பவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன். -ஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது ஆசிரியர் - வண்ணதாசன் பதிப்பு - அமேசான் மின் புத்தகம் பார்க்க - ஒளியிலே தெரிவது - சிறுகதை ஒளியிலே தெரிவது - தொடர்ச்சி யாரும் இழுக்காமல் தானாக… ஒரு கூழாங்கல் ஒரு போதும் தேயாத பென்சில் மீன்கள் இல்லாத தொட்டியில் [...]
Category: சிறுகதை
ஜுவின் கதை | பால் சக்காரியா
ஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராமு உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜுவின் கதை 🖋ஆசிரியர் - பால் சக்கரியா 🖌 ஓவியம் - அஸ்மா மேனன் 🖋 தமிழாக்கம் - சங்கர ராம சுப்ரமணியன் (English) 🖨 பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக [...]
முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி
சிறிது நேரம் கழித்து வந்த ரியாஸ் முகந்தை உடனே வீட்டுக்குப் போகும்படிக் கூறினான். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டதாக அவன் கூறினான். முகந்தின் குடும்பம் உடனே அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றான் அவன். முகந்த் மற்றும் ரியாஸ் ஆசிரியர் மற்றும் ஓவியர் - நீனா ஸப்னானி மொழிமாற்றம் - அம்பை பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக முன்பதிவு - NLB கன்னிமாரா - தளம் [...]
பூக்கதைகள் | ஜெ தேவிகா
"திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது.." மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, "என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?" என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. "கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?" என்று [...]
Launch Pad|Shelly Bryant
'அதைப் பார்த்தாயா' தந்தை கேட்டார் 'எதை' திரும்ப ரோபோ கேட்டது. அம்மா செய்தித்தாளை வாசித்தபடியே, இங்கு நடப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தார். 'செய்தியில் காட்டிய வீடியோவை' ரோபோவைப் பார்த்தபடியே சொன்னார் தந்தை. 'இல்லை நான் பார்க்கவில்லை' 'அவர்கள் தென்னிந்தியக் கடலில் மீண்டுமொரு தீவு அமைக்கப் போகிறார்களாம். 2042ல் முடித்துவிடுவார்களாம்.' 'ஆம். நான் கேட்டேன்.' தந்தை, ரோபோவை இன்னும் கூர்ந்து பார்த்தார். 'நீ பார்க்கவில்லை என்று இப்பொழுதுதான் என்னிடம் சொன்னாய்.' தாய் நடுக்கத்துடன் தன் புருவங்களின் கீழே தன் கணவரைப் [...]