இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது.

india_independence2

காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

Advertisements

பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300


மியான்மரின் மண்டலே நகரின் இர்ரவாடி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொன்மையான நகரம் பகான். கிபி 9 தொடங்கி 23ஆம் நூற்றாண்டு வரை பகான் அரசின் தலைநகரமாக இருந்த பகான், பின்னாளில் தற்கால மியான்மராக ஆகியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் மகானில் மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல கோயில்கள், பகோடாக்கள், மடாலயங்கள் கட்டப்பட்டன.

bagan_burma
பகான் -படம்: விக்கி.

பகானின் எழுச்சி

அவற்றில் 2200 கோயில்களும் பகோடாக்களும் தற்காலத்தில் காணக்கிடக்கின்றன.  தேராவத பௌத்த மதத்துடன், மஹாயான பௌத்தம், தந்திரீக பௌத்தம் மற்றும் பிற இந்துப் பள்ளிகள் (சைவம், வைணவம்) இங்கு இருந்தன.

நேற்று இரவு ஆசிய நாகரீக அருங்காட்சியகத்தில் ‘பகானின் தினசரி வாழ்க்கை, 1000-1300’ என்கிற தலைப்பில் தேசீய தொழில்நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியை கோ கியொக் யிவான் உரையாற்றினார். நானும் கண்ணனும் போயிருந்தோம்.

p_20170203_190020.jpg

அங்கு நடந்த அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர் என்பதால், அந்தச் செயல்திட்டத்தைப் பற்றியும் அதில் கிடைத்த பொருட்களைப் பற்றியும் புகைப்படங்களுடன் உரையைத் தயாரித்திருந்தார்.அதில் நான் புரிந்து கொண்டவை இவை.

pagan_empire_-_sithu_ii

புத்தமதமும் பழங்கால வியாபாரமும் இந்தப் பகுதிகளை இந்தியாவுடன் நெருக்கமாகப் பிணைத்திருந்தன. எனவே இது போன்ற நிகழ்வுகளில் துண்டு போடுவது இங்குள்ள இந்தியர்கள் வழக்கம். எதிர்பார்த்த படி, இந்தியாவின் தொடர்பு பற்றிய எந்தப் பேச்சும் இவர் உரையில் ஈடுபடவில்லை. ஆனால் விக்கியில் கொடுத்துள்ள தகவலின் படி,
– இந்தியா, இலங்கை மற்றும் கெமெர் பேரரசிலிருந்து பகானுக்கு துறவிகள் சென்றிருக்கின்றனர்.
– ஆந்திராவின் அமராவதி மற்றும் நாகார்ஜுனகொண்டா, இலங்கையின் சில பகுதிகளின் புத்த ஸதூபிகளின் சாயலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவையாக இருக்கலாம்.
– பகானின் தொன்மையான பெயர் அரிமதனபுரம் (Arimadanapura)

உரையின் இறுதியில், ஒர இந்தியர் பகானின் ஆலயங்களை, வங்காளத்தின் பாலர் பேரரசின் ஆலயங்களோடு ஒப்பிட்டு வினவினார். அப்போது, இந்தியாவிற்கும் பகானிற்கும் வியாபார, கலாச்சார கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பதில் அளித்தார்.

இதில் எனக்கு விதான ஓவியங்களைப் பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன. தவிர. இன்று பகான் சென்றால் என்ன பார்க்கவேண்டிய ஆலயங்கள் பற்றியும் கூறினார்.

பகானின் சிறப்பான காலகட்டம்

கியான்சித்தா அரண்மனை – அகழாய்வு

பத்தாம் நூற்றாண்டில் பகானின் பேரரசின் அரசராக இருந்தவர் கியான் சித்தா. தனது தந்தை அனவிரதரைப் பின்பற்றி, சமூக, பொருளாதார, கலாச்சாரப் பரிமாற்றங்களைத் தொடர்ந்தார். பகான் அரண்மனை என்று இன்றைய பிரதான சுற்றுலா மையத்தில் இருந்து எடுத்த அகழாய்வுப் படங்கள் ஆர்வமூட்டுவதாய் இருந்தன.

