வெண்முரசின் துரியோதனன்


வெண்முரசின் இந்திர நீலம் நாவல் 92 அத்தியாயங்கள் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு இந்த வாரம் நிறைவடைந்துள்ளது. ஏற்கனவே வந்த நாவல் நீலம் கிருஷ்ணன், ராதை, கம்சன், வசுதேவர் ஆளுமைகளைக் காட்டியது. உள்ளே புகுந்து கொள்ள சற்று நம்மை ஆசுவசுப்படுத்திக்கொள்ள வேண்டி வந்தது. இந்திர நீலமும் கிருஷ்ணனைப் பற்றியதுதான் என்றாலும் இதன் பார்வைக் கோணம் என்பது வேறு. துவாரகை நகரம் - எழுச்சியும் தோற்றமும் துவாரகையின் வணிகம் துவாரகையின் அரசியல் அரசியலும் காதலும் கலந்த 8 திருமணங்கள் - பெண் [...]

சப்தமாதரும் பாமாவும் – வெண்முரசு கன்னித் தெய்வங்கள் – 2


பாரத கதை பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆம். பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். என் நண்பரிடத்தில், என் மனைவியிடத்தில், என் மேலாளரிடத்தில். அவ்வளவு ஏன். உங்களிடத்தில் கூட. வெண்முரசு தரும் வீச்சு அத்தகையது. நீலம் நாவல் கிருஷ்ணனுக்கானது என்றார் ஜெயமோகன். எழுதியும் நீல தாகம் தீரவில்லை போலிருக்கிறது. இந்திர நீலமும் நீலனைப் பற்றியே பேசி கிறங்கடிக்கிறது. நீலனுக்காக உருகினாள் ராதா. இங்கே நீலனை இயக்குகிறாள் பாமா. சரி தலைப்புக்கு வருவோம். வெண்முரசின் கன்னித் தெய்வங்கள் வரிசையின் இரண்டாவது பதிவு இது [...]