The year of tiger – Lunar new year 2022


தமிழ் மாதமான தை அல்லது ஆங்கில மாதமான பிப்ரவரியின் அமாவாசை இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் முக்கியமானது. பௌத்தர்களுக்கு இது புலி ஆண்டு தொடக்கம். 🐯 ஆண்டு நம் அனைவருக்கும் தைரியம், வீரம், வலிமை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். உங்கள் செல்வத்தைப் பெருகுக! 🍊🍊 ஸ்ரீ சிவதுர்கா கோயில், போத்தோங் பாசிர் | Sri Siva Durga Temple, Potong Pasir நான் நேற்று போத்தோங் பாசிரில் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கை கோயிலுக்குச் சென்றிருந்தேன். நமது அன்பான போதி [...]

பிரபல பதிவர் விடுப்பில் செல்வதால் பதட்டம்


கோடானு கோடி வாசகப் பெருங்குடி (சிறுகுடி, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி....) மக்களே, ஒரு செயல்திட்ட வேலைக்காக மூழ்கி முத்தெடுக்கப் போவதால் எதிர் வரும் சில மாதங்களுக்குப் பெரிசா பதிவுகள் வராது. (டேய். யாருடா அங்க சீட்டி அடிக்கிறது..) இத்தகு கடுமையான முடிவை எதிர்கொள்ள முடியாமல் யாரும் தீக்குளிக்கக் கூடாது. பால் வண்டி, குப்பை லாரிகள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது. இதுவும் மோடியின் சதி என்று புதிய கொலைமுறை மற்றும் தொந்தி டிவிக்கள் செய்தியைத் திரித்து மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தக்கூடாது. [...]

புத்தாண்டு நினை(றை)வுகள்


நண்பர்களே, கடந்த ஆண்டின் நினைவுகள் சுவையானவை. அவற்றை புத்தாண்டு அன்றைக்கே தொகுத்திருக்கலாம். எனது கெட்ட நேரம். உங்க நல்ல நேரம். அன்றைக்கு அலுவலகம் செல்லவேண்டியதா போயிற்று. ஆனா, கெரகம் சும்மா விடலை. இதோ இந்த ஆண்டு அறிக்கை. கடந்த ஆண்டில் எழுதியதை எடுத்துப் பார்த்தேன். அதற்குள் ஒரு வருடம் போயிற்றா என்று ஆச்சரியமாக உள்ளது. வீட்டுப் பக்கம் பள்ளி செல்லும் மாணவர் என்கிற தகுதியைப் பெற்ற எனது வாரிசு இந்த வருடம் அப்பன் இணையத்தில் ஆடுவது போதாது [...]

புத்தாண்டு வாழ்த்துக்கள்


சகலகோடி வாசகர்களுக்கும் (இப்படிக் கூப்பிட்டு எத்தணை நாளாகிறது!!!),சக பதிவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

விடுமுறையும் பிரிவுணர்வும்


ரொம்ப சீரியஸ் பதிவு என்று நினைத்து வந்தீர்களானால் சாரீ. சரி, கோடானுகோடி வாசகப் பெருமக்களே! (ம்ம்... சரி மேல) காலையில் எழுவது, விரைவுப் பறவை (early bird:))யாக பணியைத் தொடங்குவதென்பது புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் அதற்கு விரைவில் எழ வேண்டுமே. காலையில் 6 மணிக்கு எழுந்தாலே, 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா என்ன'ங்கிற நினைப்பு வரத்தானே செய்யும். அந்த சமயத்தில் பக்கத்து தொடக்கப்பள்ளியிலிருந்து கியா மியாவென எழும் வாண்டுகளின் சத்தம் வேறு மாதிரி என் காதில் விழும். [...]