bagan-palace13

bagan-palace9

bagan-palace8

bagan-palace7

bagan-palace6

bagan-palace5

bagan-palace3

bagan-palace2

சீனாவுடன் நெருக்கமான உறவு இருந்ததை அகழாய்வு காட்டுகிறது. நிறைய சீன கலன்கள், தென்கிழக்கு ஆசிய பொருட்கள், மண்பாண்டங்கள், சிதலமடைந்த புத்தர் தலை சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

வட்ட வடிவமான நிறைய கட்டுமானங்கள் கிடைத்துள்ளன. படங்களில் பார்த்தாலே தெரிகிறது.

bagan-palace1

bagan-palace4

பௌத்தத்தின் விதான ஓவியங்களை வியக்காதவர் யார். ஏற்கனவே அஜந்தா பற்றி சுருக்கமாக இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன். அதனைப் போன்ற அழகான விதான ஓவியங்கள் பகான் ஆலயங்களில் இருக்கின்றன. கூகிள் படங்களில் தட்டிப் பாருங்கள்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் என்பதால், நீர் வழிப் பயணங்கள் விதான ஓவியங்களில் வரையப் பட்டிருக்கின்றன.

bagan-mural1

bagan-mural2

bagan-mural3
பகானில் பார்க்கவேண்டியவை

பகானில் பார்க்க வேண்டியவையாக இதனைக் குறிப்பிடுகிறார்கள்.

ஆனந்த ஆலயம் (Lozong Ananada Temple)

ananda_temple_bagan_wiki
Ananda Temple – Picture: Wiki

தம்மயங்கி ஆலயம் (Dhammayangyi Temple (Old Bagan))

dhammayangyi-temple2

தத்பியின்யூ ஆலயம் – இருப்பதிலேயே உயரமான ஆலயம் (Thatbyinnyu Temple (Nyaung U & Wetkyi-In)-Tallest Temple)

thatbyinnyu-temple-bagan

ஆமா, அதென்ன பகானின் தினசரி வாழ்க்கை –

மடாலயங்களில் மலரிட்டு வழிபாடு

புத்த மத மந்திரம் ஓதுதல்

விவசாயம்

இப்படிப் போய்கொண்டிருந்திருக்கவேண்டும்.

பகானின் வீழ்ச்சி

பத்தாம் நூற்றாண்டில் தொடங்கி 11, 12ல் உச்சத்தை அடைந்து விளங்கியிருக்கிறது பகான். அனவிரதரின் ஆட்சியில் கலாச்சாரம் பொருளாதாரம் சிறந்து விளங்கியிருக்கிறது. பகான் என்றாலே பணம் படைத்த நகரம் என்கிற பெயர் விளங்கியிருக்கிறது. தீராது சேர்ந்த பணம் அதனுடன் பிரச்சினைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. செல்வத்தைப் பார்த்து மதி மயங்கிய சேவகர்கள், இராணுவ அமைப்பினர் பகானின் அரசியலமைப்பைச் சீர் குலைத்தனர். இந்தியாவின் கஜினி முகமது படையெடுப்பைப் போல, மங்கோலியர்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்து கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் பர்மாவின் இனக்குழுக்களான அரக்கனீயர்கள்மான்கள், தென்கிழக்கு ஆசிய இனக்குழுவான ஷான்கள் (அஸ்ஸாம் பகுதியைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர்கள்) என்று பலரால் இந்த நகரம் சிதைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒரு சிற்றூராக இருப்பதாகத் தெரிகிறது. எனக்கு கொடும்பாளூர் நினைவிற்கு வருகிறது.

bikkhu

படங்களுக்கும் உரைக்கும் –

மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்


போன வருடம் மியான்மர் தேர்தல் முடிந்தது. போன மாதம் தாய்வான் தேர்தல் முடிந்தது. ஆசியாவின் இந்த முக்கியமான தேர்தல்கள் உங்களைப்போன்ற உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்துள்ளது. உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருந்தேன்.

பிள்ளையார் சுழி

தாய்வான் தேர்தலில் எதிர் கட்சிக்கான முதல் பெரிய வெற்றி இது. ஒட்டு மொத்த ஸ்வீப்!

