கொடும்பாளூர் – ஒரு கோடை மழைப் பயணம்


வேண்டுக, வந்தாகவேண்டும்.
விழைக, பொழிந்தாகவேண்டும்.
அறம்நின்று ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன?
– கிராதம்

வருணனைப் பற்றிய ஜெயமோகனின் வர்ணனைகள் இவை. தகிக்கும் கோடையில், எங்கள் விழைவிற்கு வருணன் இசைந்தது போலப் பெய்த கோடை மழையின் ஊடே மோட்டார் பைக்கில் சுற்றித் திரிந்த கதை இது. கண்ணனை எழுதச் சொன்னேன். புல்வயல், குடுமியான்மலை அன்று பார்த்தது போல இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

கொடும்பாளூரின் தற்கால தோற்றம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நேர்த்தியாக தோட்டமிட்டுள்ளார்கள். கல் தளம் வைத்து பாதை வைத்துள்ளார்கள். புல்வெளி பார்ப்பதற்கு மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது. தொல்லியல் துறையின் புத்தக வெளியீடுகள் விற்பனைக்கு உள்ளன. (நுழைவுக் கட்டணம் 15 ரூபாய்).

map

மூவர் கோயிலில், ‘சுந்தர சோழனின் சிற்றரசனான இருக்குவேள் அரசன் பூதி விக்கிரம கேசரி கட்டியது’ என்று தொல்லியல் துறையின் பலகையில் வாசித்த உடன் சஞ்சய், ‘சுந்தர சோழன் ராஜராஜனின் அப்பா’ என்று பதிலளித்தான். ஒரு வரி பதில்தான் என்றாலும் எங்களுக்கு ஒரு காலக்கோடு கண் முன்னே வந்து நின்றது. அதாவது, ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைக் காட்டிலும் காலத்தால் முந்தையது.

நகரம் முழுதாய் அழிந்து, அமைதியாய் இங்கே உறங்கிக் கொண்டுள்ளது.

இனி கண்ணன் எழுதியது

எங்களுக்கு ஒரு நல்ல பயணம் அமைந்தது. நாங்கள் மொத்தமாக 4 இடங்களைப் பார்த்தோம்.

 • பழங்கால சிவன் கோயில், புல்வயல்
 • நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை
 • மூவர் கோயில், கொடும்பாளூர்
 • ஐவர் கோயில், கொடும்பாளூர்

பழங்கால சிவன் கோயில், புல்வயல்

சிவன் கோயில் புல்வயல். Photo (c) http://www.panoramio.com/user/6254896
சிவன் கோயில் புல்வயல். Photo (c) http://www.panoramio.com/user/6254896

பாதி இடிந்து போய்விட்டது. முக்கியமாக கோபுரம் இடிந்து இருந்தது. அங்கே ஒரு பெரிய சிவன் கோயிலும் அதைச் சுற்றிச் சிறிய பரிவாரக் கோயில்களும் இருந்தன. இந்தக் கோயிலை யாரும் தற்போது வழிபடுவதில்லை.

நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை

மலை மடிப்பில் செதுக்கப்பட்டுள்ள நாயன்மார்களின் புடைப்புச் சிற்பம்
மலை மடிப்பில் செதுக்கப்பட்டுள்ள நாயன்மார்களின் புடைப்புச் சிற்பம் Pic (c) pudukkottai.org

நாங்கள் சிவன் நரசிம்மர் இன்னும் பல சிற்பங்கள் பார்த்தோம். அங்கே ஒரு மலை இருந்தது. மலையில் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் சிவன் பார்வைதி இருந்தன.

மூவர் கோயில், கொடும்பாளூர்

Photo0196
மூவர் கோயில் கொடும்பாளூர்

அங்கு மூன்று கோயில்கள் இருந்தன. ஆனால் ஒரு கோயில் இடிந்து இருந்தது. அங்கே ஒரு அழகான தோட்டமட் இருந்தது.

Photo0191
மூவர் கோயில் வளாகத்தில் பெய்த மழை, அதன் பாதையில் ஓடி, படிக்கிணறுக்குள் இறங்குகிறது. வறண்ட பூமியில் நிறைந்திருந்த கிணறு.
Photo0193
படிக்கிணறு களிப்பு
Photo0195
படிக்கிணறு களிப்பு
Photo0198
மூவர் கோயில் – புல்வெளித் தோட்டத்திற்கான பாதை.

ஐவர் கோயில், கொடும்பாளூர்

ஐவர் கோயிலில் ஐந்து கோயில்கள் இருந்தன (ஒரே தளத்தில்). ஆனால் எல்லாம் இடிந்து உள்ளன.

ஐவர் கோயில் வளாகம். Massive structure ஆக இருந்திருக்க வேண்டும். சுத்தமாக அழிந்து புதைந்துள்ளது.
மழைக் கருக்கலில் ஐவர் கோயில் வளாகம். Massive structure ஆக இருந்திருக்க வேண்டும். சுத்தமாக அழிந்து புதைந்துள்ளது.
Advertisements

New Marine Cove – A Picnic


Good morning friends.

I am Kannan.

Happy Lunar New Year. This is the year of the Rooster. Lot of activities are going on to celebrate the Chinese New Year. I took part in this celebration.

There were slides, shooting guns and Shaking ship.
There were slides, shooting guns and Shaking ship.
My daddy's company gave us CNY cover with dollars
My daddy’s company gave us CNY cover with dollars
When we were walking, we enjoyed this Pongal lightings
When we were walking, we enjoyed this Pongal lightings

I am going to write about New Marine cove. We went to an excursion from our school on 20th January.

We enjoyed our Excursion. My partner is Mahish Raj.

All my classmates were happy to see different play items.

They were
1. slides
2. swings
3. games
4. bridge
5. trucking
6. ship and a medium size canteen.

I’m going draw what I played in my Excursion.

New Marine Cove, ECP, Singapore
New Marine Cove, ECP, Singapore
New Marine Cove, ECP, Singapore
New Marine Cove, ECP, Singapore
Underground slide and long rope bridge. Photo: Straits Times
Underground slide and long rope bridge. Photo: Straits Times
new-marine-cove-4
Rotating chairs in Childrens’ play ground

I had a good time in my excursion. I am interested to go there once again.

Happy Chinese New Year

Thank you.

கோடை கால பயணமும் விமான அரசியலும்


கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.

2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன

அழகிய பள்ளி

வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே மரம் வளர்கிறது என்று பொருள்!

இந்த முறை கவனித்த ஒரு செய்தி – சிங்கையிலிருந்து சென்னை செல்லும் அனைத்து இந்திய விமான கம்பெனிகளும் தத்தம் இரவுச் சேவையை நிறுத்திவிட்டன. பைத்தியக்காரத்தனமான முடிவுதான். நாமென்ன செய்ய முடியும் சொல்லுங்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூகிளையும் சில forumகளையும் அராய்ந்தால் சில செய்திகள் நம் கவனத்திற்கு வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையில் இருநாட்டு விமானங்களும் பறக்கும் போது, இந்த நாட்டு விமான நிறுவனங்களுக்கு பாதி பங்கும், நம் நாட்டு விமானங்களுக்குப் பாதிப் பங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும். நண்பர்களே, உன்னிப்பாகக் கவனித்தால், அயல் நாட்டு நிறுவனங்கள் மட்டுமே தம் ஒப்பந்ததைப் பயன்படுத்தி இயன்றவரை இலாபம் ஈட்ட முயன்றிருக்கும். ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் தம் பங்கை என்றுமே சரிவர செய்ததில்லை. விபரத்திற்குக் கீழே பார்ப்போம்.

ஆறுக்கு மூணா? நாலுக்கு மூணா?

மொத்தம் 6 பிளைட்டு விடுறோம். உனக்கு 3 எனக்கு 3 என்று பேசியிருக்கிறார்கள் என்று வைப்போம். அவர்கள் பக்கம் 3 வண்டிகளை இயக்கி நம் பக்கமும் 3ஐ இயக்கினால் ஆளுக்கு 50 சதம் என்று வைக்கலாம். மாறாக. அவர்கள் 3 வண்டிகளை விட்டு, நாம் ஒரு வண்டிதான் விடுகிறோம் என்றால் 6க்கு 3 என்கிற அவர்கள் பங்கு 4க்கு 3 என்று அதிகரித்துவிடுகிறது அல்லவா. மறைமுகமாக நம் பங்கைக் குறைத்து அவர்கள் பங்கை அதிகரிக்க நாமே விட்டுக்கொடுக்கிறோம் அல்லவா.

முதலில் சென்னையிலிருந்து துபாய் செல்லும் வழித்தடத்தைப் பார்ப்போம். இந்த வழித்தடத்தில் இயங்கும் 6 வண்டிகளில் 4 அரபு நாட்டு வண்டிகள். அதில் எமிரேட்ஸ் மட்டும் ஒரு நாளைக்கு 3 முறை பறக்கிறது.  இதில் எமிரேட்ஸ் இயக்குவது போயிங் 777 ஜம்போ.  226 எகானமி, 50 பிசினஸ் வகுப்பு, 8 முதல் வகுப்பு டிக்கட்டுகள் அளிக்கலாம்.

ஆக ஒரு வண்டிக்கு 284 பேர்.

ஒரு நாளைக்கு 3 வண்டி போனால், 852 பேர். ஒரு வாரத்திற்கு 5964

தவிர 737 இயக்கம் flydubai வண்டி வாரத்திற்கு மூன்றுமுறை வந்து போகிறது. ஒரு முறைக்கு 210 பேர். வாரத்திற்கு 630.

ஆக துபாய் நிறுவனங்களால் வாரத்திற்கு 6594 டிக்கட்டுகள் விற்க முடியும்.

 

சரி இப்ப இந்திய நிறுவனங்களுக்கு வருவோம்.

மகராஜா (ஏர் இந்தியா) இயக்கும் ஏர் பஸ் ஏ321 மூலம் 210 பேர்.

இண்டிகோ இயக்கும் ஏர்பஸ் ஏ320 மூலம் 210 பேர் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு நாளைக்கு 410 பேர். வாரத்திற்கு 2870. கிட்டத்தட்ட துபாய் நிறுவனங்கள் விற்கும் டிக்கட்டுகளை விட பாதிக்கும் குறைவு.

(சீட்டு எண்ணிக்கைகள் பொதுவான  அந்தந்த விமான கம்பெனிகளின் விபரத்திலிருந்து எடுத்திருப்பதால், ஏறக்குறைய கொடுத்துள்ளேன். சென்னை விடுத்து ஏனைய நகரங்களுக்குச் செல்வதினாலாவது நம் பங்கைப் பெறுகிறோமா என்று பார்த்தால் இல்லை)

இத்தகைய நிலைதான் ஏனைய வழித்தடங்களிலும் நீடிக்கிறது. இத்தணை வருமானம் துபாய் கம்பெனிகளுக்குத் தருகிறோமே. துபாய் எர்போர்டில் இந்தியர்களை நடத்தும் விதம் இருக்கிறதே. இந்தியர்களில் காசு மட்டும் வேண்டும். மற்றபடி அனைவரும் கூலிக்காரர்களாகத்தான் நடத்துவோம் என்கிறார்கள் இந்த நல்லவர்கள்.

இதன் விளைவாக இந்தியர்களின் சர்வதேச போக்கு வரத்துகளில் ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு கம்பெனிகள் காசை அள்ளுகின்றன. முதல் நிலை நகரங்கள் விடுத்து திருச்சி, விசாகப்பட்டிணம், கொச்சி போன்றவற்றிற்கு ஏற்கனவே சிங்கப்பூரின் SIA விமானங்களை இயக்குகிறது. நம்புங்கள் நண்பர்களே. இவற்றில் திருச்சி தவிர யாதொரு நகரங்களிலிருந்தும் சிங்கப்பூருக்கு எந்த ஒரு இந்திய விமானமும் பறப்பதில்லை. திருச்சியிலிருந்து பறக்கும் விமானமும் அகால நேரத்தில் கிளம்புவதால் பெரும்பாலானவர்கள் அதைத் தவிர்த்துவிடுவார்கள். SIA மேலும் புனே மற்றும் மதுரைக்கு அனுமதி கேட்டுள்ளாக படித்திருக்கிறேன்.

இதனால் என்ன ஆகிறது, ஐரோப்பா, கிழக்கு அமெரிக்கா செல்லும் இந்தியப் பயணிகளால் வளைகுடா ஏர்லைன்சுகள் இலாபமீட்டுகின்றன. தெற்காசியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியா செல்லும் இந்தியப் பயணிகளால் தெற்காசிய ஏர்லைன்சுகள் இலாபமீட்டுகின்றன.

