எரிபொருள் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க வழி சொல்லுங்க


பெட்ரோல் விலை உயர்வு பயத்தில் புலம்பும் உங்களுடன் நானும் சேர இந்தப் பதிவு. படுத்துவது யார்? பெட்ரோலா? அரசா? பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம் என்பது பல கட்டங்களையும் பாதிப்பதால் வலுவாய்ந்த அரசியல் ஒன்று எப்போதுமே அதை மையம் கொண்டிருக்கிறது. எண்ணைய் நிறுவனங்களின் வருமானம் - மத்திய மாநில அரசுகளின் வரிவருமானம் - தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்து வருமானம் - என்று பாடாய் படுத்தும் இந்த அரக்கனுக்கு புதிதாக ஒரு கொம்பினை வளர்த்து விட்டிருக்கிறது தனக்கான குழியைதானே [...]