CZTQwRIWkAEsuZ3

 

மியான்மர் தேர்தலில் 60களில் ராணுவ ஆட்சி கைக்குப் போன பிறகு முதன் முறையாக ஒரு ஜனநாயக அரசு நடந்துள்ளது.

c9784e58-85bb-45e8-bdd8-c725e543e1b6

 

பெரியண்ணன்

சீனா என்கிற மிரட்டல் நிழலில் தாய்வான் உள்ளது.

CZryJa9WQAMzc_4

 

இராணுவம் என்கிற அரட்டல் நிழலில் மியான்மர் உள்ளது.

 

ஸ்வீப்!

முன்னர் ஆளும் கட்சியாக இருந்த இருந்த சீன ஆதரவுக் கட்சி தாய்வானில மண்ணைக் கவ்வியுள்ளது.

FinancialTimes

ஆப் பாயில் ஜனநாயகத்தை நடத்திய மியான்மர் கம்யூனிச கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது

மகளிர் மட்டும்!

தாய்வானில் ஸாய் இங்-வென்

மியான்மரில் சூ கி

151110satish

2016ல் ஆசிய மக்களாட்சியை இரு பெண்மணிகளும் துவக்கி வைத்துள்ளனர். இருவருமே அரசியல் அனுபவம் பெற்றவர்கள். (நம்ப ஊர் ‘காந்தி’ குடும்பம் போல் இல்லாமல்).

பிச்சிடுவேன் பிச்சு

சுதந்திரமா. கனவு காணாதே. கண்ணா முழியத் தோண்டிடுவேன் என்று தாய்வானை எச்சரிக்கிறது சீனா. தாய்வான் முழுக்க முழுக்க எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்கிறது.

nytimes

 

எந்த ஒரு அரசியல் மாற்றத்தையும் நிர்ணயிக்கப்போகும் 25 சத இடங்களை நானே வைத்துக்கொள்வேன். வெளிஉறவு, எல்லைப் பாதுகாப்பு, இராணுவத்துக்கு அமைச்சரை நியமிக்க விடமாட்டேன். எப்பவேணா ஆட்சியைக் கலைப்பேன் என்று மிரட்டுகிறது மியான்மர் இராணுவம்.

CZWVG5UWkAAWhTL

சவால்

மிரட்டும் சீனா, வேலையில்லாத் திண்டாட்டம், தன் பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு, அதைப் பாதிக்காத மக்களாட்சி சீர்திருத்தம் என்று ஸாய்-க்கு தாய்வானில் நிறைய வேலைகள் காத்துள்ளன.

இனவெறி தாக்குதல்கள், தன்னாட்சி கூவல்கள், எதிர்பார்க்கப்படும் மெதுவான பொருளாதார வளர்ச்சி, அனுபவமே இல்லாத அமைச்சர்கள் என்று கூடை நிறைய பிரச்சினைகள் சூ கி-க்கு.

இரு நாடுகளிலும் பதவியேற்புக்குப்பின் நிலநடுக்கம் வந்தது!!!

CZf0A5iWAAElpkw

முக்கியமான ஒற்றுமை

இந்த இரண்டு நாடுகளுக்குமே நான் போனதில்லை!!!

monkey with banana

இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே. வளர்க பாரதம்.

Advertisements

ஏன் சூ கி நாடாள முடியாது? மியான்மர் தேர்தல் சிறப்புப் பதிவு


வருடம் திறந்ததிலிருந்து சிறப்புப் பதிவுதான் போட முடிகிறத ஒழிய மாமூல் பதிவுகளுக்குப் போக முடியலை.

