[மீள்பதிவு] The Portrait of a Lady! – குஷ்வந்த் சிங்


ஒரு பெண்மணியின் பிரதிபிம்பம்! - குஷ்வந்த் சிங் (மொழி பெயர்ப்பு ஆசிரியரின் விபரம் இப்பதிவின் இறுதியில் உள்ளது) என்னுடைய பாட்டி எல்லோரையும் போல ஒரு வயதான பெண் தான். அவருடைய மூப்பும் முகச் சுருக்கங்களும் எனக்கு இருபது வருடங்களாகப் பரிச்சயம். சிறு வயதில் அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் அவருக்கு ஒரு கம்பீரமான கணவர் உண்டு என்றும் பலர் கூறக்  கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கமுடியுமா?  என்ற கேள்வி எனக்குள் எழும் போதெல்லாம் சிரிப்புத்தான் வரும். நம்ப முடியவில்லை. [...]

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 3


படிப்படியாக நான் எனது புது வாழ்க்கையில் செட்டில் ஆனேன். தேவியின் (பார்க்க பகுதி 2) உதவியுடன் நான் ஒரு வீட்டைக் கண்டடைந்தேன். பூனை பிராண்டும் தூண் ஒன்றை பக்கத்திலிருந்த பிராணிகள் கடையிலிருந்து வாங்கினேன். வர்ணம் பூசப்பட்ட ஜாவானிய கேபினெட் ஒன்று வாங்கினேன். என் மகனை ஆங்கிலம், சீனம் மற்றும் பாஸா இந்தோனேசியா ஆகிய மொழிகளைக் கற்றுத்தரும் மும்மொழிப் பள்ளியில் சேர்த்தேன். கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் [...]

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 2


ஜகார்த்தாவைக் கண்டுணர்தல் ஜகார்த்தாவிற்கு நான் குடி பெயர்ந்தது திட்டமிடப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பான ஒன்றாக இருந்தது. என் கணவர் ஜுலியோவிற்கு, ப்ரஸ்ஸல்ஸில் 3 வருட பணிக்குப் பிறகு ஜகார்த்தாவில் ஐரோப்பிய யூனியன் குழுவில் வேலை கொடுக்கப்பட்டது. நாங்கள் அதைப்பற்றி பேசி ஒத்துக்கொண்டோம், ஏனென்றால் இந்தோனேசியாவைப் பற்றி நாங்கள் கொஞ்சம் அறிந்திருந்தோம். இது ஒரு நல்ல வாய்ப்பாக எங்களுக்குத் தோன்றியது.  அது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு. அந்த நாடு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டதை விட முக்கியமானதாகவும் ஆர்வத்தைத் [...]

இந்தியாவும் இந்தோனேசியாவும் – 1


Forget China, India Should Look towards Indonesia என்று பல்லவி அய்யர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மூலக்கட்டுரை - https://in.news.yahoo.com/forget-china--india-should-look-towards-indonesia-060805127.html கட்டுரைத் தொடர் இந்தியாவும் இந்தோனேசியாவும் - 1 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 2 இந்தியாவும் இந்தோனேசியாவும் - 3 https://twitter.com/pallaviaiyar/statuses/486086832245837824 https://www.facebook.com/paliaiyar/posts/679153808805997 (முடிந்த வரை எளிமைப்படுத்தி உள்ளேன். பொருள் மயக்கம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். - பாண்டியன்) பொதுவாக இந்தியர்கள் பலரும் ஒரே கருத்தைக் கொண்டவர்கள் அல்லர். ஆனாலும் இந்தியாவின் "தனித்தன்மை" என்கிற நம்பிக்கையில் [...]