மியான்மர் மற்றும் தாய்வான் தேர்தல் – சில சுவாரசியமான ஒற்றுமைகள்


போன வருடம் மியான்மர் தேர்தல் முடிந்தது. போன மாதம் தாய்வான் தேர்தல் முடிந்தது. ஆசியாவின் இந்த முக்கியமான தேர்தல்கள் உங்களைப்போன்ற உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்துள்ளது. உங்களைப் போலவே நானும் ஆர்வமாக இருந்தேன். பிள்ளையார் சுழி தாய்வான் தேர்தலில் எதிர் கட்சிக்கான முதல் பெரிய வெற்றி இது. ஒட்டு மொத்த ஸ்வீப்!   மியான்மர் தேர்தலில் 60களில் ராணுவ ஆட்சி கைக்குப் போன பிறகு முதன் முறையாக ஒரு ஜனநாயக அரசு நடந்துள்ளது.   பெரியண்ணன் சீனா [...]

நீரிணை ராணி – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 5


தாய்வானில் பாலின தடையை தாண்டிய முதல் பெண் மட்டும் அல்ல - ஆசிய கண்டத்தில் அரசியல்வாதிகளின் பரம்பரைகளில் வராத ஒரு பெண் வாகை சூடியிருக்கிறார் என்றால் அவர் தாய்வானின் அடுத்த ஜனாதிபதி ஸாய் இங்-வென் தான் என்று புகழாரம் சூட்டி உள்ளன. ஆசிய நாரிஷக்தி! ஆசியாவின் பெரிய பதவிகளைப் பெற்ற பெண்கள் யாரென்று பார்ப்போமே. சிரிமாவோ பண்டாரநாயகே, இலங்கை - 1916-2000 இந்திரா (காந்தி), இந்தியா - 1917-1984 கோல்டா மேயர், இஸ்ரேல் - 1898-1978 கொரோஸோன் [...]

அய்யா ஊட்ல இல்ல – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 4


ஸாங் இங்-வென் இடம் பதவியைப் பறிகொடுத்த தற்போதைய ஜனாதிபதி மா யிங்-ஜியுவைப் பற்றி ருசிகரமான தகவல் உலா வருகிறது. திங்கள் கிழமை காலை குளிருக்கு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு பிரதமர் மாவோ ச்சி-குவோ இல்லத்திற்குப் போய் தேவுடு காத்துள்ளார் மா யிங். 5 நிமிடம் வெளியே நின்றும் பிரதமர் வரவில்லை. பிரதமரின் மனைவிதான் வந்துள்ளார். 'அய்யாவுக்கு ஒடம்பு சொகமில்லை' என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. 'இந்தாப்பா.. நீ போயிட்டு அப்புறமா வா' என்பது மாதிரி உள்ளே விடாமல் துரத்திவிட்டதாகக் [...]

என்னது சுதந்திரமா. தெரிச்சிப் போயிரும் – தாய்வான் தேர்தல் சிறப்புப் பதிவு 3


க்ளீன் ஸ்வீப். தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக ஸாய் இங்-வென் வென்றுள்ளார். இந்தப் பெரு வெற்றியை சீனாவிற்குக் கிடைத்த அடியாக உலகம் பார்க்கிறது. தாய்வானின் சுருக்கமான வரலாறையும், பாப் பாடகி மற்றும் மிஸ் தாய்வான் போன்ற சர்ச்சைகளையும், ஸாய்யின் வெற்றி உரையையும் முன்னர் எழுதிய பதிவுகளில் பார்த்தோம். அந்தப் பொம்மனாட்டி ஜெயிச்சாலும் ஒரு 'கேசமு'ம் மாறப்போவதில்லை. தாய்வான் எங்களது ஆளுகைக்குட்பட்டது என்று சீனா அறிவித்துள்ளது. பெரிய வெற்றி பெற்ற மிதப்பில் சுதந்திரதைப் பெற முயலலாம் என்று பிரம்மையில் [...]

பாப் பாடகியும் அழகு ராணியும்- Taiwan Election 2


தாய்வான் கொடியை ஒரு ஒளிபரப்பில் வைத்திருந்ததன் காரணமாக பதின்ம வயது தாய்வானிய பாடகி ச்சௌ த்ஸுயு பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம். தாய்வானிய தேசீயம் என்பது பிரதான நிலம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சீனாவால் எதிர்க்கப்படுவது வரலாறு. தேர்தல் நெருங்கிய சமயத்தில் இப்படி ஒரு சிறுபெண் இரும்பு மனிதர்களின் மூக்கிற்குள் புகுந்து தும்மல் வர வைத்து வைத்திருக்கிறார். விடுவாரா வஸ்தாது? நேரே வந்து குடிமியைப் பிடித்துவிட்டார். விளைவு. பகிரங்க மன்னிப்புக் கடிதத்தை இறுகிய முகத்துடன் [...]