இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்


பதிவர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳. கொடியேற்றப் போகாவிட்டாலும் பரவாயில்லை. டிவியில் அடங்கிக் கிடக்காதீர் என்கிற வசனத்துடன், இன்றைய ஆகஸ்ட் 15 தொடங்குகிறது. காலையில் கொடியேற்றம். மாலையில் பல் டாக்டர் அப்பாயிண்மெண்ட். சுதந்திர தினப் பதிவிற்காகக் காத்திருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்கள் 🙄 சற்று காத்திருங்கள்.

சுதந்திர தின நிகழ்வுகள் – படங்கள் சொல்லும் கதைகள்


(இந்தப் பதிவு முழுக்க படங்களாலும், சமூகவலை பதிவுகளாலும் ஆனது என்பதால் மின்னஞசலில் பார்க்கும் நண்பர்களுக்கும், RSS ஓடை வழி பார்க்கும் நண்பர்களுக்கும் முழுதாக தெரியாமல் போகலாம்) எந்த ஒரு நாடும் நான் இப்படித்தான் என்கிற சமிஞ்ஞைகளை தன் நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக சிங்கையை எடுத்துக்கொண்டால், நான் உங்களை எவ்வளவு வசதியாக வைத்துக்கொண்டுள்ளோம்; பிற அண்டை நாடுகளில் எப்படி அடிப்படை  வசதிகள் கூட இல்லை என்று திரும்ப திரும்ப மக்களுக்குச் சொல்லிக்கொண்டே உள்ளது. நான் [...]

அன்னைக்கு வயதோ 69. இன்றைக்கும் தோற்றமோ 19.


"எல்லாரும் இந்தியாவுக்கு ஓடி வந்தோம். மைக்கேலுக்கு நல்ல காயம். இவரை நான் முதுகுலே தூக்கிக் கிட்டேன். மம்மாவும் தலையில ஒரு பெரிய மூட்டையைத் தூக்கிக்கிட்டாங்க. எங்களை மாதிரி எவ்வளவோ பேர்.. ரயில், குட்ஸ், வண்டி, நடை எப்படியெல்லாமோ.. உயிர் பொழைச்சால் போதும்னு மனுஷங்க ஓடறப்போ அவன் எவ்வளவு நல்லவனா, அடக்கமானவனா, நெறைஞச அன்பு உள்ளவனா இருக்கான் தெரியுமா...!" "........ அப்பாடான்னு மூச்சு விட்டோம். அவ்வளவுதான்... மறுபடியும் குண்டு விழுந்தது." "... மைக்கேல் அந்த நிலையிலே கூட உன்னைக் [...]

சுதந்திர தின விழா காட்சிகள்


நண்பர்களே, மோதி அரசு வந்தாலும் வந்தது. சுதந்திர தின விழாவுக்குப் போனால் கூட இந்துத்துவ முத்திரை குத்திவிடுகிறார்கள். காங்கிரஸ் அரசு அமைந்த போதும் சரி, மோதி அரசு அமைந்த போதும் சரி. என்னைப் போன்ற சராசரி பொது ஜனத்திற்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் பாவம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பா.ஜ ஆதரவாளர்கள் கத்தியதை விட பா.ஜ அரசு அமைந்ததை மாதசார்பின்மை வாதிகள் மற்றும் பகுத்தறிவு வாதிகளால் சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை. அத்தோட கூடுதலாக இந்திய ஜனநாயக எதிர்ப்புவாதிகள்.. [...]