வாகை சூடிய ஜனநாயக கட்சி

முன்னோடி இல்லாத ஒரு வெற்றியைக் கடந்த வருட தேர்தலில் பெற்றுள்ளது மியான்மரின் ஜனநாயக தேசீய லீக் கட்சி. இக்கட்சியின் தலைவர் ஆங் ஸான் சூ கி மியான்மரின் முதல் தலைவர் என்கிற புகழைப் பெறுகிறார். இதுவரை பல்வேறு இக்கட்டுக்கு உள்ளாக்கிய இராணுவத்தை எதிர்த்துப் போராடிய சூ கி தற்போது இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

ஆங் ஸான் சூ கி மற்றும் ஜெனரல் தான் ஷ்வே (2003 இராணுவ ஜெனரல்) PHOTO: AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES
ஆங் ஸான் சூ கி மற்றும் ஜெனரல் தான் ஷ்வே (2003 இராணுவ ஜெனரல்) PHOTO: AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGES

இவரது கட்சிக்கு எதிராகப் போட்டியிட்ட ஆளுங்கட்சியான தொழிலாளர் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சியை அடித்து நொறுக்கி வெற்றுள்ளார்.  மக்களவையில் 60 சத இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 57 சத இடங்களையும் வென்று வாகை சூடி உள்ளது ஜனநாயக தேசீய லீக்.

Aung San Suu Kyi (picture-AP)
Aung San Suu Kyi (picture-AP)

ஜனாதிபதி ஆவாரா சூ கி?

பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள சூ கியின் கட்சி, பல்லாண்டுகளாக அங்குள்ள இராணுவ ஆட்சிக்கு மாற்றாக முதல் ஜனநாயக  ஆட்சியைத் தர இருக்கிறது. அவர் மட்டுமல்ல. அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பலரும் ஆட்சி அனுபவம் இல்லாதவர்கள். சரி. சூ கி பிரதமர் ஆவார் என்று நாம் திருப்திப் பட்டுக்கொள்ளலாமா?

முடியாது. 2011ல்  ஒரு சாம்பிளுக்கு ஒரு இடைக்கால அரசை அமைக்க இராணுவம் அனுமதி கொடுத்தது. அப்போது ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி உள்ளது மியான்மரின் இராணுவ ஆட்சி. சூ கி பிரதமராக வர இயலாத வர்ணம் அரசியலமைப்புச் சட்டத்தை இராணுவம் மாற்றியதாகத் தெரிகிறது.

என்றாலும், நம்பிக்கையான ஒருவரை அவை முன்னவராக தன் கட்சி நிர்ணயிக்கும் என்று சூகி அறிவித்துள்ளார். இன்றைக்கு பார்லிமெண்டின் முதல் கூட்டம் நடந்துள்ளது.

மக்களவைக்கு வருகை தரும் சூ கி (picture Gulf News)
மக்களவைக்கு வருகை தரும் சூ கி (picture Gulf News)

அதென்ன அயோக்கியத்தனம்?

ஒரு நபர் ஜனாதிபதி ஆக கண்டிசன்கள்

 • உள்ளுர் குடிமகனாக இருக்கவேண்டும்
 • பெற்றோரோ, கணவன்/மனைவியோ, சட்டப்பூர்வமான பிள்ளைகளோ, பிள்ளைகளைக் கட்டியவர்களோ எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளின் ஆதரவைப் பெற்றிருக்கக் கூடாது.
 • மேலே சொன்ன யாருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை இருக்கக் கூடாது
 • ஜனாதிபதிக்கு இராணுவப் பயிற்சி இருக்கவேண்டும்.
 • இரு அவைகளின் 25 சத இருக்கைகள் மீது துண்டு போட்டு இராணுவம் இடம் பிடித்துக்கொள்ளும்.
 • இராணுவ, உள்துறை, எல்லை விவகாரங்களுக்கு அமைச்சர்களை நிர்ணயிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை.

சூ கி யின் இரு மகன்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். எனவே அவர் ஜனாதிபதி ஆக முடியாது. இதை மாற்றவேண்டுமானால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்.

Myanmars pro-democracy leader Aung San Suu Kyi, center arrives to participate in the inauguration session of Myanmar's lower house parliament Monday, Feb. 1, 2016 in Naypyitaw, Myanmar. Hundreds of newly elected legislators, a majority of them from pro-democracy leader Aung San Suu Kyi's party, on Monday began a parliament session that will install Myanmar's first democratically elected government in more than 50 years.(AP Photo/Aung Shine Oo)
Myanmars pro-democracy leader Aung San Suu Kyi, center arrives to participate in the inauguration session of Myanmar’s lower house parliament Monday, Feb. 1, 2016 in Naypyitaw, Myanmar. Hundreds of newly elected legislators, a majority of them from pro-democracy leader Aung San Suu Kyi’s party, on Monday began a parliament session that will install Myanmar’s first democratically elected government in more than 50 years.(AP Photo/Aung Shine Oo)

