இன்று எங்களுக்கு முழுநேர பவர் கட். இருந்தா மட்டும் என்ன வாழப்போகுது. அக்னி நட்சத்திரத்தில் பவர்கட்டின் உச்சத்தை எதிர்க்க விரும்பாத நான் குடும்ப சகிதம் Express Avenue Mallல் சென்று செட்டில் ஆனோம். அதன் உள்ளே எஸ்கேப் சினிமாவில் டிக்கட் ஏதும் கிடைக்காத பட்சத்தில் பக்கத்தில் இருந்த 5டி சினிமா என் மனைவியாரின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே அங்கே சென்றிருக்கிறோம். ரொம்ப நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதால் அப்போது தவிர்த்துவிட்டோம். இன்றைக்கு வீட்டுக்காரம்மாவே சென்று டிக்கட் வாங்கிவந்துவிட்டதால் [...]
Category: Coimbatore
இறைவடிவங்களுடன் ஒரு மாலைப்பொழுது
பேரூர் நாட்டியாஞ்சலியில் நடைபெற்ற பத்மஸ்ரீ மாதவி முத்கல் அவர்களின் நாட்டிய நிகழ்வினைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் [http://bxbybz.wordpress.com/2009/10/10/perur-natyanjali-2009-odissi-performance-by-madhavi-mudgal/]. சென்றவாரம் இந்துவின் மெட்ரோப்ளசில் அதனைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. பார்க்க.. http://www.hindu.com/mp/2009/10/15/stories/2009101550300100.htm
அல்லி அல்லி தீபாவளி
பண்டிகை என்றால் மனம் கொண்டாடும்தானே. அதும் தீபாவளி என்றால் இன்னும் கொஞ்சம் சேர்ந்தாடும். சமீப காலங்களில் பொங்கல் கொண்டாடுவோர் எண்ணிக்கையைவிட தீபாவளி கொண்டாடுவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதானே வருகிறது. சென்னையில் இருந்த வரை தீபாவளி பயண பரபரப்பு மூன்று மாதங்களுக்கு முன்பே, டிக்கட் எடுப்பதில் இருந்து, தொடங்கிவிடும். கோவை வந்த பிறகு அந்த பரபரப்பு சற்று குறைவு. கோயம்பேடு, எழும்பூர் என்பன மாறி, தற்சமயம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என்பது கூட்டம் இல்லாததாகத் தோன்றியது. நிற்க. திருச்சி மதுரை [...]
Perur natyanjali 2009 – final day celebration – paper cuttings
நேற்றைய தினம் பேரூர் பட்டீசுவரர் சன்னதியில் நடைபெற்ற, நாட்டியாஞ்சலி நிறைவு விழாவினைப் பற்றி எழுதியிருந்தேன். இன்றைய தினசரியில் ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன. சிதம்பரம் மற்றும் சென்னையில் கிடைப்பது போன்ற பத்திரிகைகளில் ஆதரவு பேரூர் நாட்டியாஞ்சலிக்குக் கிடைக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஊடகங்கள் மனது வைத்தால்தான் இத்தகு நிகழ்வுகள் மக்களின் கவனத்திற்குப் போய் சேரும்.
Perur natyanjali 2009 – final day celebration
கோவை, பேரூர் நாட்டியவிழா இன்றுடன் இனிதே நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று கோவையைச் சேர்ந்த கலைஞர் ஒருவரின் பரதநாட்டியம், சென்னை நடன பள்ளி ஒன்று நடத்திய அறுபடை வீடு நாட்டிய நாடகம் மற்றும் இறுதியாக பெங்களூர் ஸ்ரீஹரி-சேத்னா குழவினரின் கதக் நடனமும் நடைபெற்றது. கோவை கலைஞர் கச்சேரி சுமார் ரகம். பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டார். என்றாலும் தெளிவான தமிழில் உச்சரித்து விளக்கிய விதம் அருமை. விநாயகர் சிறப்பு, சிவபெருமான் நடனக் காட்சிகளை வழங்கினார். பரதநாட்டியமும் நாட்டிய [...]