இடும்பனும் இறைவனும் வாட்சாப்பும் – தைப்பூச சிறப்புப் பதிவு


தைப்பூசம் – மீள்பதிவு

கடைசி பெஞ்ச்

களைத்துப் போயிருந்தான் இடும்பன். மலையைத் தூக்கித் தூக்கி தோள்பட்டை எல்லாம் முறுக்கிக் கொண்டது போல கடுத்தது. ‘u there. u there’ என்று வாட்ஸாப்பில் அகத்தியரின் செய்தி மினுங்கிக் கொண்டு இருந்தது. டபிள் டிக் வந்தாலும் நீல கலராக மாறதது கண்டு அகத்தியர் குழம்பிப் போயிருந்தார்.

கொஞ்ச நாள் முந்திதான் கயிலை மலைக்குப் போய் சிவகிரி, சக்திகிரி என்கிற இரு மலைகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா கார்கோவில் போட்டுக்கொண்டு வரும்படி பணித்திருந்தார். அந்த மலைகளைப் பொதிகை மலைகளுக்கு அருகில் போட்டுவிட தீர்மாணித்து, அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக்கொணடிருந்தார்.

சென்னையில் அப்பவென்று மழை கொட்டோ கொட்டென்று கொட்ட எல்லா கார்கோ பிளைட்டு. லாரிகளும் கான்சல் ஆனதால் இடும்பன் காலை நடையாகப் புறப்பட்டார், பாவம். இரு மலைகளையும் எடுத்து கட்டி தன் தோளின் இரு புறமும் தொங்கவிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

பாரம் கணக்க நடந்து வந்த இடும்பன், திருச்சி தாண்டி திண்டுக்கல் அருகில் வரும்போது வழி தவறியது போன்று குழம்புகிறார் இடும்பன். அப்போதைக்கு என்பீல்டு பைக்கில் வந்த ஒருவர் இடும்பன் மேல் கரிசனம் கொண்டு, ‘என்னாப்பா தம்பி. இப்படி வேர்த்தப் போச்சே.. கொஞ்சம் ஓய்வெடுத்துப் போகக்கூடாதா’ என்று ஆவினன்குடி பக்கமாகத் திருப்பி விடுகிறார். அத்தோடு இடும்பனுக்கத் தெரியாமல் தான் வைத்திருந்த மொபைல் ஜாமரை இயக்க, இடும்பனுடன் அகத்தியருக்கு இருந்த தொடர்பு அறுந்து போனது.

அகத்தியரின் வாட்சாப்பு தொல்லை இல்லாத நிம்மதியில் ஆவினன்குடியில் வந்து களைப்பு…

View original post 254 more words

MARK h-AS READ


சின்ராசு போற்றி.

KAAPICCINO

Few weeks back we all woke up to an updated Privacy Policy notification from WhatsApp. Since then there has been a lot of stress amongst WhatsApp users about their data, privacy etc. Chumma illamey Elon Musk tweeted ‘Use Signal‘ and the whole world has started moving there and all this has only created more stress for namma WhatsApp. Last few days, WhatsApp has been releasing a lot of ads saying they’re SAFE, SAFE, SAFE and last night I saw them silentah sneaking into my WhatsApp status and telling they care for me and not to worry.

Vivek sollura madiri ‘ivanunga mogarakattaiyae pakkum bodhu avalavu nallavan madiri teriliyae’ and also worried if Facebook will reply ‘ninga mindvoice nu ninachu sathama paesiturukinga’ yedhu yeppudiyo nammaku yellam Chinraasu dan, let’s look at this situation from his perspective

Avasara pattiyae Whatsapp-u

Leave Me ELON!

Paavam namma Chinraasu

WhatsApp Latest Campaign ‘Nambi Vaanga…

View original post 75 more words

Solvan – Tamil Text to Speech from Murasu


பொங்கலுக்கு ஒரு நல்ல அறிவிப்பு வந்துள்ளது. நேற்று இரவு வலைப்பதிவு திரட்டியில் சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு என்றொரு பதிவு கண் சிமிட்டியது. முரசு அஞ்சல் நிறுவனத்திடமிருந்து தமிழை வாக்கியங்களைப் படிக்கும் ஒரு செயலி (Text To Speech) வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி. தமிழ் மடலாடல் குழுங்களில் இது போன்ற செயல் திட்டங்கள் சொல்லப்பட்டு வந்தன. ஏற்கனவே இருக்கும் செல்லினம் செயலி சொல்வன் என்றொரு இன்னுமொரு வசதி ஏற்பாடு செய்துள்ளனர். கீழே திரைக்காட்சி பார்க்கவும். உரையைக் [...]

மாறா


நளாயினி சரித்திரத்தைச் சொன்னால் கூட நல்ல மசாலா சேர்த்துச் சொல்லும் எம் தமிழ் திரைப்பட உலகில் மாறா போன்ற முயற்சிகள், எந்திரத்திற்கு எண்ணெய் போடுவது போல. எப்போவாவதுதான் நிகழ்வது. அதற்காக முதலில் பாராட்டுக்கள். வழிதெரியாமல் வித்தவுட்டில் வரும் சிறுவன் மாறா. அவனை ஏற்றுக்கொண்டு வாழ்வு தரும் போஸ்ட் மாஸ்டர் வெள்ளையன். அந்த வெள்ளையனுக்கு ஒரு கைகூடாத இளமைக்கால காதல். அக்காதலியை நினைத்தவாறே காலத்தைக் கடத்தும் வெள்ளையன். அவள் நினைவு மங்கிவிடக்கூடாதென்று, அவளுக்கு எழுதிய அந்த பட்டுவாடா செய்யப்படாத [...]

சுமித்ரா | கல்பட்டா நாராயணன்


எதையும் சாராமல் வாழ்வது என்ன வாழ்க்கை? ஒரு வித அகங்காரம் மட்டுமே இருக்கிறது. வீட்டிலுள்ள மேசை, நாற்காலிகள் போல அர்த்தமற்றது இத்தனிமை. ஒரு நற்பொழுதில் திடீரென சுமத்ரா இறந்து விடுகிறாள். அவளை இறுதியாகக் காணவரும் பிறர் மனதில் எழும்பிய நினைவலைகள் இந்தாவலில் பதியப்படுகின்றன. சுமித்ரா (நாவல்)ஆசிரியர்: கல்பட்டா நாராயணன்மொழிமாற்றம்: கே.வி. ஷைலஜா (மலையாளம் - ഇത്രമാത്രം)பதிப்பு: வம்சி, திருவண்ணாமலை. (இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2015) நூலக முன்பதிவு:NLB - Cumitrā / Malaiyāḷa mūlam, Kalpaṭṭā Nārāyaṇan̲ [...]