பயணம்

சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்


அஜந்தா முடிந்த கையோடு, நம்ப ஊரைப் பற்றி நினைவு படுத்தியே ஆகனும் அல்லவா. அதற்காக இந்தப் பழைய பதிவு.. புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள். பாறைகளில் இருந்து எடுக்கப்படுபவை. பிற பச்சிலைநிறங்கள். ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. கூரை ஓவியத்தில் ஒரு தாமரைத்தடாகம் . சமணமுனிவர் தாமரைமலர்களை கொய்கிறார். யானை ஒன்று நீரில் நிற்கிறது கிறது. முதலைகள் மீன்கள். ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம், மிகச்சிறப்பான அணிகள் கொண்ட மணிமுடிகள் போன்றவை… Continue reading சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்

Advertisements
பயணம், travelog

வர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்!


முழுக்க முழுக்க சிலைகள் மற்றும் அலங்காரங்கள் நிறைந்த குகைகளை இதற்கு முந்தைய பதிவுகள் காண்பித்தன. பயண ஆயத்தம் எலிஃபெண்டா எல்லோரா பயணத்திற்கு முத்தாய்ப்பாக இறுதி நாளில் அமைந்தது அஜந்தா பயணம். ஊருக்குள் போவதற்கு முன்னாடி ஒரு அறிமுகம் கொடுத்தாகவேண்டும். உங்களை மாதிரி ஒரு பெரியவர் சொல்லி நான் கேட்ட அறிமுகம் இது. பழங்கால இந்திய ஓவியங்கள் என்று பார்த்தோமானால் நமக்கு பெரிய சான்றுகள் கிடையாது. இலங்கையின் சிகிரியா ஓவியங்கள் 5 ஆம் நூற்றாண்டு, சித்தன்னவாசல் ஓவியம் 7ஆம்… Continue reading வர்ணமலைக்குடைவு – அஜந்தா – குகைகளைத்தேடி – சுபம்!

பயணம்

34 குகைகள் – எல்லோரா – குகைகளைத்தேடி 3


நீண்ட இடைவெளி. விடுப்பில் தாயகம் சென்று சுற்றி திரும்ப வந்து 10 நாளாகியும் நூல்களிலோ, வலைப்பதிவிலோ நாட்டம் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்றால் திரும்ப மனதை ஒருமுகப்படுத்துவது பெரிய சிக்கலாகிவிடுகிறது. இந்தத் தொடர்பதிவை முடிக்கவேண்டும். 'எங்க ஊரு..' தொடர்பதிவிற்கு சக பதிவர் ரஞ்சனி நாராயணன் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்தருக்கிறார். அதையும் எழுதவேண்டும். (இன்னுமா எழுதலை என்று அவர் கையில் கிடைத்ததை எடுத்து கடாசும் முன்னர் எழுது முடித்துவிடுவேன்) இந்தப் பயணக்கட்டுரையின் முந்தைய இரண்டு பதிவுகளை்ப பார்க்க..… Continue reading 34 குகைகள் – எல்லோரா – குகைகளைத்தேடி 3

இந்தியா, பயணம், travelog

சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2


குகைகளைத்தேடி என்று தலைப்பு போட்டுவிட்டு குகையைப் பத்தியே பேசக்காணோமே என்று மனைவியார் குறைப்பட்டுக்கொண்டார். ஆனால் குகைகளுக்கான தேடல் உண்மையில் அடுத்த வாரத்தின் வார நாட்களில்தான் நடைபெற்றது. இருக்கும் நேரம், பயண தூரம் அடிப்படையில் சில நிகழ்தகவுகளின் அடிப்படையில் பின்வரும் இடங்களுக்கு எளிதாகப் போகலாம் என்று பட்டது இரண்டாம் சனி - எலிஃபெண்டா தீவு இரண்டாம் ஞாயிறு - ஜோகேஷ்வரி குகை (தங்குமிடத்திற்குப் பக்கத்தில் இருந்தது) மூன்றாம் சனி - எல்லோரா மூன்றாம் ஞாயிறு - அஜந்தா பயண… Continue reading சிவன்மலைத்தீவு – எலிபெண்டா – குகைகளைத்தேடி 2

பயணம்

சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்


சித்தன்னவாசல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அந்த மாவட்டத்தின் தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றதும் இந்த இடம்தான். இங்கே அழியும் தருவாயில் உள்ள பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும். அவை மட்டுமின்றி, ஏகப்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமணமும் புதுக்கோட்டையும் பொதுவாக புதுக்கோட்டை… Continue reading சித்தன்னவாசல் – (சு)சிற்றுலா செல்வீர்