எனக்கு இந்த சென்னை போன்ற மெட்ரோ நகர் மக்களைப் பற்றித்தெரியாது. ஆனால் சிற்றூர்கள் தொடங்கி நகரங்கள் வரை, வீடு என்று இருந்தால் தோட்டம் என்ற ஒன்று இருக்கும். தோட்டம் ஒரு பரந்து விரிந்த இடத்திலோ அல்லது ஒரு பெயிண்ட் டப்பாவிலோ இருக்கும். அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. சிறு வயதில் பட்ரோஸ் மீது எனக்கு ஒரு பெரிய காதலே உண்டு. அதன் கவர்ச்சி ததும்பும் ரோஸ் நிற பூவின் அழகிற்கு எதைக் கொடுத்தாலும் இணையாகாது என்கிற திமிர் பிடித்த [...]
Category: பழங்கதை
எங்க ஊரு… புதுக்கோட்டை
அரசு அலுவலர்கள் நிறைய, பெரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம், சொந்தத் தொழில் - சிறுதொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கொஞ்சம். இதுதான் புதுக்கோட்டை. பிறந்தது 30 கிலோமீட்டர் தள்ளி காரசூரான்பட்டி என்கிற கிராமம் (குடுமியாமலை அருகில்). 'மூணாப்பு' படிக்கையிலேயே புதுகைக்கு ஜாகை மாறினாலும் இன்னும் உள்ளுர அந்த கிராமத்துச் சிறுவனே நான். ஒவ்வொரு நாளும் என் பிறப்பிடம் பற்றி எண்ணாமல் இருந்ததே இல்லை (நிஜம்ங்க!). வெயில் வரட்சியாகட்டும், மழைச் சதுப்பிலாகட்டும் வெள்ளாறு, குளத்தங்கரை, வயல்காடு என்று டிபிகல் பாரதிராஜா படம் [...]
மை பேனா
புதிதாக இதற்கு மாறியிருக்கிறேன். மோகம் முப்பது நாள் முடிந்த பின் கைவிட்டு விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் இல்லை. அடுத்து என்ன வாங்கலாம்? கேமல் ஜியாமெட்ரி பாக்ஸ்?! பாண்டியன் Posted from WordPress for Android
மதுரை 10
கீச்சுலகில் தேன்சுவைக் கொய்யாப்பழங்களைக் கொண்டு மதுரையை நினைவு படுத்தியிருக்கிறார் மதிப்பிற்குரிய சொக்கன் அவர்கள். https://twitter.com/nchokkan/statuses/398630294246281216 மதுரை என்ற உடன் எனக்கு நினைவில் வரும் 10 விசியங்கள் பழைய அண்ணா நிலையத்தில் புதுகைக்கு பேருந்து ஏறும் தருணங்கள் டவுன்ஹால் ரோடு எலக்ட்ரானிக்ஸ் கடைகள் சரம்சரமான நெருக்கமான மல்லிச் சரம். மல்லிச்சரம் சுற்றிவைத்து நடுவில் ரோஜாப்பூ வைத்த வண்ணமிகு கூந்தல் அலங்காரங்கள் தெற்குவாசல் சாலையோர இட்லி, சட்னி, மசாலா பால்! மீன்கொடி பாண்டியன் எக்ஸ்பிரஸ் அழகர் மலை ரம்மியம் பிரேமா [...]
திருவரங்கம் நினைவுகள்
வீடு விட்டு வேறு இடம் எதையும் விரும்பாத வீட்டுப்புழுக்களில் நானும் ஒருவன். விதி வேறு மாதிரி விளையாடி பணி பணம் என்று தற்சமயம் சென்னையில் ஜாகை கொண்டாலும் சொந்த இடம் தேடிப்போகும் நாளுக்காக ஒவ்வொரு மணித்துளியும் காத்திருப்பவன். அதில் தவறு இல்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சக நண்பர்களுக்கும் அந்த நினைப்புகள் இருந்தவண்ணம் இருக்கின்றன என்பதே உண்மை. கொசுவத்தி சுத்துவது இருக்கட்டும். இந்தப் பழமை பதிவு திருவரங்கம் பற்றியது. கொஞ்சம் 18 வருடங்கள் பின்னால் செல்லலாம். பழங்கதைன்னா [...]