“Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?


பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும்….

சிலிகான் ஷெல்ஃப்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.

குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.

டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.

A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது…

View original post 301 more words

BOMB! | Jim Eldridge


வணக்கம்! இன்று நான் BOMB! புத்தகத்தை ஒரு மனிதன் வெடிகுண்டைப் பார்த்த மாதிரி பதட்டத்துடன் படித்தேன். இது ஒரு சாகசக் குறுநாவல். BOMB! ஆசிரியர்: Jim Eldridge படங்கள்: Dylan Gibson பதிப்பு: Edinburgh : Barrington Stoke, 2011. NLBயில் முன்பதிவு கன்னிமாராவில் முன்பதிவு செய்ய -  காணோம். அருஞ்சொற்கள் பட்டியல் இந்தப் புத்தகத்தில் ராப் என்பவன் குண்டை செயல் இழக்க வைக்க வந்தான். ஆனால் டாம் என்பவன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டைச் செயல் இழக்க [...]

The Knight Of Swords And Spooks | Terry Deary


பிறகு ராபின் ஆர்வமாக ராகம் போட்டுப் பாட ஆரம்பித்தான். "அந்த எலி, அந்தப் பூனை அப்புறம் அந்த லோவல் என்ற நாய் எல்லா இங்கிலாந்தையும் ஆள்கின்றன, ஒரு காட்டுப் பன்றியின் கீழ்." "அதற்கு என்ன பொருள்?" ஜார்ஜ் வினவினான். The Knight Of Swords And Spooks - Terry Deary's Knights' Tales ஆசிரியர்: Terry Deary பதிப்பு: A & C Black Publishers Ltd, லண்டன். முதல் பதிப்பு 2009. NLBயில் முன்பதிவு [...]

Storm | Kevin Crossley-Holland


“அப்புறம் அந்தப் பேய்?” ஆனி கேட்டாள். “அது மேலும் கீழும்  போய் சுற்றிவரும். இவ்வழியாக செல்பவர்களை பயமுறுத்தும்” என்றாள் விள்ளா. சகோதரிகள் இருவரும் அமைதியானார்கள், ஒளிர்ந்து கொண்டிருந்த நீர் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். Storm - குறுநாவல் ஆசிரியர் - Kevin Crossley-Holland பிரிட்டிஷ் மொழி பெயர்ப்பாளர், சிறார் இலக்கிய ஆசிரியர் விக்கி - Storm (novella) NLB முன்பதிவு - Storm / Kevin Crossley-Holland ; illustrated by Alan Marks. கன்னிமாரா முன்பதிவு - [...]

எட்டுக்கால் குதிரை – கொ.மா.கோ. இளங்கோ


வணக்கம் நண்பர்களே. என் பெயர் கண்ணன். நான் எட்டுக்கால் குதிரை பற்றி எழுதப் போகிறேன். எட்டுக்கால் குதிரை ஆசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ பதிப்பு: பாரதி புத்தகாலயம், சென்னை. முதல்பதிப்பு டிசம்பர் 2014 NLBயில் முன்பதிவு செய்ய:  Eṭṭukkāl kutirai / Ko. Mā. Kō. Iḷaṅkō. கன்னிமாராவில் முன்பதிவு செய்ய: கிடைக்கவில்லை இந்த புத்தகம் எண்களைக் கதாபத்திரங்களாகக் கொண்ட விசித்திரமான புத்தகம். இந்தப் புத்தகத்தை நான் வாசித்து முடித்த உடன் இன்னொரு கதை நியாபகத்துக்கு வந்தது. அந்தக் [...]