Solvan – Tamil Text to Speech from Murasu


பொங்கலுக்கு ஒரு நல்ல அறிவிப்பு வந்துள்ளது. நேற்று இரவு வலைப்பதிவு திரட்டியில் சொல்வன் : எழுத்தை ஒலியாக்கும் செல்லினத்தின் சிறப்புக்கூறு என்றொரு பதிவு கண் சிமிட்டியது.

முரசு அஞ்சல் நிறுவனத்திடமிருந்து தமிழை வாக்கியங்களைப் படிக்கும் ஒரு செயலி (Text To Speech) வெளிவந்துள்ளது. மகிழ்ச்சி. தமிழ் மடலாடல் குழுங்களில் இது போன்ற செயல் திட்டங்கள் சொல்லப்பட்டு வந்தன. ஏற்கனவே இருக்கும் செல்லினம் செயலி சொல்வன் என்றொரு இன்னுமொரு வசதி ஏற்பாடு செய்துள்ளனர். கீழே திரைக்காட்சி பார்க்கவும்.

உரையைக் நகல் எடுத்து (Copy), சொல்வனில் ஒட்டி (Paste), பொத்தானை அழுத்தினால், அழகாகப் பேசிவிடுகிறது. திரு முத்து நெடுமாறனின் குரல் பதிவில் சிறப்பாக இயங்குகிறது.

செல்லினம் ஒரு எளிதான செயலி என்பதிலிருந்து, அஞ்சல் தமிழ் 99 விசைப்பலகைகள், எழுத்துருக்கள், செய்தி ஓடை என்பதோடு, காலத்திற்கேற்ப இதனையும் கொண்டுவந்துள்ளது. ஒரு கைபேசி செயலி என்பதை விட, கைபேசிகளின் தமிழ் தளமாக முன்னேறி வந்துள்ளது நமக்குப் பெருங்கொடை.

2001(2) Murasu Anjal மின்னஞ்சல் செயலி

2001ஆ 2002ஆ நினைவில்லை. தமிழ் மடலாடல் குழுக்களுக்கு Murasu Anjal composer பயன்படுத்திய நிறைய பயனாளர்களில் நானும் ஒருவன். இதுதான் தொடக்கம்.

2002 Murasu Anjal Pro

மதுரைக்கு 3 மணிநேரம் பேருந்து பிடித்துச் சென்று, சொக்கிகுளத்திற்கு நகரப் பேருந்தில் சென்று ஒரு சிடி வாங்கி வந்தேன். விலை நினைவில் இல்லை.

2002 கடம்பவனம் ஒருங்குறி (யூனிகோடு) கட்டுரை

இந்தக் கடம்பவனம் கட்டுரை முரசு அஞ்சல் உதவி கொண்டு எழுதப்பெற்றது. (விண்டோஸ் 2000/ஒருங்குறி (Unicode)/New typewriter keyboard). anjal-unicode யாகூகுழுமத்தில் திரு முத்து நெடுமாறன் அவர்களின் ஈமெயில் இன்னும் என் காப்பகத்தில் காணக்கிடைக்கிறது. நேரடியாக இறங்கி வேலை செய்யும் திறன் மெச்சத்தக்கது அல்லவா. TSCII தரம் கோலோச்சிய காலம் அது.

Tamil Unicode fonts are necessary to read these pages. Since, this site is *NOT* font specific you can use your own Tamil Unicode fonts.
Thank you

இவ்வாறு சொல்லித்தான் அந்தக் கட்டுரையே ஆரம்பித்தேன். பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில். (ஆனால் 2021ல் கூட தினமலர் தளம் எழுத்துருவை CSSல் சொல்லிக்கொண்டுள்ளது 😡)

2002 – திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் புத்தகம்

PageMaker/Anjal Encoding/இணைமதி அருள்மதி எழுத்துருக்களைக் கொண்டு முழுக்க வடிவமைத்தேன். Page Maker ஒருங்குறியை ஆதரிக்கவில்லை. எனவே முழுக்க அஞ்சல் குறியாக்கத்தில் (encoding) செய்தேன்.

2010 HTC

முரசு எழுத்துருக்கள் ஆப்பிள் கைபேசிகளில் உள்ளதை அறிந்திருந்தேன். ஆனால் விலை கட்டுபடியாகவில்லை. ஏதோ ஒரு செய்தியில் முரசு அஞ்சல் எழுத்துருக்கள் HTC கைபேசியிலும் வர ஆரம்பித்துவிட்டதாக வாசித்தேன். எனவே அடுத்த கைபேசியாக htc கைபேசியில் தமிழ் அழகு வர படிக்கவும் எழுதவும் முடிந்தது. ஒரு காலத்தில், htc போன்களில் கூகிளின் கோழி கிறுக்கல் எழுத்துருக்கள் தோன்ற ஆரம்பித்தன. அப்படியிலும் உலாவியில் (browser) முரசு எழுத்துருக்கள் வந்துவிடும்.

2016 முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பு

தனிப்பயனுக்காக ஒரு முரசு அஞ்சல் முதல்நிலைப் பதிப்பை வாங்கினேன். என்னுடைய ‘favorite’ fixed width font அதில் இல்லை (அல்லது எனக்கு அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை)

2017 ஐபோன்

ஐபோன் முழுக்க தமிழ் வாசிக்க, எழுத முடிந்தது.

2021 சொல்வன்

2021 இன்று – சொல்வன் செயல்படுத்தி இருக்கிறேன்.

20 வருடங்கள் கணக்காகிறது. ஈடுபாட்டுடன் முயன்றால் ஒழிய 1985லிருந்து இத்தகு வேலைகளைச் செய்து வருவது இயலாது. 386, 486 கணினிகளிலேயே தமிழ் எழுத்துருவைக் கொண்டுவந்ததாக எங்கோ வாசித்தேன். இத்தகு முன்னெடுப்புகள் மூலம்தான் கணினித்தமிழ் வளர்ந்துள்ளது. நாமும் பயன்படுத்திக்கொண்டுள்ளோம். முரசு சொல்வனுக்காக உழைத்த உள்ளங்களுக்குப் பாராட்டுக்கள்.

தொடர்புடையவை:

செல்லினம் – சொல்வன் அறிமுகம்

அசைபட முன்னோட்டம் (Video demonstration) –

ஃஃ இது ஒரு விளம்பரப் பதிவு அல்ல 🙂 ஃஃ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s