சென்னை துபாய் வழித்தடம்

chennai-dubai

சென்னை சிங்கப்பூர் வழித்தடம்

chennai-singapore

சரி பயணக்கட்டுரையில் போய் ஏன் இந்த தகவல்கள் என்றால், மகராஜா எர்லைன்சின் தாமதம்தான். இத்தணை தத்தளித்தாலும் கூசாமல் அரை மணியாவது தாமதமாக இயக்குவது மகராஜாவிற்கு வழக்கமாகிவிட்டது. வியாபார நிமித்தமாகச் செல்பவர்கள் யாரும் மகராஜாவைச் சீந்துவது குறைவு. அவர்களின் நேரம் தவறாமை அப்படி. ஏதோ பொத்தாம் பொதுவாக ஊதிவிட்டுப் போகவில்லை. கூகிள்காரனே அப்படித்தான் சொல்கிறான்.

maharaja delay

இருக்கும் தாமதத்தைச் சரிப்படுத்தாமல் ட்ரீம்லைனர் விடுவதால் மட்டும் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

தொடர்புடைய கட்டுரை – ஏர் இந்தியாவும் பிரபுல் பட்டேலும் ப்ளூம்ஸ்பெரி பதிப்பகமும்

சிங்கை – புதுக்கோட்டை

இவ்வளவு இருந்த போதிலும் கூட இன்னும் மைனாரிடியான மகராஜா ரசிகர்கள் என்னைப் போன்று இருக்கத்தான் செய்கின்றனர். சொல்லி வைத்தார் போன்று நான் கிளம்பிய அன்று 45 நிமிட தாமதம். இவர்கள் திருந்தப் போவதில்லை.

ஆனால் ட்ரீம் லைனர்களின் இன்டீரியர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். சர்வதேச விமானங்களில் ஆகச் சிறந்த விமானம் இது. பளீரென்ற திரையுடன் டிவி, தானாக வர்ணம் மாறும் ஜன்னல், சத்தம் குறைந்த பயணியர் கேபின் என்று கவர்ச்சி காட்டுகின்றனர்.

image
Before boarding in to first dreamliner – AI 347 @ Changi

ட்ரீம் லைனரில் நான் உணர்ந்தவை –

 • நவீன இண்டீரியர்
 • பயணிகள் கேபினில் ஒலி குறைவாகவே வரும் என்கிறார்கள்
 • நல்ல legspace
 • எப்பவாவது காணப்படும் foot restகள் அனைத்து வண்டிகளிலும் உள்ளன
 • மேஜிக்கல் ஜன்னல்
 • USB சார்ஜர்
 • நவீன டிவிக்கள்

ஆனால் இது எதுவுமே மகராஜாவுக்குத் தேவையில்லை. அதற்குத் தேவையானது –

 • நேரம் தவறாமை
 • அந்நிய நாடுகளுக்கான நேரடி விமானங்கள்
 • பொருத்தமில்லாத நேரத்தைத் தவிர்த்து peak hour விமானங்களை இயக்குதல்.
 • ஏர் இந்தியாவின் வழித்தடத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்காமல் இருப்பது.

இந்திய விமான சந்தை இலாபமற்றது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இலாபம் இல்லாத துறைக்கா இவ்வளவு அந்நிய விமான கம்பெனிகள் போட்டி போடுகின்றன? நான் நம்பவில்லை. நமது பொறுப்பில்லாத்தனம் ஒரு பெரிய காரணமாக என் இருக்கக் கூடாது?

காலை விமானம் என்பதால் விடிகாலையில் எழுந்து, பஸ் பிடித்து வந்து, தாமதம் காரணமாக காத்திருந்து, கடுமையான பசி வந்துவிட்டது.

image
Delicious Maharaja breakfast – Masal dosai, idly & Upma

 

image
Delicious Maharaja breakfast – Masal dosai, idly & Upma

கண்ணாடி ஏதும் தலையில் விழுந்து தொலைக்கப் போகிறது என்ற பயத்துடனேயே சென்னை விமான நிலையத்திற்குள் உலாவ வேண்டியுள்ளது. 5 நிமிடங்களில் குடிவரவுகாரர்கள் விட்டுவிட்ட போதிலும் வெளியே வரும்போது வரை படிவத்தைத் தராது படுத்தினார்கள் சென்னை சுங்கத்துறை தூங்குமூஞ்சிகள். அதனால் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளியேறும் வாயிலில் ஒரே குழப்பம். முன்னே சென்றவர்கள் பின்னே வர முயல. பின்னால் வருபவர்கின் டிராலியில் அவர்கள் மோதிக்கொள்ள, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களுக்குரிய பாணியில் நம்மை வரவேற்றனர்.

சென்னையில் கண்ணன் என்னுடன் சேர்ந்து கொண்டான். அர்த்தராத்திரி திருச்சி செல்லும் மகராஜாவில் நேரத்திற்குக் கிளம்பினோம்.

திரிசூலம் ரயில் நிலையத்தில் சீனமொழி கற்றுத்தரும் விளம்பரம் எங்கள் கவனத்தை ஈர்த்தது. look east policy திரிசூலம் வரை வந்ததைக் காண மகிழ்ச்சியே.

image
Hoarding about Spoken Chinese language training center, Tirusulam station, Chennai

செக்கின் கவுண்டருக்கு முன்னதாகவே நாங்கள் சென்றுவிட்டதால் வரிசையில் யாருமே இல்லை. Where are you going? என்று கேட்ட புக்கிங் கிளார்க்கிடம், திலுச்சி என்று பதிலளித்தான் கண்ணன். இன்னும் ர வரலையோ என்று புன்னகைத்தார். அதைக் கண்டு கொள்ளாமல் ‘சுங்கப் படிவத்தை என்னிடம் கொடு’ என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

‘எனக்கெல்லாம் குளுராது’ என்று மேட்டிமைத்தனம் பேசியவன், விமான நிலையத்திற்குள் புகுந்ததுமே இழுத்துப் போர்த்திக்கொண்டான்.

image
Mid night selfie with Kannan while waiting for IX 682 at Chennai

‘ஏர் இந்தியா நல்லாவே இருக்காது’ என்று ஒரு புறம் குறை கூறிக்கொண்டு, அதில் கிறுக்கி வைத்தால் நீயும் இந்தியனே. டிரிம்லைனரிலும் இது போன்ற கிறுக்கலைப் பார்த்தேன். ஏர் இந்தியா சேவை குறை பாடுள்ளது என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் அதற்காக அதன் பயணிகள் எல்லோரும் சிறந்தவர்கள் என்று நான் கருதவில்லை. புதிதாக வந்துள்ள ஒரு விமானத்தின் எதிர்த்த சீட்டில் பேனாவை வைத்து கிறுக்க ஒருவனால் முடிகிறது என்றால் அவனது மனநலத்தை சந்தேகிக்க வேண்டி உள்ளது. கீழ் கண்ட பயணிகளையும் ஏர் இந்தியா பொறுத்துக்கொள்ளவேண்டி உள்ளதே பரிதாபம்தான்.

 • சீட்டுகளில் கல்வெட்டு வெட்டுபவர்கள்
 • எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சாக்லெட் பேப்பர்கள், டிஸ்யூ பேப்பர்களை நுழைப்பவர்கள். ஆனால் ‘எல்லாவற்றையும் செய்துவிட்டு பராமரிப்பே சரியில்லை’ என்று பேசுபவர்கள்.
 • செக்கின் செய்துவிட்டு பிராந்தி வாங்க வரிசையில் நின்று தாமதமாக ஏறுபவர்கள். ஆனால் ‘சிங்கப்பூர் ஏர்லைன் டான்னு கிளம்புவான் சார்’ என்று மேட்டிமைத்தனம் பேசுபவர்கள்.
 • ஓசி டிக்கட்டில் பயணம் செய்து, ஏர் போர்ட் ஷாப்பிங்கில் தாமதப்படுத்தும் அரசியல் வியாதிகள். ஆனால் ‘என்னாய்யா வண்டி. டீசல் எஞ்சின் மாதிரி ஓட்டுறான்’ என்று அலுத்துக்கொள்பவர்கள்.
 • கக்கூசை நாசப்படுத்துபவர்கள். ஆனால் ‘நாத்தம் குடலைப் பிடுங்குது.  கக்கூசையே சரியா கழுவலை இந்த மோடி’ என்று அளப்பவர்கள்.
 • உள்ளே தரப்படும் சாராயத்திற்காக ஏர் ஹோஸ்டசிடம் சண்டை போடுபவர்கள்
 • சாப்பிட்டுவிட்டு தான் சிந்தியதைக் கூட சுத்தம் செய்யாது ட்ரே யை அப்படியே மூடுபவர்கள்
image
These vandalizing Indians need some mental attention – IX 682

புதுக்கோட்டை – பனைய மங்களப்பட்டி

குட்டித்தூக்கத்தைப் போட்டவுடன் சகோதரர் அருளில் பனையமங்கலப்பட்டிக்கு பயணம். 4 நாட்கள் கூடவே இருந்தாலும் கண்ணன் மற்றவர்களிடன் பிசி. சமீபத்தில் மழை பெய்ததால் வயலெங்கும் புது மழைத் தண்ணீர். விளையாடத்தான் நேரம் கூடிவரவில்லை.

image
Getting ready for another trip, Pudukkottai

 

image
After a rainy day, it is very pleasant to roam around

 

image
After a rainy day, it is very pleasant to roam around

 

image
Shopping selfie, Pudukkottai

அடுத்து பழநிக்கு பயணம். கடுமையான வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இன்னும் பழநி ஒளிப்படங்கள் வந்துசேரவில்லை.

திரும்பி சென்னை வரும்போது வெயில் மூர்க்கமானதாக ஆகியிருந்தது. கடுமையான வியர்வை. வேட்கை. ஆவ்வ்.

சென்னை – சிங்கை

திரும்ப கிளம்புவது என்பது மனபாரம் மிகுந்த காரியம். இந்த முறை சென்னையிலிருந்து நேரத்திற்குக் கிளம்பியது மகராஜா.

image
Maharaja’s On-time departure from Chennai to Singapore

 

image
Magical windows @ Maharaja’s Dreamliner gives a night effect inside the cabin in a hot afternoon of peak Chennai summer

 

image
Another delicious lunch

சரியான நேரத்திற்குக் கிளம்பினாலும் 10 நிமிடங்கள் தாமதமாகத்தான் சிங்கை வந்தார் மகராஜா. வரும் வழியில் எங்காவது டீ குடிக்க நிப்பாட்டியிருப்பார் போல!

Back to pavilion. பழைய குருதி கதவ திறடி.

இன்னும் நம்பிக்கை உள்ளது. மைனாரிடி மகராஜா ரசிகர்கள் சார்பில்…

சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்


அஜந்தா முடிந்த கையோடு, நம்ப ஊரைப் பற்றி நினைவு படுத்தியே ஆகனும் அல்லவா. அதற்காக இந்தப் பழைய பதிவு..

புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை அஜந்தாவை நினைவூட்டின…..

பார்க்க உரை மற்றும் படங்கள் – சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்

கிட்டத்தட்ட முழுக்க அழிந்துவிட்ட நடனமாதுவின் ஓவியம் - photo (c) unknown
கிட்டத்தட்ட முழுக்க அழிந்துவிட்ட நடனமாதுவின் ஓவியம் – photo (c) unknown

 

வர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்!


முழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன.

பயண ஆயத்தம்

எலிஃபெண்டா

எல்லோரா

பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் நூற்றாண்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலய ஓவியங்கள் 7ஆம் நூற்றாண்டு. எல்லாவற்றுக்கும் முன்னதாக – அதாவது – கிமு 2 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 6, 7 ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியங்கள், இந்திய ஓவியக்கலைக்கு சான்றாக அஜந்தாவில் கிடைத்துள்ளன.

 

அஜந்தா நம் கண்களுக்குப் புலப்பட்ட விதம் விந்தையானது. காட்டுக்கு வேட்டையாடப்போன ஒரு வெள்ளைக்கார துரை ஜான் ஸ்மித் கண்களுக்கு புலி தெரியவில்லை, மாறாக ஒளி தெரிந்திருக்கிறது. அடர்ந்த காட்டுக்கு நடுவே, அரை வட்ட வடிவில் சலசலத்து ஓடும் நதியின் கரையில் துயில் கொள்ளும் புத்தரின் ஒளியாக இருந்திருக்கவேண்டும். பிறகு இந்தக் கலைப்பொக்கிஷம் நாட்டுடமையாக்கப்பட்டு, ஆய்வுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமைந்திருக்கிறது.