எந்த ஒரு அரசியலமைப்பு மாற்றத்திற்கும் 75 சதவீத மெஜாரிடி வேண்டும். “ஆகவே சூ கி அம்மா, நீ 75 சத மெஜாரிடியைப் பெற்று வா பார்ப்போம். ஆனால் 25 சதவீத இடத்தை இராணுவமே வைத்துக்கொள்ளும்.” என்று சொல்லி சீல் குத்திவிட்டார்கள்.  ஆக, எந்த ஒரு அரசியலமைப்பு மாற்றத்தையும் தனது வீட்டோ பவரால் கழுவி, இராணுவ விளக்கமாறு வைத்துக் கூட்டித் தள்ளிவிடும்.

Myanmar's members of parliament attend the new lower house parliamentary session in Naypyidaw on February 1, 2016. Myanmar entered a new political era on February 1 as Aung San Suu Kyi's party took their seats in a parliament dominated by pro-democracy MPs who carry the hopes of a nation subjugated for decades by the military. AFP PHOTO / Ye Aung THU
Myanmar’s members of parliament attend the new lower house parliamentary session in Naypyidaw on February 1, 2016. Myanmar entered a new political era on February 1 as Aung San Suu Kyi’s party took their seats in a parliament dominated by pro-democracy MPs who carry the hopes of a nation subjugated for decades by the military. AFP PHOTO / Ye Aung THU

ஆனால் அப்படி ஒரு மாற்றமில்லாது சூ கி ஜனாதிபதி ஆக இயலாது.

தனக்குப் பிடிக்கலை என்றால் அரசைக் கலைக்க தேசீய இராணுவ மற்றும் பாதுகாப்பு சபைக்கு உரிமை உண்டு.

New National League for Democracy lawmakers arrive for the opening of the new parliament in Naypyitaw February 1, 2016. After decades of struggle, hundreds of lawmakers from Aung San Suu Kyi's camp will form Myanmar's ruling party on Monday, with enough seats in parliament to choose the first democratically elected government since the military took power in 1962. REUTERS/Soe Zeya Tun
New National League for Democracy lawmakers arrive for the opening of the new parliament in Naypyitaw February 1, 2016. After decades of struggle, hundreds of lawmakers from Aung San Suu Kyi’s camp will form Myanmar’s ruling party on Monday, with enough seats in parliament to choose the first democratically elected government since the military took power in 1962. REUTERS/Soe Zeya Tun

சரி நமது விருப்பம் என்ன?

இந்த வெற்றி சாதாரணமாகக் கிடைக்கவில்லை என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை நண்பர்களே. எனவே நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் இவரது பதவியும் நிம்மதியாக இருக்கப்போவதில்லை. ஏன்? கீழே உள்ள படம்தான் அதற்குப் பதில்.

