இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம். இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால் [...]
Category: சென்னை
அதிகாலை மாமல்லபுரம் பயணம்
ஒரு சிறிய பயணத்தை அடுத்த நாள் காலையில் மேற்கொள்வது என்று முடிவானது. எந்த இடம்?! முதல் கேள்வி. சிறுவாபுரி முருகன் கோயில் என்று முதலில் முடிவானது. அந்த தொலைவு போகும் அளவிற்கு பொறுமை இல்லை. நல்ல சாலைதான் ஆனால் தென்சென்னையிலிருந்து வட சென்னை எல்லையைத் தாண்டுவது என்பது எரிச்சலான காரியத்தில் ஒன்று. முதல் நாள் இரவு அந்த திட்டம் மாறி கோவளம் பீச் என்று முடிவானது. புதிதாக வண்டி வாங்கி அலுவலகம் தவிற வேறு எங்கும் போகாத [...]
சென்னை புறநகர் ரயில் ATVM எந்திரங்கள்
இது ஒரு பாவகரமான பொட்டி. பல லகரங்களை விழுங்கிவிட்டு தேமேஎன்று இடத்தை அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அசமந்தம். மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தின் இன்றைய நிலை என்ன? பெரிய வரிசை. மதிய வெய்யிலில் வியர்த்து வழிந்து கிண்டி இரயில் நிலையத்தின் வெளியில் டபுள் S போட்டு நின்று கொண்டிருக்கும் கூட்டம். உள்ளே இரண்டு கவுண்டர்கள். அதில் ஒன்றில் ஆள் இல்லை. அந்த ஒரு டிக்கட் கிளர்க் என்கிற ஆண்டவரிடம் அருள் பெறக் காத்திருக்கும் ஜனங்களின் எண்ணிக்கைதான் எத்தணை [...]
பை பை லிபர்டி
நேற்று எதேச்சையாக லிபர்டி திரையரங்கம் உள்ள சாலையில் நடந்து சென்றபொது, அவ்விடம் கீற்றுக்கொட்டகை கொண்டு மூடப்பட்டிருப்பதையும், வாசல் கதவுகள் பெயர்ந்திருப்பதைப் பார்த்ததும், சற்றே துணுக்குற்றவனாய் உள்ளே நோக்குகையில் திரையரங்கம் மூடப்பட்டது தெரிய வந்தது. அதன் சேர்கள் அனைத்தும் வெளியே கடாசப்பட்டிருந்தன. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர்களும் வருத்தப்பட்டவாறு திரையரங்கம் மூடப்பட்டதைச் சொன்னார்கள். கோடம்பாக்கத்தில் பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்த போது, அடுத்த வீதியில் அமைந்திருந்த இத்திரையரங்கம் அவ்வப்போது எங்களுக்கு பொழுது போக்கு மையமாக உதவியிருக்கிறது. சும்மா வாங்க ஒரு [...]