From Ajanta

சாதவாகனர்கள் காலத்திலும் (கிமு 2) வாகாடகர்கள் காலத்திலும் (கி பி 6, 7) இங்கு குகைகள் குடையப்பட்டுள்ளன. அனைத்தும் புத்த மடாலயங்கள். அவற்றின் பக்கவாட்டு சுவர்கள், விதானங்கள் தூண்கள் என்று எங்கு தொட்டாலும் வர்ணமயம். புத்த ஜாதகக் கதைகள் ஓவியங்களாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. ஜாதகக் கதைகளும் தெரிந்து, தொல்பொருள் ஆர்வமும் மிக்கவரா நீங்கள். சொல்றேன் கேட்டுக்கோங்க! அஜந்தாவை ஒரு நாளில் உங்களால் சுற்றிப்பார்க்க இயலாது.

அஜந்தா பயணம் தொடங்குகிறது, அவுரங்காபாத் ஜல்காவ் இந்தூர் நெடுஞ்சாலை. இங்கிருந்து தோராயமாக 100 கிமீ. From Ajanta
மலைகள் பள்ளத்தாக்குகள் அவற்றை கோந்து போட்டு ஒட்டுவது மாதிரி ஓடி வரும் சிற்றாறுகள் From Ajanta

ஜாதகக் கதைகள் என்றாலும், வரையப்பட்டுள்ள ஆடை அணிகலன்கள், இசைக் கருவிகள், பறவைகள் என்று பல சங்கதிகள் ஆய்வாளர்களுக்குத் தீனிபோட்டுக்கொண்டே இருக்கின்றன. அஜந்தா ஓவிய காலத்திற்கும் சம காலத்திற்கும் உள்ள தொடர்புகளை ஆய்வாளர்கள் வியப்புடன் சொல்கின்றனர்.

முதல் இரண்டு குகைகளிலேயே, உங்கள் எண்ணத்தை நிறைக்கும் ஓவியங்கள் அள்ள அள்ளக் குறையாமல் வந்து விடும். வந்து நிற்பது பிட்சுக்கள் பூமி. அவர்கள் அழிந்தாலும், அவர்களின் ஆன்மாக்கள் உறைந்துள்ள ஒரு அமானுட சாட்சியம் அந்த குகைகளும், சிற்பங்களும் ஓவியங்களும்.

முதல் தரிசனம், அதாங்க குகை 1 From Ajanta
பத்மபாணி (கருவரைக்கு இடப்பக்கம்) From Ajanta
பத்மபாணி, கருவரை, வஜ்ரபாணி From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta
Miracle of Sravasti கண்களுக்கு விருந்தாக குகை 2 From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 6 From Ajanta

ஓங்கி வளர்ந்த ஆலமரம் போல, பெரிய சைத்திய வடிவ குகைகளை இங்கு காணலாம். கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றில் ஒன்றான பத்தாம் எண் குகைதான் வெள்ளைக்காரர் கண்களுக்குத் தென்பட்டிருக்கிறது.

கண்களுக்கு விருந்தாக குகை 9. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சைத்திய வடிவ குகை From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 9. மனிதனின் தினசரி வாழ்க்கையை சித்திரிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன From Ajanta
அனேகமாக அஜந்தா குகைகளில் பழமையானது இந்த 10ஆம் எண் குகைதான்.
இதன் பெரிய வடிவம்தான் எட்டி நின்று பார்த்த ஆங்கிலேயருக்கு அஜந்தாவை
அடையாளம் காட்டியுள்ளது. இவ்வளவு சிறப்பு இருந்தாலும் இன்னொரு
முக்கிய விஷயம், இந்தியாவின் மிகப் பழமையான ஓவியம் (கிமு 2)
இங்கேதான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது From Ajanta

அந்த கிமு காலத்திய குகைகளின் ஓவியங்களைப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படவே செய்யும். பிறகென்ன, அவ்வளவு தத்ரூபமாக, மிகச் சரியான அளவுகளில் முகம், பாவனை, நகை நட்டுகள்!! யாருப்பா நீங்க எல்லாம். அந்தக் காலத்திலேயே அவ்வளவு அறிவாளிகள் வாழ்ந்த மண்ணா இது!!

கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ
என்று இருக்கும் என்று நினைக்கவேண்டாம்.
நேர்த்தியாக உள்ளது. ஹீனயான காலத்தைச் சேர்ந்த
அந்த ஓவியங்களில் காணப்படும் ஆடை அணிகலன்கள்,
நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில் உள்ளன.
பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக
இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை
அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே
அடையாளம் காண முடிந்தது From Ajanta
கிமு 2ஆம் நூற்றாண்டு ஓவியம். அதற்காக ஏனோதானோ என்று
இருக்கும் என்று நினைக்கவேண்டாம். நேர்த்தியாக உள்ளது.
ஹீனயான காலத்தைச் சேர்ந்த அந்த ஓவியங்களில் காணப்படும்
ஆடை அணிகலன்கள், நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில்
உள்ளன. பெண்பிள்ளைகளுக்கு மிகவும் ஆர்வமான ஓவியங்களாக
இருக்கும்! பல ஓவியங்களில் உள்ள உருவங்களை
அவற்றின் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தே
அடையாளம் காண முடிந்தது From Ajanta
குகை 10 From Ajanta
Dying princess, cave 16 From Ajanta
யானைக் கதை குகை 17 From Ajanta
மேகக்கூட்டத்தில் பறந்து வரும் இந்திரன், குகை 1 From Ajanta
பானம் அருந்தும் தம்பதியர், குகை 17 From Ajanta
கண்களுக்கு விருந்தாக, குகை 17, இப்ப சொல்லுங்க என்ன மாதிரியான இடம் இது.
பிரம்மாண்டமான உயரத்தில் ஓரிடம் பாக்கியிலல்லாமல் சுவர், விதானம் என்று
அனைத்து இடங்களிலும் ஓவியத்தால் நிரப்பிவைத்துள்ளது
மட்டுமின்றி, ஜாதகக்கதைகளையும் விளக்கியிருக்கிறார்கள் From Ajanta

ஓவியத்திறமையுடன் சிற்பத்திறமையையும் இங்கே காணமுடியும். அலங்கார வளைவுகள் என்ன, அதன் அலங்காரங்கள் என்ன, அதில் உள்ள சிற்பங்களின் நேர்த்தி என்ன…

குகை 19, பிற்கால மகாயான காலத்தைச் சேர்ந்த இந்த சைத்திய
குகை மிக அழகான நேர்த்தியான சிற்பங்களையும்,
கல் அலங்கார வேலைப்பாடுகளையும் உள்ளடக்கியது From Ajanta
கண்களுக்கு விருந்தாக குகை 19 From Ajanta
சரியா சொல்லுங்க. மேல உள்ள டிசைன் நல்லா இருக்கா, கீழ உள்ள டிசைன் நலலா இருக்கா. குகை 23 From Ajanta

மஹாபரிநிர்வாண்!

குகை 26, அஜந்தா பயணத்தின் கடைசி அத்தியாயம் இந்த சிறப்பான
குகையோடு முடிகிறது. வெளி அலங்காரம் மற்றுமின்றி,
உள்ளே உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் உங்கள் நேரத்தைத்
தின்பது நிச்சயம் From Ajanta

இந்த குகை உங்கள் தேடலின் முடிவு, உள்ளத்தின் எழுச்சி.

வலது ஓரத்தில் ஒரு மனிதர் நிற்கிறார், குகையின் உயரத்தை அனுமானித்துக்கொள்ள உதவும் From Ajanta
இந்த வடிவத்தை புத்தரின் மார்பு எலும்புகளுக்கு உருவகப்படுத்துகிறார்கள் From Ajanta

புத்தருக்கு இடையூறு செய்ய ஆளா இல்லை?! மாரா இருக்கிறான். முதல் குகையில் ஓவியமாக வந்து தொந்தரவு செய்தவன், இந்த குகையில் சிற்பமாக அதே வேலையைச் செய்கிறான்.

புத்தரும் மாராவும். முதல் குகையில் உள்ள ஓவியம் இங்கே சிற்பமாக உள்ளது From Ajanta
யானையில் ஏறி தன் தீய சக்திகளுடன் வந்து புத்தரைத் தாக்கவரம் மாரா From Ajanta
மாராவின் புதல்விகள் புத்தரின் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார்கள் From Ajanta
பெரிய சிற்பமாக இருந்தாலும் அதில் ஒள்ள ஒவ்வொரு சிறு சிறு சிற்பங்களும் மிக தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார்கள் From Ajanta

என்னால் ஏன் புத்தனாக முடியவில்லை என்பதற்ககான பதில் விளங்கியது. இந்த கல் வடிவிலான மாராவின் மகளே என் மனதைக் கவர்ந்துவிட்டாளே! பிறகெங்கே தவம் பயில்வது!

மாராவின் மகள். என்ன ஒரு அசைவு. Dynamism!
From Ajanta

என் தலைவன்… கூடவே இருந்தான்.. கூடவே நடந்தான்.. கூடவே உணவு உண்டான்.. கதைகச் சொன்னான். அற்புதங்கள் நிகழ்த்தினான். எதிர்த்த தீய சக்திகளை வென்றான். கடை சாரி மக்கள் துயர் தீர்த்தான். இதோ என்னை நீங்குகிறான். பிட்சுக்களின் வாழ்வில் நிறைந்தவன். தன் பணி துறந்து உறங்குகிறான்.

மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta
மகாபரிநிர்வானம் குகை 26 From Ajanta

உலகம் உய்க்க வந்தாயே சித்தார்த்தனே, இவ்வுலகம் திருந்தும் முன்னர் நீ அவ்வுலகம் திரும்பியதேன்?

34 குகைகள் – எல்லோரா – குகைகளைத்தேடி 3


நீண்ட இடைவெளி. விடுப்பில் தாயகம் சென்று சுற்றி திரும்ப வந்து 10 நாளாகியும் நூல்களிலோ, வலைப்பதிவிலோ நாட்டம் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்றால் திரும்ப மனதை ஒருமுகப்படுத்துவது பெரிய சிக்கலாகிவிடுகிறது. இந்தத் தொடர்பதிவை முடிக்கவேண்டும். ‘எங்க ஊரு..’ தொடர்பதிவிற்கு சக பதிவர் ரஞ்சனி நாராயணன் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தருக்கிறார். அதையும் எழுதவேண்டும். (இன்னுமா எழுதலை என்று அவர் கையில் கிடைத்ததை எடுத்து கடாசும் முன்னர் எழுது முடித்துவிடுவேன்)

இந்தப் பயணக்கட்டுரையின் முந்தைய இரண்டு பதிவுகளை்ப பார்க்க..

குகைகளைத்தேடி 1

சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2

எல்லோரா பயணத்திலிருந்து மீண்டு, ஒரு வாரம் அலுவலகம் சென்று ஆணிகளை முடித்துவிட்டு அடுத்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தொடங்குகிறது அடுத்த பயணம். மாலை விரைவாக தங்குமிடம் சென்று ரெண்டு நாள் துணிகளை எடுத்துக்கொண்டு, வெளியே வந்த போது மணி 7. 9 மணி சுமாருக்கு தாதர் ரயில் நிலையத்தில் வண்டி ஏறவேண்டும். விரைவாக போரிவளி நிலையம் சென்று உள்ளுர் ரயிலில் தொத்திக்கொண்டு (இந்த முறை ரெண்டாம் கிளாஸ்தான்! சூடுபட்ட பூனை) தாதர் ரயில்நிலையம் அடைந்த போதுதான் குழம்பம் ஆரம்பித்தது. சென்னை சென்ட்ரல் போன்ற எக்கச்சக்க பிளாட்பார்ம்கள். வந்து நின்ற உடன் கிளம்பும் ரயில்கள், அவற்றில் பெயர் பலகை பெரும்பாலும் இல்லாமலிருப்பது மிகுந்த சிக்கலை உண்டு பண்ணிவிட்டது. பதபதைப்புடன் இருந்தாலும் அங்கிங்கு விசாரித்து சரியான நடைமேடையில் உட்கார்ந்து கொண்டு ரயிலுக்கான காத்திருப்பு தொடங்கியது.

சுத்தமாக இந்தி தெரியாத காரணத்தால், பயண ஏர்பாட்டாளர் பங்கஜ்ஜைத் தொடர்பு கொண்டு ஓட்டுநர் எண் கேட்டுக்கொண்டேன். தவிற இரயில் நிலையத்திற்கே வந்துவிடுவார் அல்லவா என்று ஒன்றுக்கு இருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன். ரயில் 10 நிமிடம் லேட்டாக வந்தது. ஒரு வழியாக ஏறி விடிகாலையில் அவுரங்காபாத் வந்து சேர்ந்தாலும், கடும் குளிரின் காரணமாக இரவெல்லாம் தூக்கம்பிடிக்கவில்லை.

From Ellora

சொன்னார் போலவே ஓட்டுநர் என் பெயர் பலகையுடன் காத்திருந்தார். நான் தங்குவதற்கு ஒரு நல்ல விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தார்.

