34 குகைகள் – எல்லோரா – குகைகளைத்தேடி 3


நீண்ட இடைவெளி. விடுப்பில் தாயகம் சென்று சுற்றி திரும்ப வந்து 10 நாளாகியும் நூல்களிலோ, வலைப்பதிவிலோ நாட்டம் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்றால் திரும்ப மனதை ஒருமுகப்படுத்துவது பெரிய சிக்கலாகிவிடுகிறது. இந்தத் தொடர்பதிவை முடிக்கவேண்டும். 'எங்க ஊரு..' தொடர்பதிவிற்கு சக பதிவர் ரஞ்சனி நாராயணன் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தருக்கிறார். அதையும் எழுதவேண்டும். (இன்னுமா எழுதலை என்று அவர் கையில் கிடைத்ததை எடுத்து கடாசும் முன்னர் எழுது முடித்துவிடுவேன்) இந்தப் பயணக்கட்டுரையின் முந்தைய இரண்டு பதிவுகளை்ப பார்க்க.. [...]