கண்டியிலிருந்து நுவரெலியா


இரண்டாம் நாளுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். உள்ளே செல்லலாம் வாருங்கள். முந்தைய பாகங்கள் சென்னையிலிருந்து கண்டி   கண்டியில் தொடங்குகிறேன். நாங்கள் கண்டி ஏரிக் கரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கினோம். அங்கு எப்பொழுதும் Buffet முறையில் காலை உணவு தரப்படும். ஈஸ்டர் சண்டே குண்டு வெடிப்பு நடந்து சிறு மாதங்களுக்குள் சென்றதால் அங்கு சுற்றுலா துறை மிக சரிந்து இருந்தது. விடுதி உணவகத்தில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அங்கு காலையில் எங்களுக்கு [...]

சென்னையிலிருந்து கண்டி


சென்னையிலிருந்து கண்டி - முதல் நாள் - ஜுன் 5, 2019. சிங்கையிலிருந்து சென்னை சென்று சென்னையிலிருந்து, காலை முதல் விமானத்தில், கொழும்பிற்குச் செல்வதாக திட்டம். சூரிய உதயத்திற்கு முன்னரே, சென்னை வானூர்தி நிலையத்தை அடைந்தோம். காலையில் எழுந்து அன்றைய பணிகளைத் தொடர ஆயத்தமாகி இருந்தது. சீருந்துப் பயணம் ஒவ்வாமையினால், இறங்கியதுமே தம்பி ராம் கார்த்திக் வாயுமிழ்ந்தான். அதைப் பார்த்துவிட்டு, அருகில் சஃபாரி அணிந்து நின்றிருந்த ஒரு பெரியவர் எங்களிடம் பரிவுடன் தண்ணீர் தந்து உதவினார். அதிகக் [...]