“நீ தூங்கு. 8 மணிக்குக் கிளம்பலாம். இங்க தென்னிந்திய உணவு விடுதி ஒன்று இருக்கிறது. அங்க கூட்டிப்போறேன்” னு சொல்லிட்டு ஓட்டுநர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இரண்டு மணிநேர தூக்கம்.  7 50க்கே வரவேற்பரைக்குச் சென்று காத்திருந்தேன். சொன்னார் போலவே வந்தார். அருகில் உள்ள ஒரு ஓட்டல். தென்னிந்திய உணவு என்று அவர் கேசரி வாங்கிக் கொண்டார். அவர் பரிந்துரையின்பேரில் நான் தோசை வாங்கி, ஏண்டா வாங்கினோம் என்று வருத்தத்துடன் உணவை முடித்துக்கொண்டேன்!! கொஞ்சம் திராபையாகத்தான் இருந்தது.

போலாம் ரைட்!

பயணம் கிளம்பியது. அவுரங்காபாத் நம்ப ஓட்டுநருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. புகழ்ந்து கொண்டே வந்தார். 15 நிமிடங்களில் நகர் நீங்கினோம்.

குல்தாபாத்

அவுரங்கசீப் சமாதியைக் காட்டினார். எல்லோரா மிகுந்த நேரம் எடுக்கும் என்று பட்டது. எனவே நான் அவரை எல்லோராவிற்கே போகச்சொன்னேன்.

போகிற வழியில்…

எல்லோரா பயணம், தமிழ்நாட்டு சாலைகள் போல. அங்கங்கே பள்ளம்From Ellora
மலைகள், மேடு பள்ளங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் காடுகள்From Ellora
இப்படி சுத்தி வர மலைகள் இருந்தால் வேறு என்னதான் செய்வது? எல்லோரா உருவாகாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்From Ellora

 

தவுலதாபாத் கோட்டை

பீரங்கி ஏந்திய கோட்டை. முகமது பின் துக்ளக்கின் தலைநகராக விளங்கியது. பிறகு தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக இந்த இடம் கைவிடப்பட்டதாக சொல்கிறார்கள். பழைய பெயர் தேவகிரி!

தவுலதாபாத் கோட்டை, தவறிப்போய்விட்டது. உள்ளே நுழைய நேரம் அனுமதிக்கவில்லைFrom Ellora
இதுமாதிரி நிறைய வாயில்கள் அவுரங்காபாத் நகரில் உள்ளனFrom Ellora
மலைப்பாதை துவங்குகிறதுFrom Ellora
பாதைக்கு அருகிலேயே கோட்டைச் சுவர்கள்From Ellora

ளயனகளனகளயனக

காலைப் பொழுதில் குளுமையான பயணம்From Ellora

கிரினேஷ்வர் ஜோதிர் லிங்கம்

இந்த இடத்தை எல்லாம் நான் தேர்ந்தெடுக்கவில்லை. “எங்க ஊருக்கு வந்திட்டு இதையெல்லாம் பார்க்காம போனா எப்படி” என்று ஓட்டுநர் நண்பர் என்னை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு உள்ளே தள்ளிவிட்டார்.

12 ஜோதிர் லிங்கம் ஆலயங்களில் ஒன்று. எல்லோராவிற்கு மிக அருகில் வெருல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.

grineshwar one of the hindu temple ini ndia at maharastra
grineshwar one of the hindu temple ini ndia at maharastra

சிவ சிவ!

எல்லோரா

தூரத்தில் தெரிவது எல்லோரா கிராமம்From Ellora

சர சரவென மேலையேறி பர பரவென கீழிறங்கி எல்லோரா வந்து சேர்ந்தோம்.

உள்ளே நுழைந்ததும் கைலாசநாதர் கோயில் தென்படுகிறது. “ஏய், நிப்பாட்டுப்பா. நிப்பாட்டு..” என்று அலறினேன். “பொறு. நான் சொல்கிறமாதிரி பார்” என்று 32வது குகை வாசலில் இறக்கிவிட்டார். ஓரிடத்தில் வண்டியை நிப்பாட்டுவார். அருகில் உள்ள குகைகளைப் பார்த்துவிட்டு திரும்ப தொத்திக்கொள்வேன். பிறகு குகை வரிசையில் உள்ள அடுத்த இடத்தில் நிப்பாட்டுவார். இவ்வாறாக 4 இடங்களில் அவர் நிப்பாட்ட அனைத்து குகைகளையும் பார்க்க முடிந்தது.

குகைகளை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினால் இது பதிவாக இல்லாது, புத்தகமாக ஆகிவிடும். எனவே குறிப்பிட்ட படங்கள் மட்டும் கீழே!

மொத்தம் 34 குகைகள். இந்து குகைகள், பவுத்த குகைகள் மற்றும் ஜைன குகைகள். கலந்து கட்டிய ஒரு கலைப் பொக்கிஷம் இது.

பயணம் துவங்குகிறது, நேரடியாக கடைசி குகை 32. இந்திரசபா என்று இதனை அழைக்கிறார்கள் From Ellora

32வது குகை ரஜினி introduction மாதிரி. செம மாஸ்!

 

கொடி மரம், ஓங்கி வளர்ந்திருக்கிறது. என்னை விட உங்களை விட உயரம். From Ellora
கொடிமரம் இடப்புறம், இந்த கல்யானை வலப்புறம் From Ellora
கொடி மரத்திற்கு அருகில் குருவிக்கூடுகள் போல செதுக்கப்பட்ட குகைகள் From Ellora

என்னை மன எழுச்சி கொள்ள வைத்தவை, இதன் பிரமாண்டங்கள்!
குகைக்கோயிலில் மாடிகளும் விதானங்களும்
மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள்
அதன் அளவு! எவ்ளோஓஓஓ பெர்சுசு!! Massive!

கல்யாணைக்கு சற்று தள்ளி, மாடி!! From Ellora
அலங்கரிக்கப்பட்ட வாயில், வாயில் உயரத்தி்ற்கு அலங்காரம்!From Ellora
34 வது குகை, சமண ஆச்சரியரும் அடியவர்களும் From Ellora
அதே பாசிமணி மாலைதான். எத்தணை தடவை பார்த்தாலும் போதுமென்று தோணாது From Ellora
இதென்ன குகையா, இல்லவே இல்லை. மாட மாளிகை From Ellora
மறுபடி 33ஆம் குகை, (உள்ளுக்குள்ளயே பாதை இருக்கு இல்லையா. அதனால கொஞ்சம் ஓடிப்பிடிச்சு விளையாண்டேன்) இவங்க இந்திராணி From Ellora
பிரம்மாண்டமான தூண் அதில் அலை அலையாக அலங்காரங்கள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் மிக நேர்த்தியான சிற்பங்கள், என்ன சொல்றதுன்னே தெரியலை, கல்லுக்கு அலங்காரமா, அவங்க கடவுளுக்கே அலங்காரமா? From Ellora
இது தூண்தான், அதுவும் பாறையைக் குடைந்த தூண்தான். நம்பனும் From Ellora
பாரத்தைத் தாங்கவா, மனதைத் தாக்கவா, அவ்வளவு அழகான தூண்கள் From Ellora
இந்திர சபா From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
ஓவியம், எஞ்சியிருப்பது. From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
எண் 34 (50 படம் தாண்டியாச்சு, ஆனா இன்னும் ரெண்டு குகை தாண்டலை). மாடி மேலே மாடி கட்டி From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
இந்திர சபா From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை-34 From Ellora
கண்களுக்கு விருந்தாக இந்திரசபா குகை-33 From Ellora
சும்மா இருக்க முடியாம காலுக்குத் தோன்றியபடி நடந்தா இந்த குகை வருது.. என்ன விந்தை என்ன விந்தை. மலைக்குள் கண்டெடுத்த சொத்துக்கள், கண்களுக்கு நல்ல வேட்டை இன்று!! From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
குகை 29 இந்து குகைக் கோயில், கோபக் கனலாய் கொதிக்கும் சிவன். நான் நிற்கும் போது என் தோளில் நிற்கும் இன்னொருவரால்தான் அய்யனின் முகத்தைப் பார்க்க முடியும் From Ellora
ராவணனும் கயிலை மலையும், இந்த சிற்பம் எல்லோராவில் எத்தணை முறை உள்ளது என்று ஒரு புதையல் தேடும் போட்டி வைக்கலாம். From Ellora
சிவ பார்வதி திருமணம் From Ellora
கைலாயம் குகை 26 From Ellora
ஓரமாக ஒரு பாதை தெரிகிறதே From Ellora
அட அக்கரையில் சில குகைகள் தெரிகிறதே From Ellora
பிறகென்ன, அக்கரைக்கு ஓடி வந்தாச்சு. பாதை சற்று சிரமம்தான், தடுக்கி விழுந்தால் முகம் பெயர்வது நிச்சயம். மழைகாலத்தில் இங்குதான் அருவி விழுமாம். ஆறு அல்லது ஏழு மாதத்திற்கு விழுமாம். நமக்குக் கொடுப்பினை இல்லை From Ellora
பலராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சேஷசாயி விஷ்ணு, குகை 27 From Ellora
மகிஷாசுர மர்தினியில் துவங்கி முன்னர் பார்த்த அத்தனை சிற்பங்களும் உள்ள மண்டபம், குகை 27 From Ellora
குகை 26 From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 26 மற்றும் 27 From Ellora
கர்ப்பகிரகம், (விதானத்தில் சூரியன் சிற்பம்), குகை 25 From Ellora
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. எதை முதலில் பார்ப்பது எதை விடுப்பது.. அந்த சிவந்தானே இந்த பாடு படுத்தறான். குகைகள் 23, 24ஏ, 24பி From Ellora
கன்னிமார் From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
குகை 21, கண்களுக்கு விருந்தாக. அலங்கார மேடையின் மீது கம்பீரமாக நந்தியார் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 21 From Ellora
முதலை இருக்கையின் மீது கங்கை (உயரமான அழகான சிற்பம்) காலை வெய்யிலில் மின்னும் இந்த சிற்பம் அந்த குகையையே அழகாக்குகிறது From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
வாயில் வரவேற்க கங்கையும், தூண்களின் மேல் தாமரை மலரில் நின்றிருக்கும் பெண் சிற்பங்களும். அதிக வேலைப்பாடு கொண்ட இந்து சமய குகை இது (குகை 21) From Ellora
ஆனந்த தாண்டவம் From Ellora
சிகையலங்காரத்தைப் பாருங்க. இதென்ன கயிறா, மணலா. கல்லைப் பெயர்த்து சிற்ப ஓவியம் தீட்டி இருக்கிறார்கள் From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
குகை 21 ஐவிட்டு வெளியே வந்தாச்சு! From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 17ஏ From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 17ஏ From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 17ஏ (இந்த குகை வெளியே இருந்து பார்க்க சாதாரணமா இருக்கும். உள்ளே ஒரு சிற்பக் கிட்டங்கியே இருக்கும்!) From Ellora

கைலாசநாதர் கோயில்

இன்றளவும் எல்லோரா என்றால் கைலாச நாதர் கோயில்தான் யாருக்கும் நினைவிற்கு வரும். காரணம் இதன் அழகா? அப்படிப்பார்த்தால் அங்குள்ள எல்லாம் அழகுதானே! இதன் வடிவம்தான் முக்கியம் என்று தோன்றுகிறது. இவ்வடிவம் மேற்கிந்திய சிற்பக்கலைக்கு உரியதல்ல. தென்னிந்திய கோயில் கட்டடக்கலைக்கு உரியது. அத்ததண்டி கோயில்… ஆனால் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது (மகாபலிபுரம் உங்களுக்கு நினைவிற்கு வந்தால், சபாசு!)

திராவிட – ராஷ்ட்ரகூடர்களின் கோயில் கட்டிடக்கலைக்கு இந்த கைலாசநாதர் கோயில் மிகச்சிறந்த உதாரணம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஷ்ட்ரகூட மண்ணன் முதலாம் கிருஷ்ணனின் ஆட்சி கர்நாடகா வரை பரவியிருந்தது. பட்டடக்கல்லில் உள்ள விருப்பாக்ஷர் கோயில் வடிவில் இது அமைந்தது என்கிறார்கள்.

மலைக்க வைக்கம் பேரழகு. அந்நிய மண்ணில் என் சொந்தத்தைப் பார்த்தது போன்ற உணர்வு. பித்துப்பிடித்தது போல, அந்த கோயிலின் உள்ளே, வெளியே, மேலே என்று அலைந்து கொண்டிருந்தேன். வாழ்வின் மறக்க முடியாத, மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிற தருணங்களில் அதுவும் ஒன்று.

