2008ல் வெளிவந்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம் bedtime stories. நகைச்சுவை நடிகர் ஆடம் சாண்ட்லர் நடித்து வெளிவந்த முதல் நகைச்சுவைத் திரைப்படமாம்.

இதில் sunny vista motel என்கிற விடுதியை நடத்தி வருகிறார் மார்ட்டின். 25 வருடங்களில் நட்டத்தின் காரணமாக அவ்விடுதியை நாட்டிங்ஹாம் குழும ஹோட்டல்களின் தலைவர் பேரி நாட்டாங்ஹாமிடமிம் விற்கிறார்.
ஸ்கீட்டர் மார்ட்டினின் மகன். அவனிடமே பிற்காலத்தில் வியாபாரத்தைக் கவனிக்கச் சொல்வதாக வாக்களிக்கிறார் நாட்டிங்ஹாம். அந்நிறுவனத்திலேயே பழுது நீக்குபவராகத் தொடர்கிறார் ஸ்கீட்டர்.

ஆனால் பிற்காலத்தில் நாட்டிங்ஹாம் தன் மகளின் காதலன் கெண்டால் டங்கனை மேலாளராக நியமித்து விடுகிறார். மனஅழுத்தத்தில் தன் பணியைத் தொடர்கிறார் ஸ்கீட்டர்.

ஸ்கீட்டரின் அக்கா வெண்டி ஒரு பள்ளியில் பணி புரிகிறார். அப்பள்ளியை மூடுவதால், பணியிட நேர்முகத்திற்காக அரிஸோனா செல்லவேண்டி வருகிறது. ஒரு வாரத்திற்குத் தன் குழந்தைகள் பாபி மற்றும் பாட்ரிக்கைப் பார்த்துக்கொள்ள ஸ்கீட்டரையும், அப்பள்ளியிலேயே பணிபுரியும் அவளது தோழி ஜில் ஹேஸ்டிங்சையும் கேட்டுக்கொள்கிறாள்.


ஒரு வாரத்திற்கு ஜில் பகலிலும், ஸ்கீட்டர் இரவிலும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கின்றனர். அந்த ஒரு வாரப் பொழுதுதான் மாயவித்தை வாரமாக இப்படத்தை ஆக்குகிறது. குழந்தைகளைத் தூங்க வைக்க கதைகளைச் சொல்கிறார் ஸ்கீட்டர். அதில் தன்னையே கதைத் தலைவனாக பாவித்துக்கொண்டு, தன் வாழ்க்கையே கதைக்களமாகக் கொண்டு தினம் ஒரு கதைகளைச் சொல்கிறான். ஒரு நாள் கிரேக்க ராஜா கதை. இன்னொரு நாள் கவ் பாய் கதை. குழந்தைகளும் தங்கள் பங்குக்கு அக்கதைகளை திசை மாற்றுகின்றனர்.



அக்கதையே அடுத்த நால் ஸ்கீட்டரின் வாழ்க்கையில் உண்மையாக நடக்க ஆரம்பிக்கிறது. அதில் இருந்து அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, மகிழ்ச்சியாக முடிகிறதா அல்லது வருத்ததில் முடிகிறதா என்பதை வெண்திரையில் காணுங்கள்.

குழந்தைகளுக்கான ஒரு திரைப்படம்! ஆனால் பெரியவர்களையும் வசீகரிக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. கதைக்கு ஏற்ப வரும் காட்சிகளும், setகளும், அவர்களின் உடைகளும் இப்படத்தை எனக்கு ரசிக்கும்படி ஆக்கியது.