உள்ளமே உலகம் – தென்கச்சி கோ. சுவாமிநாதன்


அவர் ஒரு துறவி. கடுமையான விரதங்களை மேற்கொண்டிருப்பவர். ஆதவன் உதயமான பிறகு ஆகாரம் எதையும் தொடுவதில்லை அவர். தண்ணீர் கூடப் பருகமாட்டார். அவரது நெறி தவறாத தன்மையைப் போற்றும் வகையில் ஆகாயத்தில் ஒரு விண்மீண் தோன்றியது. அதுவும் பகல் நேரத்தில்.   அத்தகு சிறப்பு வாய்ந்த அந்தத் துறவி ஒரு நாள் புறப்பட்டார். அருகில் இருந்த மலையின் உச்சிக்கு அவர் போகவேண்டியிருந்தது. அவ்வூரில் இருந்த சிறுமி ஒருத்தி, தானும் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள். "சரி [...]