குகை 16, கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்திய கலையின் பொக்கிஷப் பெட்டகம் தெரியும், கைலாச நாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
லிங்கோத்பவர் (நம்ம ஊர் திருமயத்தில் உள்ளதை விட சின்னதுதான். :)) From Ellora
கோயிலை அணு அணுவாக ரசிக்க மூன்று திசைகளிலும் மாடங்கள் உள்ளன, முதல்மாடி, ரெண்டாம் மாடி, மூன்றாம் மாடி.. ஆகா ஆகா From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 16 – கைலாசநாதர் கோயில் From Ellora
கி பி 760ல் ராஷ்டிரகூடர்களின் பங்களிப்பாக இந்த குகையைக் கூறுகிறார்கள். (முதலாம் கிருஷ்ணன்) From Ellora
மூச்சு வாங்கியது அன்று, பாறை ஏறியதால் இருக்கும் என்று நினைத்தேன். இந்தப் படங்களைத் திரும்பப் பார்க்கும்போதெல்லாம் இதயத்துடிப்பு அதிகரிப்பது ஏன்?? மனமே இல்லாமல் அடுத்த குகையை நோக்கி போகிறேன். From Ellora
குகை 12. இண்டு இடுக்கில இருக்கிறமாதிரி தெரிகிறதல்லவா From Ellora
உள்ள பாருங்க, இது மூன்று மாடி ஆச்சரியம். குகை 12 From Ellora
குகை 10. எல்லோராவி்ன் ஒரே சைத்திய வடிவிலான குகை. புத்தமத குகைகள் துவங்குகின்றன From Ellora
அலங்காரம் மிகுந்த இந்த குகையை தேவலோக எஞ்சினியர் விஸ்வகர்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அவருக்கும் புத்த மதத்திற்கும் என்ன சம்பந்தம்? மகாயானத்தில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள்
From Ellora
கண்களுக்கு விருந்தாக From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 14 From Ellora
கண்களுக்கு விருந்தாக குகை 14 From Ellora
ஆதிமூலம். முதல் குகை. அனேகமாக குகை வெட்டுபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்து, பின்னர் புத்த துறவிகள் பயன்படுத்த ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிபி 6ஆம் நூற்றாண்டு From Ellora

அத்துணை குகைகளும் பாறையில் செதுக்கினார்களா, நம் மனதில் இறக்கினார்களா, மனம் முழுக்க எல்லோரா!

இது நம் முகவரி, நமது மூதாதையர் வீடு. அனைவரும் ஒரு முறையாவது செல்லவேண்டும் என்பது என் ஆவல்.

எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம். இப்பொழுது நம்மிடம் இருக்கும் கடைசி கோவணம், நமது பாரம்பரியம், கலாச்சாரம் மட்டுமே.

 

ஜெய் ஹிந்த்

சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2


குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது

 1. இரண்டாம் சனி – எலிஃபெண்டா தீவு
 2. இரண்டாம் ஞாயிறு – ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது)
 3. மூன்றாம் சனி – எல்லோரா
 4. மூன்றாம் ஞாயிறு – அஜந்தா

பயண ஆயத்தம்

இவ்வாறு முடிவு செய்து கொண்டதும் முதலாக செய்ய வேண்டிய வேலை அஜந்தா எல்லோராவிற்கான பயணம் மற்றும் தங்குமிடம் அல்லவா. நிறைய பயணம் செய்யவேண்டும் என்று தோன்றியது. அஜந்தா எல்லோராவைப் பற்றி எனக்கு அறியத்தந்தது எனது முதல் பாஸ் திரு. சுவாமிநாதன். எனவே அவருக்கே போன் அடித்தேன். ஜல்கான் ரயில்நிலையம் அஜந்தாவிற்குப் பக்கம் என்று ஆலோசித்தார். அதிலும் எனக்குப் பிரச்சினை இருந்தது. ஜல்காவிலிருந்து அஜந்தா பக்கமாய் இருக்கலாம். எல்லோரா 200 கிலோமீட்டர்களுக்கும் மேல். பயணத்திலேயே அதிக நேரம் போய்விடும். ஜல்காவிலிருந்து அஜந்தா சென்றுவிட்டு அடுத்த நாள், ஓட்டலைக் காலி செய்துவிட்டு எல்லோரா போய், பின் அங்கிருந்து அவுரங்காபாத்… நினைக்கையிலேயே கண்ணைக்கட்டுதே.. இறுதியில் ஒரு திட்டம் உறுதியானது

மும்பை – அவுரங்காபாத் (1 இரவு பயணம்)

அவுரங்காபாத் – எல்லோரா – அவுரங்காபாத் (1 மணிநேர பயணம் – ஒரு வழி)

அவுரங்காபாத் – அஜந்தா – அவுரங்காபாத் (ஒன்னரை மணிநேர பயணம் – ஒருவழி)

இது உறுதி செய்ய காரணம்

1. பயணம் எளிது

2. Saibaba Travels, Aurangabad – விக்கி டிராவல் தளத்தில் இவரைப் பற்றிய நல்ல ரிவ்யூக்கள் கிடைத்தன. போன் அடித்தேன். பங்கஜ் என்பவர் போன் எடுத்தார். நான் சொன்னது ஒரு வார்த்தைதான்.

“இந்த வாரம் போய் அடுத்த வாரம் நான் அவுரங்காபாத் வாரேன். எனக்கு ஹிந்தியோ மராத்தியோ மருந்துக்கும் தெரியாது. அஜந்தா எல்லோரா பார்க்கனும். ரயில விட்டு இறங்கினதிலிருந்து, திரும்ப ஏறும் வரை நான் உன் பொறுப்பு”

“கிளம்பி வாங்க ஜமாய்சிடலாம்” என்றார்.

“எனக்கு ஓட்டல் அறை முன்பதிவு செய்யனுமே. அதையும் பாத்துக்கிறியா”

“நோ ப்ராப்ளம்!”

அடுத்த கட்ட நடவடிக்கையாக தேவகிரி எக்ஸ்பிரசில் போக வர முன்பதிவு கனிஜோராக நடந்தது, அத்தணையும் 15 நிமிடத்திற்குள்! பயணம் பிரச்சினை இல்லாது இருந்தால்தானே குகைகளின் தேடல் முழுமை பெறும்!

சரி பயண ஆயத்தம் முடிந்தது, இனி ‘சிவன்மலைத்தீவு’ க்குப் போகலாம்!

01 டிசம்பர் 2007 – சிவன் மலைத்தீவு யாத்திரை

இரண்டாவது வார சனிக்கிழமை வந்தது. 6 மணிக்கு எழுந்து, அவசரக்குளியல். அடிச்சிப் பிடிச்சு போரிவளி நிலையத்திற்கு ஓடி வரோம். காரணம் உண்டு. எலிபெண்டாவிற்கு இந்தியா கேட்டிலிருந்து 9 மணி முதல் போட்டுகள் கிளம்பும். முதல் வண்டியைப் பிடிப்பதென்று விரைகிறோம். சென்ற வாரம் மாதுங்கா போகும்போது ரயில் கூட்டம் சக்கை போடு போட்டது. இந்த முறை தப்பிக்க ஒரு வழி?? சரி, முதல் வகுப்பு டிக்கட் எடுத்தால் என்ன.. சர்ச்கேட் போக வர 100ரூபாய் சொச்சம். நடைமேடையில் வண்டிக்காகக் காத்திருந்தபோதுதான் கொடுத்த அம்புட்டு ரூபாயும் வீண் என்று. முதல் வகுப்பு என்பதால் மட்டும் கூட்டம் குறைந்துவிடாது.

 

From Elephanta

தலைவிதியே என்று என்னை திணித்துக்கொண்டேன். தடதடக்க ஓடிய ரயில், அப்பும் கூட்டம். மும்பையின் காலை வெகு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.

From Elephanta

சர்ச் கேட் நிலையத்திலிருந்து இந்தியா கேட் நடக்கும் தூரம்தான். இந்தியா கேட் போய் சேரும்போதுதான் தெரிந்தது. அடடா. சாப்பாட்டுக்கு என்ன வழி!?

கடல நக்கர போனோரே

இந்தியா கேட் சென்று அங்கிருந்து படகைப் பிடித்து எலிஃபெண்டா செல்லவேண்டும். இரண்டு வகை பயணச்சீட்டுகள் உண்டு நண்பர்களே. கீழ்தளத்துக்கு கம்மி ரேட். மேல் தளத்துக்கு தனி ரேட். தம்பதியாகப் போனால் கீழ் தளத்திலும், ஜோடியாகப் போனால் மேல் தளத்திலும் போகலாம். அட. யாருப்பா இங்க கல்ல விட்டு அடிக்கிறது?

From Elephanta

படகு ரிவர்சுல போய், திசைமாற்றிக்கொண்டு மேற்குப் பக்கமாக நகரத்தொடங்கியிருந்தது. சரித்திர முக்கியத்துவம் (என்னோட வாழ்க்கைச் சரித்திரத்தச் சொன்னேன்!) கொண்ட குகைகளின் தேடல் தற்போது அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. எண்ணெய் படலம் வானவில் வர்ணங்களை கடல் நீரில் வரைந்துள்ளது. காதைக் கிழிக்கும் ஒலியுடன் கப்பல் ஒன்று எதிரே வருகிறது.

பார்க் அணு நிலையம் தரிசனம் தருகிறது. இடிந்தகரை ஜிந்தாபாத்!

படகு பல்வேறு வகைகளில் இருந்தாலும், தற்காப்பு ஏற்பாடுகள் துளியும் இல்லை நண்பர்களே. போகும்போது கையில் பாதுகாப்பு மிதவை உடைகள் வைத்திருந்தால் நல்லது.

மெலிதாக கடல் நீருக்குள்ளிருந்து எழுகிறது ஒரு யானை. எலிபெண்டா.

From Elephanta

தீவைச் சுற்றியும் சதுப்பாக இருப்பதைக் காண்கிறோம். மூச்சு முட்டிய வேர்கள் மேலே வளர்ந்து சேருக்கு மேலே நீட்டிக்கொண்டு சுவாசிக்கின்றன.

From Elephanta

ஒரு சிறிய படகுத்துறையில் இறங்கிவிடுகின்றனர்.

From Elephanta

“திரும்பிப் போகும் எந்தப் படகில வேணாலும் போய்க்கலாம்தானே?”

“ஆம்” என்கிறார் படகோட்டி.

கொஞ்சம் காரமான வெயில், பசிக்கும் வயிறு, தலை மயிர் பறக்கும் காற்று.

படகுத்துறையிலிருந்து கால் நடையாகப் போய்விணலாம். ஒரு குட்டி ரயில் குட்டிப் பசங்களுக்கு உள்ளது.

From Elephanta

மலையில் ஏறும் வழியின் இருபுறமும் பெட்டிக்கடைகள்-பானங்கள், தின்பண்டங்கள், மேப்புகள், கைவினைப்பொருட்கள்.

From Elephanta

மேலே வந்து, எதேச்சையாக வலதுபுறம் திரும்புகையில் மலைக்க வைக்கும் குகையின் வாசல் தெரிகிறது. பார்த்த முதல் கணத்தில் தொல்லியல் இடங்கள் உங்கள் உள்ளத்தைக் கவர்ந்துவிடும். மீண்டும் அந்த இடங்களுக்கு எத்தணை தடவை வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அந்த முதல் தோற்றம் மனதில் ஆழப் பதிந்துவிடும். முதலில் சித்தன்னவாசல் போனபோது 13 வயதிருக்கலாம், இன்னமும் சமணர் படுகையின் அன்றைய தோற்றத்தை ஒரு கனவுபோல என் நினைவுகள் பத்திரப்படுத்தி இருக்கின்றன.

From Elephanta

சொன்னால் நம்பனும் நண்பர்களே, அது குகை அல்ல. மாளிகை. திறந்து போட்ட, வாசலற்ற மாளிகை. இரண்டாள் மட்டம் உயரம். 27 மீட்டர் சதுர அறை. பருத்த தூண்கள், சதுரமாய் கீழே தொடங்கி, அலங்கார வளையங்களுடன் மேல் பாறையைத் தாங்குபவை.
Massive!

From Elephanta

ஒன்றாம் குகையின் வலது புறத்தில் உள்ள நடராஜர். சிதைந்துள்ளது. பெரியது. கண்களை மூடி மோன நிலை, ஆடலின் அசைவுகளைக் கல்லில் வடித்து, சிலை உயிரோட்டம் கொடுத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத சிற்பி. செஞ்சு முடிச்சதும் விரலை வெட்டினான்களோ, கையையே வாங்கிட்டான்களோ.
Lively!

From Elephanta

ஒரு கருவறை. வெளியே காவலுக்கு ரெண்டு துவாரபாலகர்கள். வஞ்சகமில்லாமல் வளர்ந்திருக்கிறார்கள்.

From Elephanta
From Elephanta

“அண்ணே, உங்கள போட்டோ எடுத்துக்கட்டுமா”

“என்ன போட்டோ எடுக்கவா இம்புட்டு தூரம் வந்தே, மூடா” துவாரபாலகர் சீறினார்.

