உச்சி வெயில்


வருசம் பொறந்தப்ப பதிவு போட்டது. ஒரு மாசம் பூறா நாம பதிவு போடலைங்கிறதப் பொறுக்க முடியாம என்னோடு கோடானுகோடி வாசகர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட்டு வருவதைத் தடுப்பதற்காக இந்தப் பதிவு. உச்சி வெயில் - செங்காங் நூலகத்தில இருந்து இரவல் வாங்கி வந்தேன். மொத்தம் நான்கு கதைகள். குறு நாவல் என்கிறார்கள். அது எல்லாம் நமக்கு ஏன். நாவலைப் பற்றிய முழுப் பார்வை உச்சி வெயில் பக்கத்தில் உள்ளது. குடும்பத்தை மீறி கல்யாணம் செய்து, [...]