முதலாவிண் | ஜெயமோகன்


பின்பு குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அக்களத்திற்கு சென்றேன். அங்கே என் இளையோன் வடக்குநோக்கி படுத்திருந்தான். அவன் அருகே அனைவரும் துயில்கொண்டிருந்தனர். நான் அவனருகே சென்று காலடியில் நின்றேன். அவன் விழித்து என்னை பார்த்தான். ‘இளையோனே, நான்தான்’ என்றேன். அவன் வாழ்த்து சொன்னான். ‘இளையோனே, அன்று நீ வியாசவனத்திற்கு வந்தநாளில் தொடங்கியது இது, அல்லவா?’ என்றேன். ‘ஆம், உங்கள் கவிதையை முன்னரே கேட்டுவிட்டேன். குஹ்யசிரேயஸ் என் நெஞ்சைக் கிழித்து உண்டது’ என்றான்.கிருஷ்ண துவைபாயனர் வியாசருக்கும் பீஷ்மருக்கும் நடந்த உரையாடல்.முதலாவிண் [...]

கல்பொரு சிறுநுரை | ஜெயமோகன்


“அஞ்சுவதற்கு என்ன உள்ளது இங்கே? மறம் ஓங்கி அறம் அழிகையில் நான் நிகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பரம்பொருள் மானுடனுக்கு ஒரு சொல்லளித்திருக்கிறது அல்லவா?”-பகுதி எட்டு : சொல்லும் இசையும் – 6 நண்பர்களே, வெண்முரசு வரிசையின் 25ஆவது நாவல் கல்பொருசிறுநுரை இன்னொரு வேள்வி. அவியாகிக்கொண்டே இருக்கின்றனர் இதுகாறும் உளவிய கதை மாந்தர்கள். சீன வைரஸ் தாக்கத்தால் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியதில் இருந்து வெண்முரசு வாசிப்புக்குப் பெறும் தடை விழுந்துவிட்டது. காலையும் மாலையும் பயணநேர வாசிப்பு காணாமல் போய்விட்டது. [...]