அஞ்சலி – எழுத்தாளர் கடுகு


காலையில் பா.ரா எழுதி அஞ்சலிப் பதிவையும் பார்த்த பொழுது வருத்தத்திற்கு ஆளானேன்.

எழுத்தாளர் திரு ‘கடுகு’ பி.எஸ் ரெங்கநாதன் உடன் 2004 – 05 ல் தமிழ் மடலாடல் குழு மூலமாக அறிமுகம் கிடைத்தது. யுனிக்கோடு எழுத்துருக்கள் தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். எனக்கு மிகுந்த ஆச்சர்யம். இந்த வயதில் ஒருவர் எழுத்துரு செய்து, volt அட்டவணை போடச்சொல்லிக் கேட்கும் அளவிற்கு ஆர்வக்காரராக இருக்கிறாரே என்று.

நான் அதில் அரை பெடல். எனவே நான் உமரின் உதவியை நாடினேன். TSCu_Vaigai எழுத்துரு வெளி வந்தது. பார்க்க – https://fontinfo.opensuse.org/fonts/TSCu_VaigaiRegular.html

2009 வாக்கில் வலைப்பதிவு உலகில் நுழைந்தார்.

அவருடைய புத்தகங்களை என் புதுக்கோட்டை முகவரிக்கு அனுப்பித் தந்தார். முதன் முதல் போன் பேசியபோது, நான் அதிகம் பேச வேண்டிய தேவை இல்லை. கடுகு வெடிப்பது போல சட சடவெனப் பேசினார். சென்னையில் நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தோம். நடக்கவில்லை. இனி நடக்கவும் போவதில்லை. ஓய்வெடுங்கள் ஐயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s