Mercedes Benz B Class Tourer Vehicle இந்தியாவில் அறிமுகம்


Mercedes-Benz India கடந்த வாரம் தனது பி-கிளாஸ் ஸ்போர்ட்ஸ் டூரர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஸ்போர்ட்ஸ் டூரிங் என்பது உலகிற்குப் புதிதல்ல. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் விற்பனை இயக்குநர் டெபஷிஸ் சொல்வது போல இந்தியாவிற்குமே புதிதல்ல. ராயல் என்பீல்டு தன் வாடிக்கையாளர்களுடன் இமயமலையை முற்றுகை இடுகிறது. http://www.xkmph.com http://www.bcmtouring.com போன்ற தளங்களில் பைக்கர்கள் வெளுத்து வாங்குகிறார்கள். கார்களில் ஊர் சுற்றும் வாலிபர்களும் இங்கு வந்து சலம்பாமல் இருப்பதில்லை. அவர்களைக் குறிவைத்துதான் இந்த புதிய கார் வெளியிடப்பட்டுள்ளதாக [...]

பேஜியோ வெஸ்பா LX125 ஸ்கூட்டர்


வெஸ்பா ஸ்கூட்டர் திரும்ப இந்திய ரோடுகளை ஆக்கிரமிக்க வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஸ்கூட்டர் ரேஸ் வெகு பிரமாதமாக நடக்கிறது - நடக்க இருக்கிறது நம்ப ஊரில். ஏற்கனவே யமஹா ரே ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ரேசில் கலந்து கொண்டுள்ளது. 18 முதல் 24 வயதுள்ள பெண்களை வளைத்துப்போட அந்த அழகு ஸ்கூட்டர் சதித்திட்டம் தீட்டி உள்ளது. பார்த்துக்கொண்டிருப்பாரா இந்தாலி பேஜியோ? அந்தக் காலத்திலேயே இந்திய ரோட்டின் பல்ஸ் பார்த்தவராயிற்றே. பெண்கள் மனம் கவரும் பல வண்டிகளை வெஸ்பா LX125 [...]

ரே – யமஹாவின் ஸ்கூட்டர் அறிமுகம்


இந்தியாவில் யமஹா சற்று அழுத்தம் திருத்தமாக சில மாறுதல்களை ஏற்படுத்துகிறது. ஸ்கூட்டர் வழக்கொழிந்துவிட்டது என்று நினைக்கையில் பஜாஜ் சன்னி ரோடுகளில் வலம் வர பிறகு டிவிஎஸ் ஸ்கூட்டி - ஹோண்டா ஆக்டிவா என்று விரிந்த ஸ்கூட்டர் மார்க்கெட் வெகு விரைவில் இளம் வயதினரை - குறிப்பாக கல்லூரி மற்றும் அலுவலகம் விரையும் இளம் பெண்களை வளைத்துக் கொண்டது. தற்சமயம் ஹோண்டா, டிவிஎஸ், ஹீரோ, மஹிந்திரா, என்று கடும் போட்டி நிலவுகிறது. 44ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கும் ஸ்கூட்டர்கள் பலதரப்பட்ட மாடல்களில் [...]

Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம்


சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும். YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி [...]

ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் சீன கூட்டு


ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் Shanghai Automotive Industry Corporation (SAIC)  உடன் இணைந்து இந்திய மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான கமெர்சியல் வாகனங்களை  வடிவமைக்கவும்  தயாரிக்கவும் உள்ளார்கள்.  இதன்மூலம் ஜெனரல் மோட்டாருக்கு மினி கமெர்சியல் வாகனங்களின் பரிச்சயம் கிடைக்கும், அத்தோடு அதன் வாகனங்கள் சீனாவிற்கும் அறிமுகமாகும். பெருகி வரும் தேவை. அத்தோடு அன்னியர் படையெடுப்பு. ரோடு போட யாராவது வாங்கப்பா. அட்லீஸ்ட் இருக்கிற ரோடுக்கு பக்கத்தில ரெண்டு செடியாவது நட்டுவெச்சிட்டுப்போங்க!