இடும்பனும் இறைவனும் வாட்சாப்பும் – தைப்பூச சிறப்புப் பதிவு


தைப்பூசம் – மீள்பதிவு

கடைசி பெஞ்ச்

களைத்துப் போயிருந்தான் இடும்பன். மலையைத் தூக்கித் தூக்கி தோள்பட்டை எல்லாம் முறுக்கிக் கொண்டது போல கடுத்தது. ‘u there. u there’ என்று வாட்ஸாப்பில் அகத்தியரின் செய்தி மினுங்கிக் கொண்டு இருந்தது. டபிள் டிக் வந்தாலும் நீல கலராக மாறதது கண்டு அகத்தியர் குழம்பிப் போயிருந்தார்.

கொஞ்ச நாள் முந்திதான் கயிலை மலைக்குப் போய் சிவகிரி, சக்திகிரி என்கிற இரு மலைகளைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா கார்கோவில் போட்டுக்கொண்டு வரும்படி பணித்திருந்தார். அந்த மலைகளைப் பொதிகை மலைகளுக்கு அருகில் போட்டுவிட தீர்மாணித்து, அதற்கான ஏற்பாடுகளைப் பார்த்துக்கொணடிருந்தார்.

சென்னையில் அப்பவென்று மழை கொட்டோ கொட்டென்று கொட்ட எல்லா கார்கோ பிளைட்டு. லாரிகளும் கான்சல் ஆனதால் இடும்பன் காலை நடையாகப் புறப்பட்டார், பாவம். இரு மலைகளையும் எடுத்து கட்டி தன் தோளின் இரு புறமும் தொங்கவிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

பாரம் கணக்க நடந்து வந்த இடும்பன், திருச்சி தாண்டி திண்டுக்கல் அருகில் வரும்போது வழி தவறியது போன்று குழம்புகிறார் இடும்பன். அப்போதைக்கு என்பீல்டு பைக்கில் வந்த ஒருவர் இடும்பன் மேல் கரிசனம் கொண்டு, ‘என்னாப்பா தம்பி. இப்படி வேர்த்தப் போச்சே.. கொஞ்சம் ஓய்வெடுத்துப் போகக்கூடாதா’ என்று ஆவினன்குடி பக்கமாகத் திருப்பி விடுகிறார். அத்தோடு இடும்பனுக்கத் தெரியாமல் தான் வைத்திருந்த மொபைல் ஜாமரை இயக்க, இடும்பனுடன் அகத்தியருக்கு இருந்த தொடர்பு அறுந்து போனது.

அகத்தியரின் வாட்சாப்பு தொல்லை இல்லாத நிம்மதியில் ஆவினன்குடியில் வந்து களைப்பு…

View original post 254 more words

Leave a comment