“சர்வம் சிவமயம்ணே.”

“சரி சரி. என் டைம வேஸ்ட் பண்ணாம, சீக்கிரம் நகரு.”

உள்ளே சிவனார் தரிசனம்.

வலது பக்கம் அடுத்த காட்சி. அந்தகாசுரவத மூர்த்தி. கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, முகத்தில் போர் வீரனின் உக்கிரம்.

From Elephanta

குடைவறைகளில் பெரிய சிலைகள் நம்மூரிலும் இருக்கின்றன. யாரை உதாரணம் சொல்லலாம்னு யோசிச்சா இரண்டு பேர் உடனே மனதில் வந்து நிற்கின்றனர்.
1. சிவன் குடைவறையின் துவாரபாலகர்கள், திருமயம்.
2. பள்ளி கொண்ட பெருமாள், பெருமாள் குடைவறை, திருமயம்

சரி, அவற்றுக்கும் இவற்றுக்கும் அப்படி என்ன வித்தியாசம், எனக்குத் தோன்றியது, அலங்காரம். கல் அலங்காரம். சுழித்திருக்கும் கூந்தல், அலங்கார கிரீடம், உடை நளினம். இவற்றிலெல்லாம் அவர்கள் காட்டும் த்த்ரூபக் காட்சி details அபாரம். அதற்காக, நம்மூரைக் குறைத்து மதிப்பிடலாகுது நண்பர்களே. அந்த ஊரின் பாறை அப்படி. மென்மையானது. நம்மூர் பாறையில் எடுத்துத் தட்டினால்….? நங்ங்ங்ங்..

சிவனார் கல்யாணம்
மாப்பிள்ளை பெண்ணின் ஆளுயர சிற்பங்கள், அதில் உள்ள நளினம், வானில் மிதக்கும் தேவர்கள் அசத்தல் பேனல்!

From Elephanta

கங்காதர மூர்த்தி

From Elephanta

முன்னால் நிற்கும் ஆசாமியை வைத்து அவர் முன்னால் நிற்கும் சாமியின் உயரத்தை அளந்து கொள்ளவும். நண்பர்களே, நான் பிரமாண்டம், பிரமாண்டம் என பிதற்றியதை இப்போ உணந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒன்றாம் குகையின் பின்புற கருவறையில் உள்ள மகேஷமூர்த்தி சிவன் இவர். திரிமூர்த்தி என்று இவரை அழைக்கின்றனர்.

From Elephanta

மூன்று முகம் ரஜினிகாந்த் கணக்கா இருக்காரில்லையா, இடதுபக்கம் மீசையும் கோபமுமாக இருப்பவர் ருத்ரன். இவர் கோபம் உலகத்தை அழிக்கும். எரித்து சாம்பலாக்கும். பூசுறதுக்கு திருநீறுதான் மிஞ்சும்.

நடுவில ஜெண்டில்மேன் கணக்கா, மோனத்தில் ஆழ்ந்திருப்பவர் தத்புருஷர். உலகின் நன்மை தீமைகளின் சமநிலை கெடாமல் பாத்துப்பார்

இந்தப்பக்கமா இருப்பவர் யோகேஷ்வரர். உலக நன்மைக்காக ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
சத்யோஜதர், இஷானர் என இரு முகங்கள் பின்னாடி இருக்கும். பாக்கறவன் பாறையைப் பிளந்து பார்த்துக்கட்டும்னு சிற்பி நினைச்சிருக்காப்ள.
இவர்படம்தான் மகாராஷ்ட்ர சுற்றுலா கழகத்தின் இலச்சினையாக உள்ளது.

அர்த்தநாரீஸ்வரர்
திரிமூர்த்திக்கு கருறைக்குப் பக்கத்தில் உள்ள பேனல்

From Elephanta

மகாயோகி சிவன்
மலர் மேல் யோகநிலையில் அமர்ந்திருக்கும் யோகேஷ்வர சிவன்!

From Elephanta

சிவ பார்வதியின் தாயவிளையாட்டு!
மனைவியோடு விளையாடும்போது தோற்கனும். ஆனால் கல்லாட்டை ஆடி சிவன் ஜெயிப்பதால் கோபமுற்ற பார்வதி.

From Elephanta

கைலாசத்தைத் தூக்கும் ராவணன்
ஏம்பா. நான் எத்தணை நேரமா உன்ன கூப்டுட்டு இருக்கேன். இந்நேரம் என்னைக்கண்டுக்காம என்ன பன்ற. கயிலையையே தூக்கிய ராவணன்

From Elephanta

இந்த கருவறைக்கு துவாரபாலகர் இல்லீங்களா. அதனால இவரப் போட்ருக்கோம்

From Elephanta

கண் குளிர குகைக் காட்சிகள் சில

From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta
From Elephanta

அற்புதமான புடைப்புச் சிற்பங்கள் நண்பர்களே. வெகு நளினமான அலங்காரங்கள் கொண்டது. பார்வதி உட்கார்ந்திருக்கும் அழகாகட்டும், துவாரபாலகர்களின் சடைமுடி பாணியாகட்டும், திரிமூர்த்தி கொண்டிருக்கும் ஒரு ஓங்கார அமைதியாகட்டும், மலைக்கவைக்கும் பிரமாண்டம். மேற்கிந்திய கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் மிகச் சிறந்த உதாரணம் எலிஃபெண்டா.

ஆனால் மனம் வருந்தும் வகையில் சிற்பங்கள் அனைத்தும் அழிந்துள்ளது. மனித அழிவுகள், இயற்கை அழிவுகள். அது தவிற போர்த்துகீசியர்கள் துப்பாக்கி வைத்துச் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளதாக சில செய்திகள் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சிற்பங்கள் முழுமையாகக் கிடைத்திருந்தால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

முடிவடையாத ஒரு குகை

From Elephanta

முடிவடையாத குகைகள் ஒரு வெறுமையான உணர்வைத் தோற்றுவிக்கின்றன. முடிவடையாத முயற்சி, யாரோ ஒரு சிற்பிக் கூட்டத்தின் முடிக்கப்படாத செயல்திட்டம், முழுமையாக வெளி வராத கனவு. யார் கண்டார்கள், இந்த இடத்தில் இவ்வளவு பெரிய சிற்ப சாம்ராஜ்ஜியத்தை அமைத்த கூட்டத்தின் வீழ்ச்சியின் சாட்சியாகவும் இருக்கலாம்.

முடிவடையாத குகைகளை நிறைய பேர் குறிப்பிடுவதில்லை. எலிபெண்டாவிலும் சரி, அஜந்தாவிலும் சரி, இந்த முடிவடையாத குகைகள் எனக்குத் தந்த உணர்ச்சிகள் உக்கிரமானவை, விளக்கிச் சொல்ல முடியாதவை. வெரிச்சோடிப்போன வீட்டை நினைவு படுத்துபவை, ஆண்டு முடித்த சொத்தை நினைவு படுத்துபவை. ஒரு இனத்தின் வீழ்ச்சியை நினைவு படுத்துபவை. இந்த இடத்தின் வரலாற்றில் முடிவாகக்கூட இருக்கலாம். ‘இத்தோட நான் முடிந்துவிட்டேன்’ என்று அந்த இடம் எனக்குக் கூறுவதாக உணர்கிறேன்.

பீரங்கி மலை

அடர்ந்த கானகத்தின் ஒற்றைப் பாதை வழியாக மலையேறுகிறோம் நண்பர்களே

From Elephanta

மேலே ஏதோ பீரங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். வந்தது வந்தோம் கழுதை அதையும் பார்த்திட்டுப்போவோமே.

ஆனால் போகும் வழியில் அங்கங்கு காடு விலகி கடல் தெரியும் காட்சி, சட்டென்று மனத் தெளிவையும் மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடியது.

From Elephanta
From Elephanta
From Elephanta

மழை பெய்தால் இந்த மாதிரி பாதையில போகாம கம்முன்னு திரும்பி வந்திடனும். இல்லைன்னா நீங்கள் வழுக்கி கீழே விழ வாழைப்பழத் தோல் தேவையில்லை!!

 

இதுதான் நாம் வந்து இறங்கின படகுத்துறை.

From Elephanta

கடைசியாக மலை உச்சியில் பிரிட்டிஷ் கால பீரங்கி. சொல்வதற்கு ஏதும் பெரிசா இல்லை. திரும்பலாம்!

From Elephanta

தொல்லியல் துறையினர் குகைகளைச் சுற்றிப்பார்க்க நல்ல பாதையை அமைத்திருக்கின்றனர். கடகடவென கீழே இறங்கி வருகையில தாகம் வாட்டுகிறது. நீங்களாவது போகும்போது நிறைய தண்ணீர், சிறிய உணவு வகைகளைக் கொண்டு சொல்லுங்கள்.

பாதி மலை இறங்குகையில் ஒரு மராட்டிய அண்ணன் எழுமிச்சை ஜுஸ் வித்துட்டு இருந்தாப்ள.

“கித்னா ஹுயா பையா”

“தஸ் ருபீயே.”

“தஸ் ருபீயே!!??”

பதிலுக்கு ஏதோ சொல்றார் நமக்கு விளங்கலை.

“salt.. salt.. no sugar. ”

போட்டுக் கலக்கிக் கொடுக்கிறார். உள்ளே சகல கலர்களுடனும் தூசு துகள்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
நான் அதை மராட்டிய அண்ணனிடம் விசாரிக்கிறேன்.

“க்யா ஹுவா பையா?”

“மசாலா மசாலா!!”

பக்கத்தில் இன்னொரு கிளாஸ் எழுமிச்சை நீரை விழுங்கிக்கொண்டிருந்த பிரான்சுக்காரன் என்னைப் பார்த்து நகைத்தான்.

“என்னப் பாத்து எதுக்குவே சிரிக்கே? அங்க என்ன வாழுது? எப்டி இருக்கு உன் சூசூ?”

“Ha ha. too much sweeeeetttt!!” – அந்த ஸ்வீட் வார்த்தையைச் சொல்லும்போது அவன் குரல் கீச்சிடும் அளவிற்கு தொண்டையில் இனித்திருக்கிறது பாவம்!

அதுக்கு நம்ப பாடு எவ்வளவோ பரவாயில்ல என்று கிளாசைக் காலி செய்றோம்.நல்ல அண்ணன். ஒரே வாளியில் கிளாசைக் கழுவாமல், வெளியே கழுவி ஊத்தினார். இல்லைன்னா இதக்குடிக்கிற வெள்ளைக்காரன் அம்புட்டுப்பேருக்கும் வயிறு டரியல்தான்!!

From Elephanta

திரும்பிச் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே. திரும்பி படகை நோக்கி நடக்கையில் முதல் குகையை கடக்கிறோம். ஏதோ கண்கள் நம் மீது பதிவதாக உணர்கிறோம். உள்ளே அதே துவாரபாலகர் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தார்.

“எங்க அவரு?” – நான்.

வலதுகையை உயர்த்தி, ஒரு விரலால் உள்ளே சுட்டினார். முரட்டுத்தனமான அந்த முகத்தில் மந்தகாசம் ததும்பிக்கொண்டிருந்தது

ஜெய் ஹிந்த்!

குகைகளைத் தேடி


இந்தப் புத்தாண்டில் சூளுரைத்த அந்தப் பயணக்கட்டுரை இதுதான். வருசக்கணக்காக பெண்டிங்கில் உள்ளது. இது ஒரு சிறிய பயணம். இந்தியாவின் தவிர்க்க முடியாத மூன்று குகை குடைவறைகளைப் பற்றிப் பேசப்போகிறது இந்த சிறப்புத்தொடர். ‘அய்யோ, சிறப்புத் தொடராம்டா.. கொண்ருவாய்ங்கடா.. வாடா போயிரலாம்’னு பக்கத்தில இருக்கறவங்களையும் சேர்த்து இழுத்திட்டுப் போயிடக்கூடாது.

இந்தக் குகைக்கோயில்களைப் பற்றிய வரலாறு நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. எனவே இதில் கொஞ்சம் வரலாறு.. நிறைய கதை! ப்ரு காப்பியைப் போட்டுக்கிட்ட படிக்க உட்காரும் சகலகோடி வாசகர்களுக்கும் நன்றி. கீழ்கண்ட இடங்களுக்குப் போகனும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படிக்கலாம். ஏனென்றால் நான் செய்த தவறுகளையும் சொல்லப்போகிறேன். திருத்திக்கொண்டு நீங்கள் செல்லலாம்.

 • எலிஃபெண்டா
 • எல்லோரா
 • அஜந்தா

குகைக்கோயில்னா.. பெரிய விசியமோ?

