தொழிலுக்கு வந்தனை செய்வோம் | ஆர் நட்ராஜ்


சோஷலிசம் என்ற,பொதுவுடமை சமவுடமை இரண்டு இடங்களில்தான் சாத்தியம்- ஒன்று சொர்கத்தில், அங்கு அது தேவையில்லை, இன்னொன்று நரகத்தில் அங்கு அது ஏற்கெனவே உள்ளது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பார் மேனாள் அமரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன்! இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் நாற்பது ஆண்டுகளில் சோஷலிச கொள்கையில் சிக்கி பல நிலைகளில் பொருளாதார முன்னேற்றம் புரையோடி நலிவுற்று முடங்கிய நிலையில் இருந்தது. நீா்பாசனம், மின்சார உற்பத்தி என பல்நோக்கு பயனளிப்பு திட்டங்கள், பிரம்மாண்ட அணைகள், கனிமள பெருக்கத்திற்கு சுரங்கங்கள் [...]