அழகிய பள்ளி


நண்பர்களே, பசங்களுக்கு கோடை விடுப்பு விட்டாச்சு. அவர்களுக்கு வீட்டில் இருப்பதென்றால் வேப்பங்காயாய் கசக்கிறது. ஏதாவது ஒரு கேசை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாக அலசும் சிபிஐ போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கழட்டிப்போட்ட 3 கால் சைக்கிளாக இருக்கலாம், ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் கணினியின் கீபோர்டாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த பரபரப்புச் சூழலுக்கு இடையே ஊருக்குச் சென்று குலதெய்வத்துக்கு ஒரு சல்யூட்டை வைத்திட்டு வந்திடலாம் என்று இந்த வார இறுதியில் கிளம்பிவிட்டோம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள [...]