சுதந்திர தின வாழ்த்துக்கள்


உங்கள் பிள்ளைகளின் பள்ளிகள், அருகில் உள்ள அரசு அலுவலகங்களின் கொடியேற்று விழாவில் கலந்து கொள்ளுங்கள். பொதுவாகவே இந்தியர்கள் நாம் நம்மை என்றுமே தாழ்வாக மதிப்பிடுபவர்கள். அதிலிருந்து மீள முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். அரசு நம் எதிர்பார்ப்பை நிஜமாக்குவதில் தாமதமாக்கலாம். அதற்காக நாம் அப்போது அமைந்திருக்கும் அரசுகளைக் குறை கூறலாம். உண்மையை உணர்பவர்கள், இந்திய சுதந்திரம் தினசரி சச்சரவுகளிலிருந்து வேறுபட்டது என்பதை அறிவார்கள். நீங்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், உலகில் இன்னமும் தன்னை காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கும்போதிலும் மக்களாட்சியை மக்களாட்சியாகவே நடத்தும் [...]