கோடை பண்பலை – 21வது உதயவிழா


கல்லூரிப் படிப்பை முடித்த 2001ஆம் ஆண்டில் அறிமுகம். மாலை ஆனால் தெருக்கள் தானாகவே ஊரடங்கிற்கு ஆட்படும் தொலைக்காட்சி சீரியல் காலமல்லவா. எத்தனை டிவிக்கள் வந்தாலும், இன்றளவும் தன் மாண்பைத் தன்னகத்தை வைத்திருக்கும் கோடைப் பண்பலையின் வெற்றிக்கு, அதன் திட்டமிடலும், கடையைத் திறந்தவுடனே, தொலை பேச வரிசையில் காத்திருக்கும் அதன் நேயர்களும் காரணமாக இருக்கும்.

‘பண்பலை என்றாலே பண்பற்ற பேச்சு’ என்பார் என்னுடய நண்பர் ஒருவர். அதிலிருந்து தனித்து இயங்கக்கூடிய வகையில் நடத்திச் செல்லும், நிலையத்தார்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எனக்கு உவப்பான நிகழ்ச்சிகளைக் குறிப்பிட வேண்டுமென்றால் அருளமுதம், இளையராகம், வசந்த விடியல், என்னம்மா அங்க சத்தம் (முன்னர் அண்ணாச்சி என்னாச்சி என்று ஒரு தொடர் வந்தது), நேற்றைய நிமிடங்கள், தென்கச்சியார் துணுக்குரை, நெஞ்சில் நிறைந்தவை போன்றவைகளைச் சொல்லலாம்.

புதுக்கோட்டையிலிருந்து புலம் பெயர்ந்த பிறகு, இதற்கான வாய்ப்பே அற்றுவிட்டது. வரப்பிரசாதமாக radioindias.com ல் கோடை பண்பலை கிடைத்தது. பிறகு பிரசார் பாரதியே இணையத்திலும், கைபேசி யிலும் தர ஆரம்பித்துவிட்டனர். வெகு சிறப்பு.

2000ங்களில் பண்பலை அறிவிப்பாளர்களின் லகர, ழகர உச்சரிப்பு குறித்து எனக்கு சில விமர்சனங்கள் இருந்தன. இப்பொழுது அதை மிகுந்த அளவில் சரி செய்து உள்ளனர். காதை உரசாத இனிய தமிழில் பண்பான முறையில் பேசுவது திகட்டாதது. அறிவிப்பாளர் என்றால் உடனே அப்துல் அமீது என்பார்கள். நான் திருச்சி வானொலியின் ஓய்வு பெற்ற திருமதி ஸ்ரீமீனாக்‌ஷி அம்மையாரைத்தான் சொல்வேன். அவரைப் போல நல்ல குரல் வளமும், நிகழ்ச்சியைப் படைக்கும் திறனும் கொண்டு கோடை பண்பலை வானொலி அறிவிப்பாளர்களும் திகழ வாழ்த்துக்கள்.

தொடர்புள்ள சுட்டிகள்:

֍֍֍

திருவள்ளுவர் ஆண்டு 2051. ஆனி 5.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s