"ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?" என்று கேட்டான் துரைக்கண்ணு, "இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்.... எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. 'அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்'னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே." "ஆனா சாமி கும்பிடுறியே.." என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு. "எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்" [...]