Myanmar's military members of parliament attend the new lower house parliamentary session in Naypyidaw on February 1, 2016. Aung San Suu Kyi led her party into a new session of Myanmar's parliament February 1, with lofty expectations that the first popularly-elected government in decades can reset a country ground down by half a century of military rule. AFP PHOTO / Ye Aung THU
Myanmar’s military members of parliament attend the new lower house parliamentary session in Naypyidaw on February 1, 2016. Aung San Suu Kyi led her party into a new session of Myanmar’s parliament February 1, with lofty expectations that the first popularly-elected government in decades can reset a country ground down by half a century of military rule. AFP PHOTO / Ye Aung THU
 • சோனியாவிற்கு தலையாட்டி பொம்மையாக ஒருத்தர் கிடைத்தார். தாடி வளர்த்து கண்ணீர் விட ஜெயலலிதாவிற்கு ஒருத்தர் கிடைத்தார். சூ கி அப்படி ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இராணுவ இம்சை இருப்பதால் இவரது பதவி ரொம்ப கிரிடிகல்!
 • பார்லிமெண்டு பேச்சைக் கேட்காத இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கியில் ரவையை ரொப்பிக்கொண்டு பக்கத்திலேயே நிற்கிறார்கள். சுமார் 15 ஆண்டுகாலம் வீட்டுச் சிறையில் சூ கியை வைத்தவர்கள். என்றாலும் பகைமையை வெளிக்காட்டாது, அவர்களுடன் சமாதானமாக இருந்து காரியத்தைச் சாதிப்பதுதான் மேட்டர்!
 • தனித்தமீல் குழுமாதிரி அங்கும் இனக்குழுக்கள் உள்ளன. தன்னாட்சி கேட்டு அவர்களும் பிரச்சினைகள் எழுப்பி வருகின்றனர். சில பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சூ கி பிற மைனாரிடி குழுக்களால் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படலாம். ஆனால் சூ கி இதை ஏற்கனவே சமாளித்து, கூட்டாட்சியைத் தருவேன் என்று  உறுதி அளித்துள்ளார்.
 • மெஜாரிடி பவுத்த குழுவினருக்கும் மைனாரிடி இஸ்லாமிய குழுக்களுக்கும் பிரச்சினை கனன்று கொண்டு  உள்ளது
 • 2014-15 கால கட்டத்தில் 8 சதவீத பொருளாதா வளர்ச்சியைப் பெற்றுள்ளது மியான்மர். முன்னாள் ஆட்சியாளர்களின் பங்களிப்பு என்று சொல்கிறார்கள். கார்கள் இறக்கமதி அதிகரித்துள்ளது. கைபேசிகள் தாராளமாகப் புழங்குகின்றன. என்றாலும் விவசாய பகுதிகளில் வறுமை இன்னும் அதிகமாவே உள்ளது.
 • மியான்மர் – சீன உறவில் தடுமாற்றமாகவே உள்ளது

இவ்வளவு பிரச்சினை இருந்தாலும், மியான்மருக்கு இது ஒரு சிறந்த மாற்றம். வாழ்த்துவோம்.

Myanmar's National League for Democracy leader Aung San Suu Kyi's identification is seen among new lawmakers before the opening of the new parliament in Naypyitaw February 1, 2016. After decades of struggle, hundreds of lawmakers from Aung San Suu Kyi's camp will form Myanmar's ruling party on Monday, with enough seats in parliament to choose the first democratically elected government since the military took power in 1962. REUTERS/Soe Zeya Tun
Myanmar’s National League for Democracy leader Aung San Suu Kyi’s identification is seen among new lawmakers before the opening of the new parliament in Naypyitaw February 1, 2016. After decades of struggle, hundreds of lawmakers from Aung San Suu Kyi’s camp will form Myanmar’s ruling party on Monday, with enough seats in parliament to choose the first democratically elected government since the military took power in 1962. REUTERS/Soe Zeya Tun

வளர்க பாரதம்!

Advertisements

இந்திய ஜப்பானிய கூட்டுப் பயிற்சி


Malabar Exercise:

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைகளுக்கிடையேயான முத்தரப்பு கடற்படை ஒத்திகை Exercise Malabar எனப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா மட்டும் இந்தியக் கடல் பகுதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தப் பயிற்சியில் 2015ல் ஜப்பானும் கலந்து கொண்டுள்ளது.

INS Shakti replenishing USS Carl Vinson
அமேரிக்கக் கப்பலுக்கு எரிபொருள் ஏற்றும் இந்தியக் கப்பல் (படம் விக்கி)
1992ல் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியில் சில சமயங்களில் ஆஸ்திரேலியாவும் சிங்கப்பூரும் கலந்து கொண்டுள்ளன. Malabar 2009, 2011, 2014 ஆகியவை ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்தியிருந்தாலும், அவை அனைத்தும் ஜப்பானிய கடலிலேயே நடைபெற்றன.  இத்தணைக்கும் அந்த சமயத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இலங்கையில் சீனா வலுவான உறவு கொண்டிருந்தது. 2015 அக்டோபரிலிருந்துதான் ஜப்பான் இந்தப் பயிற்சியில் நிலையான பங்குதாரராகச் சேர்ந்தது.

