நாவல்

ரப்பர் – ஜெயமோகன்


பிறகு காடே ரப்பரால் நிறைந்தது. வாழைத் தோட்டங்கள் வெட்டிச் சரிக்கப்பட்டன. அங்கெல்லாம் மாமிச வாடையுடன் ரப்பர் மரங்கள் தளிர்த்தன. மனித அருகாமையையும் பராமரிப்பையும் அன்பையும் வேண்டாத மரம் அது. இன்று காடுகள் இல்லை. மலைச்சரிவு முழுக்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை இலை சலசலக்க சருகு மெத்தை மீது, அணி அணியாக ரப்பர் மரங்கள் நாகரீகம் செழிக்க அவை காடுகளில் நின்று ரத்தம் சொட்டுகின்றன. அவற்றின் உடல் முழுக்க ரத்தக் காயங்கள். கருகின காயங்கள். வடுக்கள், தடங்கள் நகரத்தின்… Continue reading ரப்பர் – ஜெயமோகன்

Advertisements
நாவல்

கன்னியாகுமரி – ஜெயமோகன்


ஆண் பெண் இருவருடைய உளவியலிலும் இரு வகையான தீமைகள் அவர்களின் இயல்பிலேயே கலந்து உள்ளன. அவர்களின் ஆக்கத்திலேயே உறைபவை அவை. ஆணின் இயல்பான தீமையை கன்னியாகுமரி நாவலில் ஓரளவு சித்தரிக்க முயன்றிருக்கிறேன். -ஜெயமோகன் - (ஒரு வாசகர் கடிதத்தில்) கிளுகிளுப்பாகத் தொடங்கியது கன்னியாகுமரி. மலையாளத் திரைப்படத்தில் ஒரு ஹிட்டு கொடுத்து அதன் பிறகு தோல்விப் படங்களைக் கொடுத்து, இன்னுமொரு வெற்றிப் படம் இல்லையென்றால் சினிமா கலை வாழ்க்கை அழிந்து போகும் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் ரவிதான்… Continue reading கன்னியாகுமரி – ஜெயமோகன்

நாவல்

குருதிப்புனல்


ஒரு கொடூர சம்பவத்தை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழவெண்மணி கிராமத்தில் தலித் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தாக்கப்பட்டு ஒரே குடிசையில் வைத்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். அந்த சம்பவத்தில் ஆசிரியரின் மனதை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது இந்த நாவல். குருதிப்புனல் ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி பதிப்பு: கவிதா பப்ளிகேஷன், முதல் பதிப்பு ஜூன் 2013 ISBN: 978-81-8345-334-9 பிரிவு: புனைவு… Continue reading குருதிப்புனல்

குறுநாவல்

உச்சி வெயில்


வருசம் பொறந்தப்ப பதிவு போட்டது. ஒரு மாசம் பூறா நாம பதிவு போடலைங்கிறதப் பொறுக்க முடியாம என்னோடு கோடானுகோடி வாசகர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிட்டு வருவதைத் தடுப்பதற்காக இந்தப் பதிவு. உச்சி வெயில் - செங்காங் நூலகத்தில இருந்து இரவல் வாங்கி வந்தேன். மொத்தம் நான்கு கதைகள். குறு நாவல் என்கிறார்கள். அது எல்லாம் நமக்கு ஏன். நாவலைப் பற்றிய முழுப் பார்வை உச்சி வெயில் பக்கத்தில் உள்ளது. குடும்பத்தை மீறி கல்யாணம் செய்து,… Continue reading உச்சி வெயில்