பின்னே..! பெரிய விசியம்தான். முக்கியமாகத் தமிழர்களுக்குப் பெரிய விசியம்தான். தமிழகத்தில் குகைக்கோயில்களுக்குப் பஞ்சமில்லை. எங்கூரிலயே திருமயம், சித்தன்னவாசல், நார்த்தாமலை, மலையடிப்பட்டி  உள்ளன. பின்ன ஏன் அவற்றைப் பெரிசு என்று சொல்லனும்? அளவுதான் காரணம். நம்மூர் பாறைகளில் செதுக்கப்பட்ட குகைக்கோயில்கள் அதிக பட்சம் 10க்குப் 10 பெட்ரூம் அளவில் இருக்கலாம். (ஒரு பேச்சுக்குத்தாம்பா. டேப் எடுத்துட்டு வந்து யாரும் தர்க்கம் பண்ணக் கூடாது. வரலாறு எழுதும்போதே கெண்டக்கால் ரோமம் எல்லாம் நட்டுக்கொள்கிறதே!) பெரிய குகைக்கோயில்கள், அதுவும் ஒன்றல்ல, ரெண்டல்ல.. வரிசையா….. குகை. பிரம்மாண்ட குகை. அரண்மனை போன்ற குகை. மாடி வெச்ச குகை, ஓவியம் வரைந்த குகை, ஒளி புகாத குகை, சிற்பங்கள் நிறைந்த குகை….. இத்தணையும் ஒரே இடத்தில் கிடைப்பதென்றால்?

ஒரே வரியில் சொல்லனும்னா, நம்ம ஊர்ல உள்ளவை குகைக்கோயில்கள். மேலே சொன்ன மூன்றும் குகை அரண்மனைகள்!

அவை தவிற அவை கலைப் பொக்கிஷங்கள். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டவை. பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. ஆனால் என் துரதிர்ஷ்டம். எனக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நாள்தான் ஒதுக்க முடிந்தது.

அதற்காக நான் நம்ப குகைக் கோயில்களையோ ஒரு கல் சிற்பங்களையோ குறைத்து மதிப்பிட்டால், “மகாபலி” என்னை நரபலி கொண்டு விடுவார்!

2007 நவம்பர்

மும்பைக்குச் செல்ல அவசரம் அவசரமாய் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதிய செயல்திட்டம் கொண்டுவரும் வேலை. கொஞ்சம் கலக்கத்துடன் மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் கிளம்பி, வீடு வந்து உட்காரக்கூட நேரமின்றி சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து மூச்சு வாங்கிக்கொண்டேன். முதல் விமானப் பயணம். பட்டிக்காட்டானுக்குப் பல்லக்காட்டக்கூட மூடு இல்ல. பதபதைப்பு அனைத்தையும் விழுங்கிவிட்டது.  எனக்கு முன் போனவர்கள் என்ன செய்தார்களோ அதையே செய்ததும், ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும், பக்கத்தில் ஒரு மும்பை பெண் உட்கார்ந்ததும், மும்பை வரை கதையடித்ததும் இந்தக் கட்டுரைக்குச் சம்பந்தமில்லாத விசியங்கள்!

airsahara6ug

கதை தொடங்குவது, மும்பையிலிருந்து…

விமான நிலையத்தில் இறங்கி வெளியில் வரும்போது கொஞ்சம் பகீரென்ற உணர்வு வயிற்றைப் பிடிப்பது, நம் இந்திய விமான நிலையங்களுக்கே உண்டான ஒரு தனித்தன்மை. என்னவோ பாதுகாப்பு வளையத்திலிருந்து வலுக்கட்டாயமாக பிதுக்கித் தள்ளப்பட்டது போன்று. ஒரு பாதுகாப்பில்லாத உணர்வு வரும். இது மாதிரியான உணர்வு வரும் ஊர்களில் சுற்றுலா வளரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சரி, மும்பை – முதல் முறை, வெளியே கருப்பு மஞ்சள் டாக்சி. நான் வைத்திருந்த முகவரியைப் படித்துவிட்டு, ‘எனக்குத் தெரியும் போலாம்’ என்றார் ஓட்டுநர். என் நேரம். வெளியே விமான நிலையமே வெற்றுக்காடாய் இருந்தது. மணி இரவு 12க்கு மேல்! ஒழுங்காய் கொண்டு போவானா என்கிற பதைப்பு, நாளைய செயல்திட்ட சந்திப்பு எப்படி இருக்குமோ என்கிற உணர்வை விஞ்சியது.

மஞ்சக்காட்டு மைனா
மஞ்சக்காட்டு மைனா

‘என்னா இவன். இவ்ளோதூரம் கொண்டு போறான். மும்பைன்னு சொன்னானுக. இவன் அடுத்து குஜராத்ல கொண்டு போய் இறக்கிவிடுவான் போல. ஏம்பா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?’ ஏதோ இந்தியில் பதில் சொன்னான். மருந்துக்கும் புரியலை. அப்போதிருந்த மனநிலையில் மும்பையின் கும்மிருட்டும், டாக்சி முகப்பு விளக்கில் ஒளிரும் நெடுஞ்சாலை பலகைகளும் ரசிக்கும்படியாக இல்லை. இரவு 1 மணிக்கு அலுவலக விருந்தினர் விடுதியில் கொண்டு போய் இறக்கினார். நன்றி மிகுந்தவனானேன். உண்மையில் சாந்தாகுருசிலிருந்து போரிவளி 16 கிலோமீட்டர்!

அடுத்த ஓரிரு நாட்கள் அலுவலகத்திற்கு ஆட்டோவில் போனாலும், பேருந்து பிடித்துச் செல்லத் தொடங்கிவிட்டது நமது திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்புக் கொள்கைக்கு முரணானது. போ… ரி… வ… ளி… என்று எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அந்தோ பரிதாபம்! ஒரு முறை கிழக்கு போரிவளி பேருந்துக்குப் பதிலாக மேற்கு போரிவளி பேருந்தில் ஏறி பாதி வழியில் இறங்கி லொங்கு லொங்கினேன். இந்தி எதிர்ப்புக் கொள்கையுடன் திராவிட தலைவர் நகைத்திருப்பார்.

ஆனால் அங்கதான் திரைக்கதையில் ஒரு ‘டுஷ்டு’! லொங்கு லொங்குவின் நடுவில் ஒரு லோக்கல் டிராவல்ஸ் பார்க்க நேர்ந்தது. அதீத ஆவலுடன் மும்பை சவாரிக்கு முன்பதிவு செய்து கொண்டேன். வார இறுதிக்கான திட்டம் ரெடி!

முதல் சனிக்கிழமையில் மும்பை தரிசனம்.

இதைப் பற்றி விவரிப்பது தேவையில்லாதது. ‘இதா பாருப்பா. இதான் மெரீனா பீச்சு. கடல்லாம் இருக்கும்’ என்கிற ரகம்தான். ஆனால் ஊர் பழக வேறு வழியிருக்கவில்லை. போரிவளி கிழக்கில் துவங்கிய ஒரு டப்பா பேருந்து (இந்தியன் படத்தில FC போட வருமே அது மாதிரி பேருந்து), நேரே இந்தியா கேட்டில் இருந்து, சித்தி விநாயகர் கோயில், மகாலக்ஷ்மி மந்திர், மலபார் ஹில், வான்கடே ஸ்டேடியம், மரைன் டிரைவ், ஜுஹூ பீச்… இப்படி போனது. சக பயணிகளைப் பார்த்தபோது அன்பே சிவத்தில் கமலும் மாதவனும் ஒரிசா பார்டரைக் கடந்து வருவார்களே, அத்தகு மண் மணம்!

சுந்தரா டிராவல்ஸ்!
சுந்தரா டிராவல்ஸ்!

 

இந்தியா கேட்
“நீ ஒரு காதல் சங்கீதம்!”
அப்போதைக்கு கல்பனா சாவ்லா விபத்தில் இறந்ததில் உலகம் அதிர்ந்ததல்லவா. அனைவரும் அவரது panel இருக்கும் இடத்தில் நின்று செய்திகளைப் படித்தனர் (நேரு விக்ஞான் சென்டர் – அந்தூரு பிர்லா கோளரங்கு!)

பக்கத்தில் ஒரு குஜராத்தியன். சம வயதுடையவன். அறிமுகப்படுத்திக்கொண்டான். “தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தைப் பற்றிக்கொண்டு, தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறிவிட்டார்கள். இந்தி அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. வட இந்தியனைப் பார். இந்தியைக் கட்டி அழுதுகொண்டிருக்கிறான்” என்று அங்கலாய்த்தான்.

மகாலக்ஷ்மி மந்திரில் டீ குடிக்கையில், கோவை இளைஞர்கள் அறிமுகமானார்கள். ஹை.. பை!

ஜுஹுவில் மாலைச் சூரியன்
ஜுஹுவில் மாலைச் சூரியன்

இந்த சவாரியை முடித்துக்கொண்டு இரவில் படுக்கும்போது சிந்தையில் இருந்தது….. மாதுங்கா!

மாதுங்கா

இணையத்தில் உலாவி ஏற்கனவே மணி ஹோட்டலின் முகவரியைக் குறித்துக்கொண்டிருந்தேன். ஞாயிறு காலை குளித்து முடித்து சுத்தபத்தமாய் ரயிலேறிவிட்டேன். போரிவளியிலிருந்து நேரே சர்ச் கேட். அங்கிருந்து மத்திய ரயிலைப் பிடித்து மாதுங்கா வந்து இறங்கியிருந்தேன். இறங்கியதும் புரிந்தது…. ‘தத்தா நமர்‘. தமிழ் சினிமா பாடல்கள், சுவரொட்டிகள்.

“அண்ணே, மணி ஐயர் ஹோட்டல்.”

“ரைட்ல போய் முதல் லெப்ட்ல திரும்புங்க”

Mani's Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/
Mani’s Lunch Home. Photo (c) http://www.manislunchhome.in/

மும்பை போய் அப்படி ஒன்னும் என் நாக்கு செத்துவிடவில்லை. அலுவலகத்தில்தான் வரட்டிக்கு வர்ணம் அடித்தது போல் சாப்பாடு இருந்தது. மற்றபடி விருந்தினர் இல்லத்தில் நல்ல சாப்பாடு என்பதை அறையில் எதிரொலித்த என் ஏப்பம் சொன்னது! இருந்தாலும், நம்மூர் சாப்பாடுன்னா சும்மாவா. ஒரு பிடி பிடித்துவிட்டு, திரும்ப அறைக்கு வந்தபின்…… வேறென்ன.. தூக்கம்தான். அன்று மாலை முழுக்க, மாதுங்காவில் இருந்த நம்மூர் பூக்கடைகளும், சரமாகத் தொங்கி்க்கொண்டிருந்த ரோஜா மாலைகளும், சரசரவென பூக்களைக் கட்டிக்கொண்டிருந்த தமிழர்களும் மனதை நிரப்பியிருந்தனர். “வேலு நாயக்கர்” மட்டும்தான் மிஸ்ஸிங்!

வருவது ஒரு முறை. திரும்ப வருவது சந்தேகமே என்று மனம் மிக வேகமாகக் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் அடுத்த வாரம்…… திட்டம் வார நாட்களில் ரெடியாகியிருந்தது!

சந்திப்போம் நண்பர்களே!

தொடர்ச்சி –

 

அழகிய பள்ளி


நண்பர்களே,

பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்கு இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள ஒரு தொலைதூர கிராமம் (ரிமோட்டு வில்லேஜு)தான் இந்தப் பதிவில் பேசப்படுகிறது. அங்கே சமீப வருடங்களில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கின்றன. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்கிற காலம் மாறி, கோவில் வாசல் வரை இந்த வருடம் சாலை வசதி வந்திருக்கிறது. கோயில்களுக்கு அருகிலேயே தண்ணீர் வசதி இத்யாதிகள்.

வழக்கம்போல சாப்பாடு கட்டிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம். சாப்பிட ஒரு சரியான இடம் கிடைக்கவேண்டுமே. சிறு வயதில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு ஒரு நெடும் பயணமாக வந்து சேர்ந்தோம். வழியில் நீர் கிடைக்கும் குளம் மற்றும் ஊருணிகளில் சாப்பாட்டை முடித்துக்கொள்வது வாடிக்கை. இப்போதைக்கு அவை எல்லாம் இதமான நினைவுகளாகத் தேங்கி நிற்கின்றன. இப்ப மகிழுந்துகளில் 1 மணி நேரத்தில் சென்று சேர்ந்துவிட முடிகிறது. எனவே இப்ப ஊருக்குள் ஒரு நல்ல இடம் பார்த்து சாப்பிட வேண்டும் அல்லவா. அந்த இடத்தைப் பற்றிதான் இந்தப் பதிவு.

அந்த ஊருக்கான அரசினர் தொடக்கப்பள்ளி கட்டிடம் அது. சென்ற முறையும் இங்குதான் சாப்பாடு ஆனது. சிறிய பள்ளி என்றாலும் மிகச் சிறப்பான வசதிகள் அங்கே உண்டு.

