கன்னியாகுமரி – ஜெயமோகன்


ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறேன். -ஜெயமோகன் - (ஒரு வாசகர் கடிதத்தில்) கிளுகிளுப்பாகத் தொடங்கியது கன்னியாகுமரி. மலையாளத் திரைப்படத்தில் ஒரு ஹிட்டு கொடுத்து அதன் பிறகு தோல்விப் படங்களைக் கொடுத்து, இன்னுமொரு வெற்றிப் படம் இல்லையென்றால் சினிமா கலை வாழ்க்கை அழிந்து போகும் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் ரவிதான் [...]