உனக்கு என்ன பைத்தியமா?


"உனக்கு என்ன பைத்தியமா?" "அப்டி போறதுன்னா ஒரு கார் எடுத்துக்க, இல்லைன்னா பஸ்ஸில போ.. மோட்ரு பைக் ரொம்ப ரிஸ்கி.." மோட்டார் சைக்கிளில் டூரிங் செல்லுவதாய் நீங்கள் கூறினால், இதுதான் சக நண்பர்கள், உறவினர்களின் பதிலாய் இருக்கும். கார், பஸ், தொடர்வண்டி எல்லாம் சொகுசுதான். பயண நிமிட பிரச்சினைகளில் இருந்து நாம் பாதுகாக்கப் படுகிறோம். அதிக அயற்சி இல்லாமல் போய் சேரலாம். மோட்டார் சைக்கிளில் போனால் இதெல்லாம் கிடைக்காது. பஸ், கார், ரயில் போன்ற பயணங்களில் தொடர்ச்சியாக [...]

chennai – mahabalipuram – ECR Touring


அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய  (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]