குடிநீர்,

கழிவறை,

பள்ளி முழுக்க மரங்கள்,

சுத்தம்

இவை அனைத்தும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு மினி பாலைவனச் சோலையாக மாற்றிவிட்டது.

இது தானே நிகழாது. ஒரு பொறுப்பும், ஆர்வமும் நிறைந்த ஆசிரியராக இருக்கலாம், மாணவர்களாக இருக்கலாம். யாராக இருந்தாலும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அந்தப் பள்ளியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு

 

காபி - 18 ரூபாய்
காபி – 18 ரூபாய்

சென்னையிலிருந்து புதுகை செல்லும் வழியில், தங்கமணியின் விருப்பப்படி அதிகாலையில் திருச்சியில் காப்பி!! பில்லைப் பார்த்ததும் திடீல் என்று பிண்ணனியோசை கேட்டது. 18 ரூபாய்/காபி! நாட்டு நிலைமை அறிந்து கொள்ள அப்பப்ப உணவகங்களுக்குச் சென்று வரவேண்டும்.

 

உயிர் வேலி. இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியது இவை நடப்பட்டபோது நட்டவர்களின் எதிர்பார்ப்பையும் மனநிலையையும்தான்.
உயிர் வேலி. இங்கே நினைத்துப் பார்க்கவேண்டியது இவை நடப்பட்டபோது நட்டவர்களின் எதிர்பார்ப்பையும் மனநிலையையும்தான்.

கோடைகாலத்திற்கு நிழல் தரவேண்டும் என்பதற்காக புங்கை மரங்களை நட்டுள்ளார்கள் என்றார் சகோதரர்.

 

அவற்றைப் பாதுகாக்கவும், தண்ணீர் விட்டுக் காபந்து செய்யவும் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனம் எடுத்திருப்பார்கள். அவர்கள் முழு கவனம்தான் அந்த அழகிய நிழலையும் இனிமையான காற்றையும் தந்திருக்கிறது
அவற்றைப் பாதுகாக்கவும், தண்ணீர் விட்டுக் காபந்து செய்யவும் ஆசிரியர்களும், மாணவர்களும் கவனம் எடுத்திருப்பார்கள். அவர்கள் முழு கவனம்தான் அந்த அழகிய நிழலையும் இனிமையான காற்றையும் தந்திருக்கிறது

சுற்றிலும் வயல்வெளி இருந்தாலும் ஏனைய இடங்களில் அனல் பறக்கிறது. அந்த அனல் காற்றின் சீற்றத்தைத் தடுத்து இதமான தென்றலைத் தரும் இந்த மரங்களை வைத்தவர்களை எத்தணை பாராட்டினாலும் தகும்

 

பாம்பின் கால் பாம்பறியும். அதுமட்டுமல்ல, ஆசிரியரின் கால் ஆசிரியர் அறிவார் - என் சகோதரர்
பாம்பின் கால் பாம்பறியும். அதுமட்டுமல்ல, ஆசிரியரின் கால் ஆசிரியர் அறிவார் – என் சகோதரர்

முதலில் இந்த மர நிழலில் அமர்ந்து சாப்பிடத்தான் விரும்பினோம். துரதிருஷ்ட வசமாக மரங்களின்மேல் முசுடு ஊர்ந்து கொண்டிருக்க, அது ஏற்கனவே சுட்டிகளைத் தாக்கத் தொடங்கியிருக்க வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டோம்.

மைதானத்தின் சுத்தத்தையும், இந்த மரங்களை வைத்தவர்களையும் சிலாகித்துப் பேசினார் என் சகோதரர். அவரும் அரசுப் பள்ளியில் ஆசிரியரே. உண்டு முடித்ததும் இலைகளைத் தூரச்சென்று போடவேண்டும் என்று இடத்தின் சுத்தம் காத்தவர். “ஏம்பா.. அவ்ளோ நல்லவனா நீ!!”

 

சுட்டிகள்
சுட்டிகள்
சுட்டிகள்
சுட்டிகள்

பள்ளிக்கு விடுப்பு, விடுப்பில் பயணம், பயணத்தில் ஒரு காலைச்சாப்பாடு, சாப்பாடு முடிந்தவுடன் வரும் புத்துணர்ச்சியில் சுட்டி சகோதரர்கள்.

 

பள்ளியின் பின்புறம்
பள்ளியின் பின்புறம்
பள்ளியின் இடது புறம்
பள்ளியின் இடது புறம்

 

பள்ளியின் பின்புறம்
பள்ளியின் பின்புறம்

பள்ளியின் முன்புறம் மட்டுமல்ல. பின்புறமும், இன்னும் இடமிருக்கும் இடங்களில் எல்லாம் அழகான மர நிழல் காணப்படுகிறது.

வாழை, அலங்கார வாழை, தென்னை, வேம்பு. இவை எல்லாம் இருக்க நிழல் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

அதிகாலை மாமல்லபுரம் பயணம்


ஒரு சிறிய பயணத்தை அடுத்த நாள் காலையில் மேற்கொள்வது என்று முடிவானது.  எந்த இடம்?! முதல் கேள்வி. சிறுவாபுரி முருகன் கோயில் என்று முதலில் முடிவானது. அந்த தொலைவு போகும் அளவிற்கு பொறுமை இல்லை. நல்ல சாலைதான் ஆனால் தென்சென்னையிலிருந்து வட சென்னை எல்லையைத் தாண்டுவது என்பது எரிச்சலான காரியத்தில் ஒன்று.  முதல் நாள் இரவு அந்த திட்டம் மாறி கோவளம் பீச் என்று முடிவானது. புதிதாக வண்டி வாங்கி அலுவலகம் தவிற வேறு எங்கும் போகாத நிலையில் அதை ஒரு காரணமாக்கி கிளம்புவதற்கு கதை திரைக்கதை எல்லாம் எழுதியாச்சு.  அதோடு இந்த முறை என் இல்லத்தரசியாரும் மகனும் வருவதாக கூடத்தொற்றிக்கொள்ள ஏகமனதாக கோவளம் பீச் முடிவானது.

காலைப்பயணம் என்பது மனதிற்கு உகந்தது. சென்னையில் புழுக்க இரவின் கொடுமைக்கு ஒத்தடம் கொடுப்பதாய் அமையும் அந்த ஈரப்பதம் மிகுந்த காற்றும் மெலிதான வெளிச்சமும். எனவே கிழக்குக் கடற்கரைச் சாலை பயணம் என்பது காலைக்கே உகந்தது. இது ஏற்கனவே எழுதிய கதையிலும் கூறியுள்ளேன். எனவே அதிகாலை 4-15 மணிக்கே எழுந்து கடகடவென கிளம்புகையில் காலை மணி 4-55. வழிவிடு விநாயகர், பாடிகாட் முனீஸ்வரர் என்று தெய்வங்களை துதித்துவிட்டு வண்டியைக் கிளப்புகிறோம்.

இரு மணித்துளிகளில் அண்ணாசாலையை அடைந்து அங்கிருந்து வெகு விரைவில் பழைய மகாபலிபுரம் சாலையை அடைந்து அதிலேயே மிதமான வேகத்தில் பயணிக்கிறோம். பல கால் செண்டர் வண்டிகள் வழக்கமான வேகத்திலும் தூக்கத்திலும்!  கடந்த முறை போல் அல்லாமல் ஒரு நிகழ்வு நம் கவனத்தைக் கவர்கிறது. ஒரு சைக்கிள் குழுமம் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏதோ திட்டம் வகுத்துக்கொண்டுள்ளனர். ஆண் பெண் என்று மேலும் சில சைக்கிள் காரர்கள் ஏற்கனவே கிளம்பிவிட்டிருந்தனர். ஒளிரும் தலைக்கவசத்துடன் கடமையே கண்ணாக அவர்கள் சாலையில் விரைந்துகொண்டிருந்தனர். இந்தப் பயணம் முடியும் வரை அவர்கள் நம் உடன் பயணித்தனர்.

சிறுசேரியுடன் முடிவடையும் பகட்டான சென்னை பயணம், ஏழ்மையும் பகட்டும் கலந்த கேளம்பாக்கம் சாலையில் தொடர்கிறது. தொடர்மாடிக்குடியிருப்புகளும் அதன் ஊடே நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தோட்டங்களும்… காற்றுக்குப் பஞ்சமில்லை. அடுக்குமாடிக்குடியருப்புகளின் உயரத்தைக் காட்டுகையில் கூடவே பூகம்பத்தின் விளைவுகளை நியாபகம் வருகிறது என் மனைவியாருக்கு. என் கவலை தோட்டங்களின் மீது.

சூரியன் இன்னும் தலைகாட்டவில்லை என்றாலும் கிழக்கில் விடிவது கண்கூடாகத் தெரிகிறது. அந்தச் சமயம் நாம் கேளம்பாக்கத்தை அடைகிறோம். நேராக பயணத்தைத் தொடராமல் கோவளம் சாலையில் திருப்புகிறோம். பொதுவாக கிழக்குக் கடற்கரைச் சாலையுடன் இணைய மூன்று பிரதான வழிகள் – திருவான்மியூர், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர். இதில் கேளம்பாக்கம் கோவளம் சாலை சற்று கண்ணுக்குப் பசுமையாக இருக்கும். கருவைக் காடுகள் மற்றும் நீர்நிலைகள் இருப்பதால் இந்த சாலையைத்தான் கடந்த பயணத்திலும் தேர்ந்தெடுத்தோம். காற்று இன்னும் சில்லிப்பாய் இருக்கிறது. கொசு பூச்சிகள் அதிகமாக பறக்கின்றன. வந்தாச்சு கோவளம் சந்திப்பு.

நேரம் அதிகமில்லை. சூரிய உதயத்திற்கு கோவளத்திற்குப் போயிடலாம் என்றாலும் பயணத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்பது என்று மனைவியாருக்குத் தோன்றுகிறது. ஆச்சரியமில்லை. அந்த சாலை அது மாதிரி.  சரி சூரிய தரிசனத்தை போகும் வழியில் பெறலாம் என்று கி.க சாலையில் பயணத்தைத் தொடர்கிறோம். வண்டி ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடல் – நீர் கவசம் அணிந்த புல்வெளி – கடற்கரையிலிருந்து புறப்பட்டு வரம் வலிய சில் காற்று – வண்டியின் பக்கத்தில் ஆள் அரவம் இல்லாத ஒரு நெடுஞ்சாலை. வேறு என்ன வேண்டும்?!

50 அல்லது 55க்கு மேல் போகவில்லை. முக்கிய காரணம் இரண்டு பேரை கூட அள்ளிக்கொண்டு போனது. அத்துடன் புது வண்டியை 60க்கு மேல் முடுக்க இது நேரமும் இல்லை. சென்ற முறை இது மாதிரியான ஒரு இனிய பயணத்தில் பழைய வண்டியில் வைத்த ரெக்கார்டுதான் 109kmph. ஆனால் இப்ப முடியாதே! ஆனால் ஒரே சாலை – ஒரே வலைப்பதிவு – இரு மாதிரியான பயணங்கள்.

மீண்டும் பயணம் துவங்குகிறது. வழித்துணைக்கு இப்போது பைக்கர்கள் பறக்கிறார்கள். மாமல்லபுரம் எல்லைத் தொடுகையில் சிற்பக்கலைக்கூடங்கள் கண்ணில் படுகின்றன. வேறு என்ன. படம்தான்! ஏற்கனவே எழுதிய மலம்புழா பயணக்கட்டுரையில் சொன்னபடி 60க்குமேல் பயணிப்பது என்பது பயணத்தின் இனிமையைக் கெடுத்து விடலாம். என்னை விட என் உடன் வந்த சைக்கிள் காரர்கள் காலையின் இனிமையை முழுமையாகப் பருகியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. வேகத்தில் ஓட்டுவது என்பது ஒரு கைவந்த கலை. காலை வாறும் கலையாக மாறாதவரை இனிமையாகவே இருக்கும்.

1 மணி 45 நிமிட பயணம் அர்ச்சுனன் தபசில் முடிகிறது. நமக்கி முன்பே ஆந்திரா தமிழ்நாடு என்று பலதரப்பட்ட சுற்றுலா குழுவினர் மாமல்லபுரத்தை அலச ஆரம்பித்துவிட்டார்கள். நாமும் அலசுவோம்.

காலை நேரத்தில் இந்த மண்ணில் உட்காரத்தான் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

நல்லதொரு காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு 09-45 மணிக்குத் துவங்கும் நமது வீடு நோக்கிய பயணம் வழியில் முட்டுக்காட்டில் ஒரு படகு சவாரிக்குப் பிறகு 11-40க்கு முடிகிறது.

பை பை!

பயண தூரம்: 112 Kms
அதிகப்படியான வேகம்: 55 கிமீ/மணி (!)