1972-இல் தொல்லியல் அறிஞர் திரு நாகசாமி எழுதிய/தொகுத்த புத்தகம் – Art of Tamil Nadu – ஒன்று கண்ணில் பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு. நூறு புகைப்படங்களாவது இருக்கும். ஐம்பது வருஷங்களுக்கு முன் இத்தனை புகைப்படம் எடுப்பதே பெரிய விஷயம். இதை ஒரு புத்தகமாக தொகுத்துப் போட்டிருப்பது இன்னும் பெரிய விஷயம்.
நாகசாமி தொல்லியல் ஆராய்ச்சியாளர். தமிழக அரசில் தொல்லியல் துறைத் தலைவராக பணியாற்றி இருக்கிறார். பத்மபூஷன் விருது பெற்றவர்.
என் உறவினரும் கூட. (தங்கையின் மாமனார்). முப்பது வருஷங்களுக்கு முன் முதல் முறையாக அவர் வீட்டிற்கு போனபோது அவரது புத்தக அலமாரிகளைப் பார்த்து அசந்து போனது இன்னும் நினைவிருக்கிறது. இப்போது 90 வயது ஆகிறது. முதுமை அவரை கொஞ்சம் பாதித்திருக்கிறது. நடக்க, படிக்க கொஞ்சம் கஷ்டப்படுகிறார். ஆனால் எதுவும் – கொரோனாவும் கூட – அவரை முடக்கிவிடவில்லை, இன்னும் படிப்பதும் எழுதுவதும் மும்முரமாக நடக்கிறது.
1972-இல் அவர் எழுதிய தொகுத்த புத்தகம் – Art of Tamil Nadu – ஒன்று கண்ணில் பட்டது. புகைப்படங்களின் தொகுப்பு. நூறு புகைப்படங்களாவது இருக்கும். ஐம்பது வருஷங்களுக்கு முன் இத்தனை புகைப்படம் எடுப்பதே பெரிய விஷயம். இதை ஒரு புத்தகமாக தொகுத்துப் போட்டிருப்பது இன்னும் பெரிய விஷயம். Coffee table புத்தகங்கள் இன்று கூட தமிழில் வருவதாகத் தெரியவில்லை.
சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். முழுப் புத்தகத்தையும் கட்டாயம் படியுங்கள் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கலை
சிறப்பான பதிவு. நூலில் இருக்கும் படங்களில் சிலவற்றைக் காணத் தந்தமைக்கு நன்றி.