இந்தியாவின் ‘கிழக்கைப் பார்’ கொள்கையும், ஜப்பானின் ‘தென்சீனக் கடல் சுதந்திரமும்’ மற்றும் அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மறுசமநிலைக் கொள்கையும் ஓரிடத்தில் குவிந்து இந்தப் பயிற்சியை நடத்தி உள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மலபார் பயிற்சி சீனாவைக் குறிவைத்து நடத்தப்பட்டதல் என்று ஒரு அமெரிக்க கடற்படை உயர் அதிகாரி கூறியிருந்தாலும் பெய்ஜிங்-குக்கு அதில் எந்த சந்தேகமும் எழ வேண்டிய அவசியம் இல்லை.

Sahyog-Kaijin:

மலபார் பயிற்சி முடிந்த 3 மாதத்திலேயே அடுத்த பயிற்சி ஜப்பான் மற்றும் இந்தியா இடையே நடந்துள்ளது. பொங்கலுக்கு சென்னை வர்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்த போது கடலுக்கு வர்ணம் பூசின அணி வகுத்து வந்த கடற்பாதுகாப்பு கப்பல்களும், சீறிப் பறந்து வந்த ஹெலிகாப்டர்களும். ஜப்பானிய மற்றும் இந்திய துருப்புகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புப் பயிற்சியாக இது கருதப்பட்டது.

Sahyog-Kaijin. Photo (c) The HIndu
Sahyog-Kaijin. Photo (c) The HIndu

பின்னர் பத்திரிகையாளர்களை இந்திய துணை அட்மிரல் பிஷ்த் மற்றும் ஜப்பானிய துணை அட்மிரல் ஹனா மீஷு ஆகியோர் சந்திதனர். ஹனா தமது கூட்டு ஒத்திகையில் தமது முழு திருப்தியைத் தெரிவித்தார். என்றாலும் தென்சீனக் கடல் பற்றிய கேள்விகளுக்கு இருவருமே நேரடியாக பதிலளிக்கத் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.

இவ்விரு பயிற்சிகளும் அமெரிக்காவின் சீனக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் கீழ் வருகிறது என்று யாராவது சொன்னால் அதில் உண்மை உள்ளதா என்று நமக்குத் தெரியாது.

இதெல்லாம் எங்க கொண்டு போய் சேர்க்குமோ?

ஆசியாவில் சீனா பற்றவைத்த புகை படர்ந்து கொண்டே இருக்கிறது. சுற்றி உள்ள அவ்வளவு நாடுகளுடனும் வாய்க்கால் தகறாரு. அதனால் அதைச் சுற்றி உள்ள நாடுகள் ஓரணியில் திரள வாய்ப்புகள் அதிகமானது. அது அமெரிக்காவிற்கு வேலையை எளிதாகவும் ஆக்கியது.

கடல் நடமாட்ட சுதந்திரம் (FoN – Freedom of Navigation) என்கிற செயல்பாட்டின் கீழ் தென்சீனக் கடலின் ஒவ்வொரு சீனப் பகுதியிலிருந்தும் 12 நாட்டிகல் தொலைவில் ஒரு போர் கப்பலை நீந்தச் செய்கிறது அமெரிக்கா.

சமீபத்தில் தென்சீனக் கடலில் மண்ணைக் கொட்டி ரொப்பி ஒரு ஏர் ஸ்ட்ரிப்களைக் கட்டி வைத்துள்ளதை அறிவீர்கள். அந்தத் தீவின் மேல் ஒரு அமெரிக்க விமானம் பறந்ததற்கு சீனாக் காரன் தையா தக்கா என்று குதிப்பதையும் படித்திருப்பீர்கள்.

China builds military airstrip on disputed Woody Island Picture (c) http://newsandupdates.com

அதே பகுதியில் அதிகரிக்கும் சீன நடமாட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறது ஜப்பான். போதாக்குறைக்கு சென்காகு மற்றும் டயாயு தீவுகளிலும் ஜப்பானுக்கு சீனாவின் கழுத்தறுப்பு தொடர்கிறது

ஆனால் அணி சேருவது என்பது கொஞ்சம் சங்கடத்திற்கிடமான செயல். அதை இந்தியா உணர்ந்தே எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புவோமாக.

 

Advertisements