- தெரியாததை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாததைப் பகிரமாட்டோம்
- சமூகவலையில் எதைப் பகிர்கிறோம் என்பதில் கவனம் கொள்ளுவோம்
- நாம் எப்படி நடத்தப்படவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே அடுத்தவரையும் நடத்துவோம்
- உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத Linkகளுக்கப் போகமாட்டோம்
- யார் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்று அறிய இயலாது. Privacy settingகளை சரியாக அமைத்துக் கொள்வோம். தேவையற்ற மூன்றாம் நபர் கண்காணிப்பை நிராகரிப்போம்.
- யார் எதைச் சொல்கிறார்கள்? ஏன் நீங்கள் நம்பவேண்டும்? அது கருத்தா அல்லது அரை உண்மையா? உண்மைகள் என்ன? பார்ப்பதை நம்புவதில் புத்திசாலித்தனமாக இருப்போம்
- நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நமது சார்பு என்ன என்பதை அறிவோம். அடுத்தவர் பார்வைக்கு நமது கவனத்தைத் திறந்தே வைத்திருப்போம்
- இணையம் அழியாத சாட்சி. இன்றைய நமது பகிர்வு நாளைய தலைவலி ஆகலாம். பகிரும் முன்னர் யோசிப்போம்.
- இது உண்மையா? இது பிறருக்கு உதவுமா? இது அவசியமானதா? இது கனிவாக உள்ளதா?
- ஒத்துக்கொள்வதோ நிராகரிப்பதோ வேறு. பிறரை இழிவு படுத்துவதோ தனிநபர் தாக்குதலில் ஈடுபடவோ தேவையில்லை.
- இணையத்தில் சக்தியை நல்லதிற்குப் பயன்படுத்துவோம். உதவிகரமான சுற்றத்தை உருவாக்குவோம். ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்.
- ஒவ்வொரு வினைக்கும் சரியான எதிர்வினை உண்டு. பதிவிடும் முன் யோசிப்போம்.
- உண்மை இல்லையா, அதைச் சொல்லாதிருப்போம். தவறா? அதை எதிர்த்து நிற்போம்.
(மொழி பெயர்ப்பு – பாதுகாப்பான இணையம் 2015)