நான்கு பக்க படக்கதைகள்


வணக்கம் நண்பர்களே, நான் இப்பொழுது படக்கதைகளைப் பற்றி எழுதப்போகிறேன். இந்தப் புத்தகங்கள் எல்லாம் என் பெரியப்பா கொடுத்தது. அதில் 9 புத்தகங்கள் இருந்தன. செல்வியின் ஓவியம் பூரி மசால் முட்டாள் சேவல் ராஜாவின் பல்வலி புறா புறா ஓடிவா! ட்ரிங் ட்ரிங் வெட்டலாம் நெய்யலாம் இபுன் பதூதா பென்சில் ரப்பர்   இதில் வரும் பென்சில், ரப்பர், டீச்சர், மாலு, வாசு, பாபு, ராஜா, எலி, சிங்கம், ரம்யா, ராணி, சேவல், இபுன் பதூதா எல்லாரையும் எனக்குப் [...]

ரிச்சர்ட் பிரான்ஸன் – என். சொக்கன்


விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனரும் பல்தொழில் முனைவோருமான ரிச்சர்ட் பிரான்ஸன் பற்றிய  விறுவிறுப்பான கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். திருச்சியில் பல்லவனில் எடுத்தால் செங்கல்பட்டு தாண்டும் முன் முடித்துவிடலாம். பக்கங்களின் எண்ணிக்கையும் அப்படி (200), உள்ளே உள்ள விருவிருப்பும் அப்படி. ரிச்சர்ட் பிரான்ஸன் - என். சொக்கன் சிக்ஸ்த் சென்ஸ், 2013 NLBயில் முன்பதிவு செய்ய - Riccarṭ pirān̲san̲ / En̲. Cokkan̲. கன்னிமாரா முன்பதிவு செய்ய - காணோம்! பிரிவு: புனைவல்லாதவை, வாழ்க்கை வரலாறு, மார்க்கெட்டிங் [...]

குழந்தைகளுக்கான இரண்டு நூல்கள்


குழந்தைகளுக்கான இரண்டு நூல்களை அறிமுகப்படுத்துவதில் கடைசி பெஞ்ச் அர்ப்பாட்டமும் ஆணவமும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடைகிறது. My Mother's Sari எங்க பேட்டை நூலகத்தில் Just returned பிரிவில் பொதுவாக விதவிதமான ஆங்கிலப்புத்தகங்கள் இருக்கும். நமக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள உறவை நம்மிடம் ஆங்கிலம் பேசும் எவரும் அறிந்து கொள்ளமுடியும். இந்த காரணத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. என்னவோ இந்திய ஆசிரியர் போன்று தெரிகிறதே என்று ஒரு குழந்தைகள் புத்தகத்தை எடுத்தப் பார்க்கையில், உடனே புன்னகையை [...]

குஷ்வந்த் சிங் – வாழ்வெல்லாம் புன்னகை | என். சொக்கன்


குஷ்வந்த் சிங் யார்? ஏன் அவரைச் சுற்றி இத்தணை சர்ச்சைகள்? அவர் ஒரு ஹாஸ்ய எழுத்தாளரா? செக்ஸ் எழுத்தாளரா? மெய்யாலுமே அந்தாளு அப்படித்தானோ? அப்டி என்னதான் எழுதறாருன்னு அவர் புத்தகம் இந்தப் போடு போடுது..? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் சொல்வது மாதிரி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் curtain raiser இந்த நூல். குஷ்வந்த் சிங் இறந்ததற்கு இரங்கல் பதிவு போட்டிருந்தார் மதிப்பிற்குரிய பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்கள் தன் பதிலுரைகளில் குஷ்வந்த் சிங்கின் Train to Pakistan [...]

மிட்டாய் கதைகள் – கலீல் கிப்ரான்


ஒரு மானிடன் இறந்து போனான். தர்ம தீர்ப்புக்காக எமலோகத்தில் எமதர்மராஜன் முன்பு நிற்கிறான். அவனுடைய நியாய தர்ம விவகாரங்கள் பேசிக்கொண்டிருந்த போது எமதர்ம அவையின் பக்கத்தில் நிறைய விளக்குகள் (கிரிக்கெட் கிரவுண்ட்ல நைட்டு போடுவாங்களே அது மாதிரி) இருப்பதைப் பார்க்கிறான் நம்ப மானிடன். 'இந்த விளக்குகள் எதுக்காக இங்க வெச்சிருக்கீங்க' அப்டின்னு எமனைப் பார்த்துக் கேட்கிறான். 'பூலோகத்தில் யாராவது ஒருவன் பொய் சொன்னால், இதில் ஒரு விளக்கு எரியும்' என்கிறான் எமன். திடீரென அனைத்து விளக்குகளும் ஒரே [...]