அன்னை – கிரேஸியா டெலடா


ஏன்? ஏசுவே ஏன்? கேள்வியை முடிக்கக் கூட அவளுக்குத் துணிவு வரவில்லை. கிணற்றுக்குள் கிடக்கும் கல்லைப் போல, இதயத்தின் அடியில் கிடந்தது அது. ஏசுவே, ஒரு பெண்ணைக் காதலிக்க  அவள் பாலுக்கு ஏன் இந்தத் தடை? காதல் எல்லோருக்கும் உரிமை. வேலையாட்கள், இடையர்கள், குருடர்கள், சிறையில் கிடக்கும் குற்றவாளிகள் யாருக்கும் அது உரிமை. அவள் குழந்தை பால் ஒருவனுக்குத்தானா அந்த உரிமை கிடையாது? அன்னை - கிரேஸியா டெலடா மொழி பெயர்ப்பு - தி ஜானகிராமன் பதிப்பு [...]