இன்று நம் பயணத்திட்டத்தின் இறுதி நாள். காலி | Galle காலியில் நாங்கள் தங்கிய விடுதி அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. கடற்கரையைப் பார்க்க இயலவில்லை. வாகனம் நிறுத்த வசதி இல்லை. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. குளிர் சாதனம் நேரக்கருவி (timer) வேலை செய்யவில்லை. உணவு மற்றும் பணியாளர்கள் விடுப்பில் சென்றுவிட்டிருந்தனர். நாங்கள் தங்கின அறை வசதியானது. மற்றும் சுத்தமானது. காலி சாலைக்கு அருகில் வசதியாக அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சுற்றி பயணம் செய்யும் போது நீங்கள் [...]
Category: touring
வர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்!
முழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன. பயண ஆயத்தம் எலிஃபெண்டா எல்லோரா பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம் [...]
சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2
குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது இரண்டாம் சனி - எலிஃபெண்டா தீவு இரண்டாம் ஞாயிறு - ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது) மூன்றாம் சனி - எல்லோரா மூன்றாம் ஞாயிறு - அஜந்தா பயண [...]
குகைகளைத் தேடி
இந்தப் புத்தாண்டில் சூளுரைத்த அந்தப் பயணக்கட்டுரை இதுதான். வருசக்கணக்காக பெண்டிங்கில் உள்ளது. இது ஒரு சிறிய பயணம். இந்தியாவின் தவிர்க்க முடியாத மூன்று குகை குடைவறைகளைப் பற்றிப் பேசப்போகிறது இந்த சிறப்புத்தொடர். 'அய்யோ, சிறப்புத் தொடராம்டா.. கொண்ருவாய்ங்கடா.. வாடா போயிரலாம்'னு பக்கத்தில இருக்கறவங்களையும் சேர்த்து இழுத்திட்டுப் போயிடக்கூடாது. இந்தக் குகைக்கோயில்களைப் பற்றிய வரலாறு நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை. எனவே இதில் கொஞ்சம் வரலாறு.. நிறைய கதை! ப்ரு காப்பியைப் போட்டுக்கிட்ட படிக்க உட்காரும் சகலகோடி வாசகர்களுக்கும் [...]
அழகிய பள்ளி
நண்பர்களே, பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்கு இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள [...]