The year of tiger – Lunar new year 2022


தமிழ் மாதமான தை அல்லது ஆங்கில மாதமான பிப்ரவரியின் அமாவாசை இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் முக்கியமானது. பௌத்தர்களுக்கு இது புலி ஆண்டு தொடக்கம். 🐯 ஆண்டு நம் அனைவருக்கும் தைரியம், வீரம், வலிமை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும். உங்கள் செல்வத்தைப் பெருகுக! 🍊🍊 ஸ்ரீ சிவதுர்கா கோயில், போத்தோங் பாசிர் | Sri Siva Durga Temple, Potong Pasir நான் நேற்று போத்தோங் பாசிரில் உள்ள ஸ்ரீ சிவ துர்க்கை கோயிலுக்குச் சென்றிருந்தேன். நமது அன்பான போதி [...]

கோனி தீவு


நான்கு நாள் தொடர் விடுப்பு வருவதென்பது, காவிரியில் நீர் வருவது போன்று அரிது. அதிலும் இரண்டு நாட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தால், நானே குடும்பத்திற்கு ஒரு சுமையாகிப் போய்விடுகிறேன். சிங்கை தேசீய நாள் மற்றும் பக்ரீத் விடுமுறையின் மூன்றாவது நாளை இழக்க விரும்பாமல், மக்களை எங்காவது அழைத்துக்கொண்டு போனால் என்ன என்று தோன்றியது. உடன் பணிபுரிபுரியும் நண்பர் நெடு நாட்கள் முன்னரே கூறியிருந்தார். மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்லத்தான் நேரம் கூடிவிரவில்லை. இதை விட வேறு நன்னேரம் வருமா என்ன? [...]

சுதந்திர தின நிகழ்வுகள் – படங்கள் சொல்லும் கதைகள்


(இந்தப் பதிவு முழுக்க படங்களாலும், சமூகவலை பதிவுகளாலும் ஆனது என்பதால் மின்னஞசலில் பார்க்கும் நண்பர்களுக்கும், RSS ஓடை வழி பார்க்கும் நண்பர்களுக்கும் முழுதாக தெரியாமல் போகலாம்) எந்த ஒரு நாடும் நான் இப்படித்தான் என்கிற சமிஞ்ஞைகளை தன் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக சிங்கையை எடுத்துக்கொண்டால், நான் உங்களை எவ்வளவு வசதியாக வைத்துக்கொண்டுள்ளோம்; பிற அண்டை நாடுகளில் எப்படி அடிப்படை  வசதிகள் கூட இல்லை என்று திரும்ப திரும்ப மக்களுக்குச் சொல்லிக்கொண்டே உள்ளது. நான் [...]

கல்கத்தாவின் புத்த மதப் பொக்கிஷங்கள் சிங்கப்பூரில் – விரைக!


கோடானு கோடி வாசகப் பெருங்குடி மக்களே!!! ஆசியாவின் பழமையான அருங்காட்சியகத்தின் பொக்கிஷங்கள்: கல்கத்தா அருங்காட்சியகத்திலிருந்து புத்தமத கலை அம்சங்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளன. நண்பர் நேற்று மாலை அழைத்துச் சென்றார். குகைகளைத் தேடிய பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியது. https://www.facebook.com/kadaisibench/photos/a.1573619632923855.1073741829.1374905046128649/1606532889632529/?type=1&permPage=1 காந்தாரக் கலை மற்றும் பாலப் பேரரசின் எழில் மிகுந்த போதிசத்வர் மற்றும் புத்தர் சிற்பங்களைக் காணும் வாய்ப்பைத் தவற விட்டுவிடாதீர். ஜாதகக் கதைகளைச் சொல்லும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள், புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் புத்தமத சின்னங்கள் [...]

கோடை கால பயணமும் விமான அரசியலும்


கடந்த கோடைகாலப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்தவாறே இந்த வருட தாய்நாட்டுப் பயணம் தொடங்கியது. வெறுமனே பயணக்கதையைச் சொல்வதால் உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. எனவே நான் அறிந்த இன்னொரு செய்தியையும் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன். 2014க்கான எனது பயணத்தைப் பதியவே இல்லை. சரி போகட்டும். 2013க்கான பயண ஒளிப்படங்கள் இங்கு உள்ளன அழகிய பள்ளி வருடா வருடம் இந்தப் பயணம்தான் மனதை கார்ப்பரேட் உலகில் இருந்து மனிதர் உலகிற்கு மாற்றிவிடுகிறது. சற்றேனும் தளிர் இலைகள் வந்தால்தானே [...]