பக்கத்தில் ஒரு காத்திருக்கும் இடம் இருந்தது. அங்கு உட்கார இடம் இருந்தது மேலும் அங்கு நுவரெலியாவைப் போல ஒரு சிறிய உருளைக்கிழங்கு தோட்டம் இருந்தது.

Ella srilanka 12
ஒன்பது கண் பாலம், 9 Arch Bridge, எல்ல

மதிய உணவிற்கு ஒரு உள்ளூர் உணவகத்திற்குச் சென்றோம். அங்கு சென்றவுடன் தான் தெரிந்தது – அங்கு கூட்டமே இல்லை. எங்கள் தயிர் சாதம்,  பருப்பு கறி, தேங்காய் சாம்பல், உருளைக்கிழங்கு வறுவல், எல்லா காய்களும் போட்டு ஓரு கறியும் வாங்கினோம். ஆளே இல்லை. ஆனாலும் சாப்பாடு தாமதமாகத்தான் வந்தது. நாங்களும் களைப்பாக இருந்ததால் ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது. (காலை இட்லி போன்று இல்லை!!)

Rice & Curry, எல்ல
Rice & Curry, எல்ல

சரி நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு ஒரு வலுவான உறக்கம்.

மாலையில் திரும்ப ஊருக்குள் சென்று அதே கடையில் தயிர், தேங்காய் சாம்பல் வாங்கிக் கொண்டோம். அமைதியான இரவில், தூரத்தில் மலை நகரில் விளக்குகள் ஒளிர்வரைப் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது இருட்டுக்குள் செல்லும் மலை ரயிலைப் பார்த்துக்கொண்டே, சில்வண்டுகளின் சத்தங்களுடன் இரவு உணவும் இனிதாக அமைந்தது.

Ella srilanka 16

அடுத்த வாரம் சந்திப்போம்..

டாட்டா

 

 

One thought on “சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s