கரோனா பொதுமுடக்க காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஓசையில்லாமல் ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமாா் 600 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலாக உருவாகும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் அனைத்து உரிமைகளும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் இதை ‘சீன மாகாண மசோதா’ என்று அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. ஏற்கெனவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு தாரைவாா்த்து கொடுத்துவிட்டு, இரண்டாவதாக இலங்கையின் [...]