யாருக்காக அழுதான் । ஜெயகாந்தன்


திருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று. ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே [...]