அந்தத் தருணத்திற்குரியவற்றைப் பதிய வைக்கும் புகைப்படம் ஒரு கவிதை. ஒரே தருணம் மாறுபட்ட சலனங்களை வெவ்வேறு நபர்களிடம் ஏற்படுத்தும். அந்தத் தருணம் ஏற்படுத்திய சலனத்தை, மொழியின் சமநிலையைச் சற்று அசைத்துப் பதிய வைக்கும்போது, அந்தக் கவிதை சுவை மிகுந்ததாகிறது. 32 கவிதைகள் கொண்ட கவிதைத் தொகுப்பு. செவ்விழை கலையாத நன்னாரி சர்பத் போன்று! மாற்றப்படாத வீடு (கவிதைத் தொகுப்பு) கவிதை: தேவதேவன் பதிப்பு: முதல்பதிப்பு ஜுன் 1984, எஸ்பியார் புக்ஸ், தூத்துக்குடி. NLB: காணவில்லை. கன்னிமாரா: [...]